Friday, November 5, 2010

அமெரிக்காவின் கைக்கூலி வைகோ மட்டுமா?



முழுக்க முழுக்க தனது சுயநலமே நோக்கமாகவும் அவதூறையே அடிப்படை பணியாகவும்
கொண்டு இயங்கி வரும் அந்த அவதூறு அமைப்பினர்,தனக்கு சாதகமாக ஏதேனும்
சிக்கும் பொழுதெல்லாம் அதை கச்சிதமாக கேட்ச் பண்ணி தாங்கள் மட்டும் தான்
சமுதாயத்திற்கு போராடக்கூடியவர்கள் என்று தங்களின் சொந்த பகையை சமுதாய
பிரச்சனையாக்குவது வழக்கம்.இவர்களின் இந்த கேவலமான நிலைக்கு கடந்தகால
சம்பவங்கள் பலவற்றை சான்றாக சமர்ப்பிக்கலாம்.ஆனாலும் நவீன சான்று ஒன்றை
சிந்திக்கும் சமூகத்தின் முன் சமர்ப்பிக்கிறேன்.இதன் படிப்பினை பெறுவதும்,பெறாமல் போவதும் உங்கள் கைவசமே!

அமெரிக்க அதிபருமான இஸ்லாமியர்களின் எதிரியுமான ஒபாமாவின் இந்திய வருகை
குறித்து தாங்கள் எல்லாம் அறிவீர்கள்.அவருடைய வருகை பின்வரும் அடிப்படை
அம்சங்களை நோக்கமாக கொண்டவை.

# இந்தியா அமெரிக்கா இடையேயான வர்த்தக ஒப்பந்தம் செய்யதல்.
#இந்தியாவில் அமெரிக்க விற்பனை பொருள்களின் தடைகளை நீக்குதல் .
#இந்திய சந்தையில் அமெரிக்க விற்பனை பொருள்களின் தடைகளை அகற்றுதல் .
#இந்தியாவில் அமெரிக்க நிறுவனங்களின் உதவியோடு அணு உலைகளை நிறுவுதல்.
#ஆப்கானிஸ்த்தான் ,பாகிஸ்தான் பிரச்சனைகள் குறித்து ஆலோசித்தல் .
#சர்வதேச பொருளாதார நிலைகளை குறித்தும் ,இரு நாடுகளுக்கும் இடையேயான
உறவு முறையை பலப் படுத்துதல்
.

இந்நிலையில் ஒபாமாவின் வருகையை இந்திய இடதுசாரி கட்ச்சிகள் கடுமையாக
எதிர்க்கின்றன.வரும் 8 -ம்தேதி அரசுக்கு எதிராக போராட்டத்தையும் அறிவித்து
இருக்கின்றனர்.இடது சாரிகளோடு கைகோர்த்து நின்ற வைகோ இந்த விஷயத்தில் தனது
கூட்டனிகளோடு முரண்பட்டு ஒபாமாவின் இந்திய வருகையை ஆதரித்து நிற்கிறார்.ஒபாமா
ஆட்ச்சிக்கு வருவதற்கு முன்பே அவரை சந்தித்து இலங்கை தமிழர்கள் தொடர்பாக அவரிடம்
நேரில் பேசி பிரச்னைக்கு முற்று புள்ளி வைக்க கோரிக்கை வைத்துள்ளார் வைகோ.
ஒபாமாவுடனான இந்த சந்திப்பு தான் இன்று அவருக்கு எதிராக வாய் திறப்பதை
தடுத்திருக்கிறது. வைகோவின் இந்த நிலைபாட்டை தான் "தன்னை தற்காத்து கொள்ளும்
அமைப்பு பெரிய ஆயுதமாக கையில் எடுத்து களத்தில் குதித்துள்ளனர். பின்வரும்
வாசகங்களை கொண்டு போஸ்ட்டர்களைஅடித்துள்ளனர்.

"மனிதகுல விரோதியான அமெரிக்காவின் கைக்கூலி வை. கோ. வை வன்மையாகக் கண்டிக்கிறோம்"

வைகோ மட்டும் தான் அமெரிக்காவின் கைகூலியா?
இந்த நாட்டை ஆளும் காங்கரஸ் அமெரிக்காவின் கை கூலி இல்லையா?

உண்மையிலேயே இவர்கள் சமூக அக்கறை உள்ளவர்களாக இருந்திருந்தால் என்ன செய்திருக்க
வேண்டும்.?ஆளும் காங்கரசைஅல்லவா எதிர்த்து போஸ்டர் ஒட்டியிருக்க வேண்டும்.

வைகோ வரசொல்லி தான் ஒபாமா வருகிறாரா?அரச முறை பயனமாகத்தானே ஒபாமா
வருகிறார். நாட்டை ஆளும் காங்கரசிர்க்கு ஒபமாவின் வருகையில் தொடர்பில்லாதவாரல்லவா
இவர்களின் போஸ்டர் ஓட்டும் காட்சி அமைந்திருக்கிறது.

வைகோ எந்த அதிகாரத்தில் இருக்கிறார் என்பதற்காகஅவரை கண்டிக்கிறார்கள் ?
அவரை கண்டிக்க ஒரு அறிக்கை போதாதா?அவரை மட்டும் கண்டிச்சு போஸ்ட்டர் ஒட்டிடால்
போதுமா?பிரச்சனைகள் முடிந்திடுமா?அதிகாரத்தில் உள்ள காங்கரஸ் அரசை கண்டித்து ஒரு
போஸ்ட்டர் ஒட்டியிருந்தால் நியாயம் இருக்கும்.அட்லீஸ்ட் ஒரு அறிக்கை கூட காணோமே!

இடதுசாரிகள் கூட,கூட இருந்த வைகோவை விட்டுவிட்டு,யாரை கண்டிக்கவேண்டுமோ
அவர்களை கண்டித்து ஆர்பாட்டம் அறிவித்து இருக்கின்றனர்.மறுமையை நம்ம்பாத
இடதுசாரிகள் கூட மனசாட்ச்சியோடு முடிவெடுத்திருப்பதைதான் இது காட்டுகிறது.
மறுமை கூலிக்கு தான் சேவை செய்கிறோம் என்று கூப்பாடு போடும் இவர்கள் காங்கரஸின்
கைகூளியாவே மாறிவிட்டனர் என்பதைத்தான் இந்த பாரபட்ச்ச கண்டிப்பு காட்டுகிறது.

காங்கரசுக்கு இவர்கள் கைக்கூலி என்றால் அமெரிக்காவிற்கும் கைகூளிதான்.
அப்போ இவர்கள் தான் முதலில் எதிர்க்கப்படவேண்டியவர்கள்!
சுயநலத்துக்காக சமூதாயத்தை ஏமாற்றும் இந்த வழ்கேடர்களை சமூதாயம்
அடையாளம் கண்டுக்கொள்ளவேண்டும் என்பதுதான் நமது அவா.

ஆக்கம் :முபாரக்
குவைத் மண்டலம் : இந்திய தவ்ஹீத் ஜமாஅத்

0 comments:

Post a Comment