Tuesday, November 23, 2010

செல்போனின் விபரிதம் ! நாளைய இந்தியா என்னவாகும் ?


அளவற்ற அருளாளனும்,நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்....


சிறுவர்கள் சீரழிந்து வருவதற்கு பல்வேறு கரணங்கள் இருந்தாலும் மிக முக்கிய காரணமாக, அற்புதமான அறிவியல் கண்டு பிடிப்புகளில் ஒன்றான செல் போன் திகழ்கிறது என்று சொல்லலாம்.அறிவியல் கண்டுபிடிப்புகளில் பெரும்பாலானவற்றை,நன்மையான விஷயங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதை விடுத்து தீய விஷயங்களுக்கு தான் அதிக முக்கியத்துவம் கொடுத்து பயன்படுத்தப்பட்டு வருகிறது.இதை யாராலும் மறுத்து விட முடியாது..தொலைக்காட்ச்சியாக இருந்தாலும் கணினியாக இருந்தாலும் இதே நிலைதான் இன்று வரை நீடித்து வருகிறது.இனியும் நீடிக்க போகிறது.அதன் வாசல்களை அடைக்காவிட்டால். பெயருக்காக சில நன்மையான விஷயங்கள் அனுமதிக்கப்படுகிறது என்று வேண்டுமானால் எடுத்துக்கொள்ளலாம்.

ஆபாசத்திற்கு ஆட்பட்டு படிப்பில் கவனம் செலுத்தாமல் கவனக்குரையாக இருந்த பள்ளி மாணவன் ஒருவன் குறித்த குறுஞ்செய்தி ஒரு பத்திரிகையில் வெளிவந்தது.அதை எதிர்கால சிறுவர்களின் நலன் கருதியும்,பெற்றோர்கள் அதில் பெறப்படவேண்டிய படிப்பினை கருதியும் சிறு மாற்றத்தோடு சமர்ப்பிக்கிறேன்.

பள்ளி மாணவர்களின் நலன் கருதி பெற்றோர்களும் ஆசிரியர்களும் இணைந்து நடத்தும் கூட்டம் தான் பெற்றோர் -ஆசிரியர் கூட்டம்.இந்த கூட்டத்தில்ஆசிரியர்கள் , மாணவர்கள் பள்ளியில் எப்படி படிக்கின்றனர்?பள்ளிக்கு வருகிறார்களா?இல்லையா?போன்ற அவர்களது செயல்பாடுகளை அவர்களது பெற்றோர்களுடனும்,பெற்றோர்கள் ,வீடுகளில் தங்கள் பிள்ளைகள் ஆசிரியர் நடத்திய பாடங்களை நினைவு கூறுகிறார்களா?அல்லது ஊர் சுற்றி திரிகிறார்களா? போன்ற செயல்பாடுகளை அவர்களது ஆசிரியர்களுடனும் பரஸ்பரம் தங்களின் கருத்துக்களை பரிமாரிகொல்வர்.குறைபாடுகள் இருக்குமேயானால் அது கண்டுபிடித்து கூட்டத்தில் சரிசையப்படும்.அந்த வகையில் பெற்றோர்-ஆசிரியர் கூட்டம் அந்த ஊரில் நடைபெற்றது.

பெற்றோர்-ஆசிரியர் கூட்டம் :

ராமப்புறத்தில் உள்ள ஒரு மேல்நிலைப்பள்ளியில் பெற்றோர்-ஆசிரியர் கூட்டம் நடைபெற்றுள்ளது. அந்த கூட்டத்தில், தன் மகன் வீட்டில் படிப்பதில்லை. மாறாக, எப்ப பார்த்தாலும் இந்தப் பாழாய்ப்போன செல்போனை வைத்துக்கொண்டு, நோண்டிக்கொண்டே இருக்கிறான். அதில் அப்படி என்னதான் இருக்கிறதோ, தெரியல! என்று படிப்பில் பின்தங்கிய மாணவனின் பாமரத் தந்தை ஒருவர் ஆசிரியர்களிடம் முறை இட்டு வருத்தப்பட்டுள்ளார். தந்தையின் நிலையை புரிந்துக்கொண்ட ஆசிரியர்கள் மாணவனை சோதனை செய்துள்ளனர்.

செல்போன் சோதனை :

ஆசிரியர்கள் அந்த மாணவனிடம் இருந்த கைப்பேசியைச் சோதித்தபோது அதில் ஆபாசப் படங்கள் இருப்பது கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.பிறகு அந்த மாணவனை அழைத்து கண்டித்துள்ளனர்.செல் போனில் சிக்கி சிறுவர்கள் சீரழிந்து சின்னாபின்னாமாகி வருவதற்கு பலசம்பவங்களில் இந்த உண்மை சம்பவம் ஒன்றும் சான்றாக உள்ளது.

அறிவியல் ஆட்சி செய்யும் இன்றைய நவநாகரிக உலகில் செல்போன் வரவு மகிழ்ச்சி அளிக்கிறது. என்றாலும் , இளைய சமுதாயத்தை எந்த அளவுக்குப் பாதிக்கிறது என்பதை எண்ணும்போது அறிவியலின் வளர்ச்சியால் எதிர்காலச் சந்ததியினர் பாதிக்கப்படுவார்களோ என நினைக்கத் தோன்றுகிறது.

