Friday, November 5, 2010

த.த.ஜ. = தமிழ்நாடு தறுதலை ஜமாஅத்?

ஒப்பற்ற ஓரிறையின் திருப்பெயரால்...

உணர்வில் வெளியான, பீஜே தீவிரவாதியா?
கடந்த 25 ஆண்டுகளாக இஸ்லாம் ஒரு இனியமார்க்கம் நிகழ்ச்சி நடத்துவதின் மூலம், தீவிரவாதிகளையும் தீவிரவாதத்தையும் கடுமையாக எதிர்த்து வருகிறார். இதனால் பல இஸ்லாமிய அமைப்புகளின் பகைமையை பெற்று அவரது பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது.


என்ற பாராவை எடுத்தெழுதி, அண்ணனின் தீவிரவாத எதிர்ப்பு பிரச்சாரத்தால், இஸ்லாமிய அமைப்புகளின் பகைமையை சம்பாதித்துள்ளார் என்று கூறுகிறீர்களே? அப்படியாயின் இஸ்லாமிய அமைப்புகள் தீவிரவாத அமைப்புகளா? அதில் அங்கம் வகிக்கும் முஸ்லிம்கள் தீவிரவாதிகளா? என்ற வினாவை எழுப்பியிருந்தோம்.

இதற்கு பதிலளிக்க புகுந்த அண்ணனின் ஆசி பெற்ற பொய்யன் தளம் பதில் என்ற பெயரில் செய்துள்ள வார்த்தை மோசடிகளை பாருங்கள்;

அந்தக் கட்டுரையில் ஒரு பேராவில் சகோதரர் பி.ஜெ அவர்கள் தீவிரவாதத்தை எதிர்த்துப் பிரச்சாரம் செய்து வருவதால் இஸ்லாமிய அமைப்புக்கள் என்று சொல்பவர்களே இவரை எதிர்க்க ஆரம்பித்ததால் பி.ஜெ யுடைய பாதுகாப்பு தற்போது கேள்விக் குறியாகியுள்ளது.
என்று உணர்வில் எழுதப்பட்டுள்ளதாக பொய்யன் டிஜே கூறுகிறது.

இவர்கள் சொல்வது போன்று உணர்வில் எழுதப்பட்டுள்ளதா? அல்லது மேலே நாம் அடிக்கோடிட்டுள்ள வாசகம் போன்று எழுதப்பட்டுள்ளதா என்பதை நடுநிலையாளர்கள் கவனிக்க வேண்டுகிறோம். இத்தகைய வார்த்தை மோசடி மூலம் செய்த தவறை மறைத்து, பட்டப்பகலில் பகலவனை மறைக்கும் கூட்டம் என்பதை காட்டுகிறார்கள்.
என்று நாம் பதிலடி தந்திருந்தோம்.

இதற்கு அண்ணன் ஜமாஅத்தின் கள்ளக் குழந்தையான பொய்யன் தளம் 'தமிழ் தெரியாத தருதலைகள்.. என்ற தலைப்பில் பதில் என்ற பெயரில் பதறியுள்ளார்கள். பல்லாயிரம் பிரதிகள் அச்சிடப்படும் உணர்வில் அச்சில் உள்ள வாசகத்தை மறைத்து, வார்த்தை மோசடி செய்தது பற்றி நாம் கேட்ட கேள்விக்கு பதிலளிக்க திராணியின்றி, அதை கண்டுகொள்ளாமல் குமுதம் ரிப்போர்ட் பேட்டி, அண்ணனுக்கு ஆயுதம் ஏந்திய பாதுகாப்பு என்று கிளைக்கு கிளை தாவியுள்ளார்கள். இதன் மூலம் தங்களின் வார்த்தை மோசடியை அப்பட்டமாக ஒப்புக்கொண்டுள்ளார்கள். அல்ஹம்துலில்லாஹ்.

