Monday, November 15, 2010

தொடரும் கண்டனம்! பி. ஜை அவர்கள் மீது த த ஜ நடவடிக்கை?

அஸ்ஸலாமு அழைக்கும்

அன்பிற்கினிய இ த ஜ நிர்வாகிகளே உங்கள் அனைவருக்கும் அந்த ஓரிறையின் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக, நான் இது நாள் வரை பி. ஜைனுல் ஆபிதீன் அவர்கள் மீது அளவு கடந்த அன்பு கொண்டவர்களில் நானும் ஒருவன், அவர்கள் எந்த தலைப்பில் பேசினாலும் அதை வாங்கி கேட்பதற்கு மிக ஆர்வம் கொண்டவன் அதற்காக மிக சிரம்பட்டாவது தாயகத்திலிருந்து சி டிகலை பெறுவேன். தாங்களுடைய செய்தி பார்த்த பின் நான் மிகவும் அதிர்ந்தேன் இருப்பினும் எனக்கு நம்பிக்கை இல்லை , சென்னையில் வசிக்கும் என்னுடைய சகோதரர் யூசுப் மூலம் தெளிவாக அறிந்து வர சொன்னேன் அவர் சொன்ன விவரம் என்னை மிகவும் வேதனைக்குல்லாகியது இருப்பினும் என்னுடைய த த ஜ சகோதரனிடம் இதை பற்றி விசாரிக்கையில் அவன் சொன்ன சொல்லும் என்னை மிகவும் பாதிப்புக்குள்ளாகியது, அவர் சொல்கையில் இது தவறான வழிமுறை இருப்பினும் த த ஜ என்ன நடவடிக்கை பி. ஜைனுல் ஆபிதீன் அவர்கள் மீது எடுக்கும் என்று பொறுத்திருக்காலம், என்று சொன்னார் அதனடிப்படையில் நான் கடந்த 2 நாட்களாக மௌனம் காத்தேன் இது வரை அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை. உண்மையில் த த ஜ விடம் கொள்கையிருந்தால் பி. ஜைனுல் ஆபிதீன் அவர்கள் மீது நிச்சயம் நடவடிக்கை அல்லது குறைந்தபட்சம் விசாரணை குழு நியமித்து அவர்களை விசாரித்திருக்க வேண்டும், இது வரை எதுவும் நடந்ததாக தெரியவில்லை.

அபகரிப்பை யார் செய்தாலும் அது தவறே ! உண்மையில் த த ஜ கொள்கையின் அடிப்படையில் நேர்மையான இயக்கமாக இருந்தால் குறைந்த பட்சம் இதை கண்டித்தாவது இருக்க வேண்டும், நிர்வாகிகள் மௌனம் காப்பது ஒரு தவறான முன் உதாரணமாகும், தலைமை அதிகாரத்தில் இருப்பவர் செய்தால் ஒரு நீதி தொண்டன் செய்தால் ஒரு நீதியென்றால் நமக்கு தௌஹீத் எதற்கு ? சாதாரண அரசியல் கட்சி கூட செய்ய துணியாத விஷயத்தை செய்து விட்டு கண்டும் காணாமல் இருப்பது எந்த விதத்தில் நியாயம் ?

அல்லா பாதுகாக்க வேண்டும் சகோதரர்களே ! நானெல்லாம் பி. ஜைனுல் ஆபிதீன் அவர்களின் பேச்சுகளால் ஈர்கபட்டவன் அவரை என் சொந்தபந்தங்களில் யாரேனும் இழிவாக பேசினால் கூட போருக்க மாட்டேன் அப்படிப்பட்ட நான் இன்று வெட்கி தலை குனிகிறேன், உண்மையில் நான் அவருடைய பேச்சுகளில் ஈர்கபட்டவன் ஆகவே அவரே தவறு செய்தாலும் அதை கண்டிக்க கடமைப்பட்டவன் இன்ஷா அல்லாஹ் இன்று முதல் நான் இவரை புறக்கணிக்க கடமை பட்டவன், இன்ஷா அல்லாஹ் பாதிக்கபட்டவனுக்கும் அல்லாஹ்விற்கும் மத்தியில் எந்த திரையும் இல்லை என்பதை அறிந்தவன் நான், நிச்சயம் இந்த அநீதிக்கு துணை நிற்க மாட்டேன், இறைவன் நாடினால் இ த ஜ வின் எதிர்கால போக்கு சமுதாய நலன் கருதி இருந்தால் என்னை கண்டிப்பாக இணைத்து கொள்வேன், ஒரு நல்ல ஆரோக்கியமான கொல்கைவாதியாக துணை நிற்பேன்.

நிஜாமுதீன்
ஷார்ஜா

0 comments:

Post a Comment