Wednesday, November 3, 2010

த.த.ஜ.என்பதற்கு தன்னை தற்காத்து கொள்ளும் ஜமாஅத் என்பது தான் அர்த்தமா?

சமுதாயத்திற்காக போராடும் இயக்கமாக த.த.ஜ.வை உருவாக்கிய பாக்கர் போன்ற போராளிகளை புறம் தள்ளிவிட்டு , சமுதாய அக்கறை ஏதுமற்ற [ஆலிம்களின்] சாமியார்களின் சங்கர மடத்தை போன்றும ,தன்னையும் தன் இயக்கத்தையும், அதன் சொத்துக்களையும் காப்பற்றுவதற்க்கும் போராட வேண்டிய அமைப்பாக அதன் தலைமை ஆக்கி கொண்டு இருக்கிறது என்பதற்கு இந்திய தவ்ஹீத் ஜமாஅத் உருவான பின் அதன் தலைமை நடத்திய சமுதாய போராட்டங்களையும் , த.த.ஜ. தலைமை நடத்திய போராட்டங்களையும் ஒப்பிட்டால் உண்மை புரியும்!

இ.த.ஜ நடத்திய போராட்டங்கள்:

1.முஸ்லிம்கள் தலைகளை வெட்டுவேன் ' என வாய்கொலுப்பாக பேசிய வருண் காந்தியை எதிர்த்து போராட்டம்!

2.கட்டாய திருமண பதிவு சட்டம் மூலம் முஸ்லிம் திருமண சட்டத்தில் மூக்கை நுழைத்த தமிழக அரசை கண்டித்து போராட்டம்.

3.பர்தா பற்றி பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் பேசி இறை சட்டத்தை இழிவு படுத்திய சர்கோசிக்கு எதிராக பிரான்ஸ் துணை தூதரகம் முற்றுகை!

4.அல்லலுறும் பாலஸ்தின் காசா மக்களுக்கு மருந்து உணவு கொண்டு சென்ற மனிதாபிமான கப்பலை தடுத்து நிறுத்திய இஸ்ரேல் அரசை கண்டித்து போராட்டம்!

5.முஸ்லிம்களின் உயிரினும் மேலான புனித வேதமான குரானை எரிக்க போவதாக அறிவித்த பாதிரியாரை எதிர்த்து பெருநாள் என்றும் பாராமல் தடையை மீறி போராட்டம்!

6.இடித்தவனுக்கு இரண்டு பங்கு! உரியவனுக்கு ஒரு பங்கு என்று பாபர் மஸ்ஜித் நிலத்தை பங்கு வைத்து பார்பன கும்பலிடம் வழங்கிய அலஹபத் அநீதியை எதிர்த்து குரல் எழுப்பினால் இயக்கம் தடை செய்யப்படலாம் என்ற இஸ்லாமிய இயக்கங்களின் மவ்னத்தை கலைத்து பூனைக்கு மணி கட்டிய புரட்சி மிகு போராட்டம்!

த.த.ஜ.வின் போராட்டங்கள்:
1.அல்தாபி பேசிய பேச்சால் , சுன்னத் ஜமாத்தினர் சேலம் தவ்ஹீத் கல்லூரியில் புகுந்து தாக்கியதற்கு எதிராக போராட்டம்!

2.நபிகள் நாயகதோடு தன்னை ஒப்பிட்டு பேசியதாக கூறும் நித்யானந்தாவை விட்டு விட்டு , செய்தி வெளியிட்ட நக்கீரனை, வருத்தம் தெரிவித்த பின்னும் தனிப்பட்ட பகையை சமுதாய பிரச்சனையாக்கி நடத்திய போராட்டம் .

3.எஸ்.பி.பட்டினம் பிரச்சனையில் பள்ளியை பூட்ட வைத்து , முஸ்லிம்களுக்கிடையில் உள்ள பிரச்சனையில் நடவடிக்கை எடுக்கக் கோரி முதல்வர் வீடு முற்றுகை!

4.முஸ்லிம்களுக்கோ, தற்போதைய த.த.ஜ தொண்டர்களுக்கோ சம்மந்தமில்லாத, பி.ஜே.வை பற்றி அவரின் முன்னாள் தோழர்கள் கொடுத்த பேட்டியை வெளியிட்டதற்காக நக்கீரனை கண்டித்து நாராச வார்த்தைகளால் ஆர்பாட்டம்!

5.இது தவிர மாநிலதலைமை நடத்திய பெரிய அஜண்டா இட ஒதுக்கீடிற்கான மாநாடு மட்டுமே! அதுவும் கூட முந்தைய மாநாடுகளோடு ஒப்பிடுகையில் , செலவு பல மடங்கு! மக்கள் வரவு குறைவு! என்பது மட்டுமின்றி மாநாடு தேர்தலை மனதில் கொண்டு நடத்தப்பட்டது தான்.

மக்கள் பிரச்சனைகளுக்காக போராடுவதை தவிர்த்து தங்களுக்காக் போராடுவதிலும் தங்களை தற்காத்து கொள்வதற்குமே போராட வேண்டிய நிலையில் உள்ளதை மேற்கண்ட ஒப்பீட்டில் காணலாம்.த.த.ஜ.என்பதற்கு தன்னை தற்காத்து கொள்ளும் ஜமாஅத் என்பது தான் அர்த்தமா?

0 comments:

Post a Comment