தமிழில் உள்ள உணர்வு வாசகத்திலேயே இருட்டடிப்பு செய்யும் இவர்கள், அரபியில் உள்ள மார்க்க விஷயங்களை எப்படியெல்லாம் வளைப்பார்கள் என்பதை இதன் மூலம் மக்கள் விளங்கிக் கொள்ளவேண்டும்.

அடுத்து நம்மை தமிழ் தெரியாத தறுதலைகள் என்று கூறும் இவர்கள்,
பஸ் பயணம் செய்தது.

சிலை திறந்தது[?]

மடாதிபதியிடம் ஆசி பெற்றது[?]

கொடிக்கு சல்யூட் அடித்தது.


ஆகியவற்றை நாங்கள் குறிப்பிட்டது தீவிரவாதத்திற்கு ஆதாரமாக அல்ல. இஸ்லாமிய அமைப்புகளின் நிலையை பற்றி விளக்குவதற்காகவே சொன்னோம் என்கிறார்கள்.

சரி! உங்கள் வாதப்படி, மேற்படி செயல்களை செய்த இந்திய தவ்ஹீத் ஜமாஅத், தமுமுக, பாப்புலர் பிரன்ட் ஆகியவை இஸ்லாமிய அமைப்புகள் என்று சொல்ல அருகதை அற்றவை என்றே வைத்துக்கொள்வோம். அதற்கும் விவாதிக்கும் தலைப்பிற்கும் என்ன சம்மந்தம்?

மேலும் இஸ்லாமிய அமைப்புதான் என்று அண்ணன் வகையறாக்கள் உறுதிப்படுத்தி விட்டு, பின்னர் அந்த அமைப்புகளை தீவிரவாத அமைப்புகள் என்று சொன்னால் இவர்கள் இஸ்லாமிய இயக்கங்களை அறுதியிட்டு உறுதியாக தீவிரவாத இயக்கங்கள் என்று சொல்கிறார்கள் என்று அர்த்தம் என்ற வாதத்தை வைத்தோமே அதற்கு பதில் எங்கே?

அடுத்து அண்ணனின் தீவிரவாத எதிர்ப்பு பேச்சால் பாதிப்படைந்த இஸ்லாமிய அமைப்புகள், அண்ணனின் பாதுகாப்புக்கே அச்சுறுத்தலாக உள்ளதாக கூறிய இவர்கள், அந்த தீவிரவாத இஸ்லாமிய இயக்கங்கள் எவை என்றும், அந்த இயக்கங்கள் நாட்டில் நடத்திய தீவிரவாத செயல்கள் எவை என்றும் பட்டியலிட்டிருந்தால் இவர்கள் அறிவாளிகள் என்று கொஞ்சமேனும் நம்பலாம். என்ற கேள்வியை வைத்தோமே நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் அத்தகைய தீவிரவாத இஸ்லாமிய அமைப்புகளின் பட்டியலை வைக்கவேண்டியதுதானே ? ஏன் முடியவில்லை?

இதற்கெல்லாம் பதில் சொல்லமுடியாத இவர்கள், இஸ்லாமிய(?) அமைப்புகள் மூலம் சகோதரர் பி.ஜெக்கு கொலை அச்சுறுத்தல் உள்ளதை உளவுத் துறை உறுதி செய்து பாதுகாப்பை வழங்கியுள்ளது.
என்று ஃபில்டப் காட்டுகிறார்கள்.

இதன் உண்மை நிலை என்ன? என்று பார்ப்பதற்கு முன்னால், உணர்வில் இஸ்லாமிய அமைப்புகள் என்று சந்தேகத்திற்கு இடமின்றி எழுதியவர்கள் குற்றம் சாட்டியவர்கள் நமது பதிலடிக்குப் பின் இப்போது, இஸ்லாமிய(?) அமைப்புகள் என்று கேள்விக்குறியுடன் எழுதியுள்ளார்கள். இதன் மூலமும் உணர்வில் எழுதியது தவறு என்று ஒப்புக் கொண்டுள்ளார்கள்.

