Wednesday, November 17, 2010

இப்ராஹீம் காசிமி விவகாரம்; பட்டுக்கோட்டைக்கு வழி கேட்டால்...

First Alphabet

மவ்லவி இப்ராஹீம் காசிமி மாநிலப் பேச்சாளர் அல்ல என்று தனது கள்ளவெப்சைட்டில் பதிவு செய்தார் பீஜே. நாம் ததஜவின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இப்ராஹீம் காசிமியை மாநில பேச்சாளாராக அடையாளம் காட்டும் ஒரு செய்தியை எடுத்துக்காட்டி இப்ராஹீம் காசிமி மாநிலப் பேச்சாளர்தான் என்று நிரூபித்தோம். அதற்கு பதிலளித்த பீஜே, இணையதள செய்திப்பிரிவில் ஏற்ப்பட்ட பிழை என்று மழுப்பியதோடு, மாநிலப் பேச்சாளர்கள் மாநில நிர்வாகிகளால் மட்டுமே நியமிக்கப்படுவார்கள். இப்ராஹீம் காசிமி மாநில நிர்வாகிகளால் நியமிக்கப்பட்டவர் அல்ல என்று கூறியிருந்தார்.

அப்போது நாம், அப்படியானால் மாநில நிர்வாகிகளால் நியமிக்கப்பட்டால்தான் தான் அவர் மாநிலப் பேச்சாளர் என்று கூறும் பீஜே, மாநில நிர்வாகத்தால் தேர்ந்தெடுக்கப்பட்டு, முறையாக இணையதளத்திலும், உணர்விலும் அறிவிப்பு செய்த மாநிலப் பேச்சாளர்கள் பட்டியலை வெளியிடத் தயாரா? அப்படி வெளியிட்டு அந்த பட்டியலில் இப்ராஹீம் காஸிமி இல்லை என்று நிரூபிக்கத் தயாரா?

என்று நமது மறுப்பில் கேட்டிருந்தோம்.

இப்போது பீஜே என்ன செய்யவேண்டும்? மாநில நிர்வாகிகளால் நியமிக்கப்பட்ட, முறையாக இணையதளத்திலும் உணர்விலும் வெளியிடப்பட்ட மாநிலப் பேச்சாளர்கள் பட்டியலை வெளியிட்டு, பார்த்தீர்களா! இதில் இப்ராஹீம் காசிமி பெயர் இல்லை என்று சொல்லியிருந்தால் அறிவுப்பூர்வமான பதிலாக இருக்கும். ஆனால் அவர் இப்போது கடந்த பொதுக்குழுவில் ஒப்புதல் பெறப்பட்ட[பழைய பைலாவில் இல்லாத] மாநிலப் பேச்சாளர்கள் பற்றிய விதியை வெளியிட்டு, மாநில நிர்வாகம் தான் மாநிலப் பேச்சாளர்களை நியமிக்கமுடியும் என்று காட்டுகிறார்.

நாம் இங்கே விவாதித்து கொண்டிருக்கும் விஷயம் இப்ராஹீம் காசிமி மாநிலப் பேச்சாளரா? இல்லையா? என்பதுதான்.

எனவே இப்போதும் சொல்கிறோம். திருத்தப்பட்ட பைலாவுக்கு பின்னால் தலைமையால் நியமிக்கப்பட்டு, முறையாக அதிகாரப்பூர்வ இணையதளத்திலும், உணர்விலும் வெளியிட்ட பட்டியலை காட்டவேண்டும். அதில் இப்ராஹீம் காசிமி பெயர் இல்லை என்றும் காட்டவேண்டும். [குறிப்பு; பட்டியல் இப்போது உருவாக்கப்பட்டதாக இருக்கக்கூடாது]
அடுத்து, அப்துர்ரஹ்மான் தாவத்தி அவர்கள் குறித்து நாம் வைத்த கேள்விக்கும் பதிலளிக்க வேண்டும்.


அடுத்து உணர்வு, பீஜே தலைவராக இருந்த போது தான் அவர் உணர்வின் அனைத்து கட்டுரைகளையும் பார்த்து வந்தார், இப்போது உணர்வில் வரும் அனைத்தும் பீஜேயின் பார்வைக்கு வருவது கிடையாது.
என்று கூறியுள்ளார் பீஜே.

பீஜே தலைவர் பதவியிலிருந்து இறங்கிய பிறகும் அவரது பார்வைக்கு சென்ற பின்தான் அச்சுக்கு செல்லும் என்பதை உரியவர்களின் வாக்குமூலம் வாயிலாக இன்ஷா அல்லாஹ் இங்கே நிரூபிப்போம்.

0 comments:

Post a Comment