நேரத்தை வீணடித்தல் :

பெரும்பாலான மாணவர்கள் கூட்டாக அமர்ந்துகொண்டு செல்போனில் உள்ள நடிகர் - நடிகைகளின் படங்களைப் பார்த்து ரசிப்பது, விடியோ கேம்ஸ் விளையாடுவது என தங்களது பொன்னான நேரத்தை மட்டுமல்லாது, எதிர்காலத்தையும் தொலைத்துக் கொண்டிருக்கிறார்கள். அன்றைய காலத்தில் சிறுவர்களின் விளையாட்டு என்பது ஒரே இடத்தில் உட்க்கார்ந்து விளையாடும் விளையாட்டாக இல்லாமல் ஓடி ஆடி விளையாடக்கூடிய விளையாட்டாக இருந்தது.தாங்கள் விளையாடும் விளையாட்டுக்கு வித விதமான பெயர்களை சூட்டி சிறுவர்கள் மகிழ்ந்தனர்.[கோலாட்டம், கொரங்காட்டம்] அது அவர்களுக்கு உடற்ப்பயிர்ச்சியாகவும் , அருமையான பொழுபோக்கு அம்சமாகவும் அமைந்தது.அது மாத்திரமில்லை நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் பெற்று வளமாகவும் வளர்ந்தனர்.இப்படிப்பட்ட அற்ப்புதமான விளையாட்டுகள் எல்லாம் இன்றைய நவீன உலகில் மறைந்தே போயின.மாறாக ஒரே இடத்தில் உட்கார்ந்தபடி பொழுதுகளை கழிக்கும் படியான கருவிகள்,சாதனங்கள் வியாபித்துவிட்டன.அந்த வகையில் தனது பொழுது போக்கை போக்கும் கருவியாக செல்போனை பயன்படுத்துக்ன்றனர் சிறுவர்கள்.இதனால் சிறுவர்களின் பொழுது மட்டுமல்ல எதிர்காலமும் போய்விடும் என்பது தான் உச்சகட்ட உண்மை.

குறுந்தகவல்களை அனுப்பி மகிழ்தல் :

அதுபோல புத்தகங்களைத் தேட வேண்டிய வயதில்[ஆபாச] குறுந்தகவல்களைஅனுப்பி மகிழ்கின்றனர்.நண்பர்களோடு அதிலும் குறிப்பாக, எதிர்பாலரோடு மணிக்கணக்கில் அரட்டை அடிப்பதில் பெற்றோரின் பணத்தையும், அவர்களது நம்பிக்கையையும் வீணடிக்கிறார்கள். விடியோ செல்போன் மூலம் மாணவிகளை ஆபாசமாகப் படம் எடுப்பதும், அதை நண்பர்களோடு பார்த்துமகிழ்வதும் போன்ற நாளேட்டுச் செய்திகள் நம்மைப் பதைபதைக்கச் செய்கின்றன. போதைப் பொருள்களுக்கு அடிமையாவதற்கும், பல்வேறு குற்றச்செயல்பாடுகளுக்குத் துணைபோவதற்கும் செல்போன்கள் இன்றைய இளைஞர்களை அழிவுப்பாதைக்கு இட்டுச்செல்கிறது என்றால் நாளைய இந்தியா என்னவாகும்?

தடை இருந்தும் தடுக்க முடிவதில்லை :

பள்ளிகளில் செல்போன் உபயோகிக்கத் தடை உள்ளபோதிலும், ஆசிரியர்களுக்குத் தெரியாமல் பள்ளி வளாகத்திலும், டியூஷன் என்ற பெயரில் மாணவர்கள் சங்கமிக்கும் இடங்களிலும் இதுபோன்ற செயல்களால் ஆட்டிவைக்கப்படுகிறார்கள். கிராமப்புற மாணவர்களை அவர்களது பெற்றோர்கள் கண்டுகொள்ளாததற்கு அறியாமையும் ஒரு காரணமாகும். இந்தக் கொடுமையிலிருந்து இளையோரை மீட்க பெற்றோர்களும் பாதுகாவலர்களும் அவர்களை கண்காணிக்க வேண்டிய கடமை உள்ளது.

விடியோவசதி இல்லாத ,மெமரிகார்டு இல்லாத :

செல்போன் அவசியம் எனக் கருதும் பெற்றோர்கள் குறைந்தபட்சம் விடியோவசதி இல்லாத, மெமரிகார்டு இல்லாத எளிமையான சாதனத்தைப் பிள்ளைகளுக்குக் கொடுக்கலாம். இன்னும் ஒருபடி மேலேபோய் "இன்கம்மிங்' வசதி மட்டும் உள்ளவாறு பார்த்துக்கொள்ளலாம். பெற்றோர் தங்கள் பிள்ளைகளுக்கு நல்ல நண்பர்களாக, வேண்டிய நபராக ஏற்றுக்கொள்ளும்படி நடந்துகொள்ள வேண்டும். அதிகமான நேரம் அவர்களோடு கலந்துரையாடி ஊக்கப்படுத்த வேண்டும், நல்வழிப்படுத்த வேண்டும். சமூகத்தில் பிரிக்கமுடியாத அங்கமாகிப் போன செல்போனை உபயோகிப்பது குறித்து நெறிப்படுத்த வேண்டிய பொறுப்பு அனைவருக்கும் உள்ளது. மலிவு விலையில் கிடைக்கும் செல்போன் என்ற ஒருபொருள் விலைமதிக்க முடியாத இளைய சமுதாயத்தைச் சீரழிப்பதை இனியும் அனுமதிக்கக் கூடாது.

ஆக்கம் : முபாரக்

குவைத் மண்டலம் : இந்திய தவ்ஹீத் ஜமாஅத்

0 comments:

Post a Comment