அடுத்து 25 ஆண்டுகளாக தீவிரவாதத்தை எதிர்த்து முழங்கும் இந்த மாவீரருக்கு[!] உண்மையிலேயே இஸ்லாமிய தீவிரவாதிகளின்[!] அச்சுறுத்தல் இருக்குமென்றால், தொடர்ந்து இருபத்தி ஐந்துஆண்டுகளாக தொடர் பாதுகாப்பு அல்லவா வழங்கப் பட்டிருக்கவேண்டும்? என்னமோ முந்தாநாளுதான் இவரு உயிருக்கு அச்சுறுத்தல் வந்தது மாதிரி இப்போது பாதுகாப்பு வழங்கியது ஏன்?

சரி! இப்போது வழங்கப்பட்ட இந்த பாதுகாப்பாவது இவரது உயிருக்குள்ள அச்சுறுத்தலை உணர்ந்து, தானாக வழங்கப்பட்டதா என்றால் இல்லவே இல்லை. மாறாக , ஜெயலலிதாவால் நள்ளிரவில் கைது செய்யப்பட்ட கருணாநிதி, அய்யய்யோ கொல்றாங்களே! என்று அலறினாரே!! அதற்கு இணையாக, சில சிறைவாசிகள் விடுதலையானவுடன் குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுத்த கதையாக, அய்யய்யோ ஆபத்து! சிறை மீண்டவர்களால் ஆபத்து என்று இணையதளத்தில் அண்ணன் ஒப்பாரி வைத்ததோடு, தனது உயிருக்கு உள்ள ஆபத்து குறித்து மேலதிகாரிகளிடமும் மனு என்ற பெயரில் புலம்பி பெற்றதுதான் இந்த பாதுகாப்பு என்பதை சொல்லி வைக்கிறோம்.

[குறிப்பு; இதற்கு பிறகும் அண்ணனுக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பு குறித்து ஃபில்டப் செய்தால், அண்ணன் கடந்த காலங்களில் பாதுகாப்பு வாங்கிய விதம் குறித்து இங்கே பட்டியலிடுவோம் இன்ஷா அல்லாஹ்.]

எனவே உங்களுக்கு துணிவிருந்தால், உணர்வில் எழுதியது போன்று பீஜேயின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ள இஸ்லாமிய இயக்கங்களையும், அவர்களின் தீவிரவாத செயல்களையும் மக்கள் மன்றத்தில் சுற்றி வளைக்காமல் நேரடியாக அடையாளம் காட்டுங்கள். அதைவிடுத்து, மாநாடு வெற்றி எதிரொலி; பிரதமர் அழைப்பு என்று ஃபில்டப் செய்துவிட்டு, பின்பு நாங்கள் தான் ஹாரூன் மூலம் கடிதம் கொடுத்து பிரதமரை சந்திக்க அனுமதி கேட்டோம் என்று மூக்குடைபட்டது போன்று, உளவுத்துறை உளவறிந்து அண்ணனுக்கு பாதுகாப்பு வழங்கியது என்று கூறி மீண்டும் மண்ணை கவ்வ வேண்டாம் என்று சொல்லி வைக்கிறோம்.

'இலங்கையான்' என்ற பெயரில் எழுதுவது உண்மையான இலங்கையானாக இருந்தால், தப்பித்தோம்-பிழைத்தோம் என்று கடலில் நீந்தியே இலங்கையை நோக்கி ஓடும் அளவுக்கு எமது சாட்டை தொடர்ந்து சுழலும் இன்ஷா அல்லாஹ்.

--
11/03/2010 09:02:00 AM அன்று இயக்கங்களின் மறுபக்கம். இல் abdul muhaimin ஆல் இடுகையிடப்பட்டது

0 comments:

Post a Comment