Wednesday, November 17, 2010

கோவையில் பெருநாள்! கொள்கை சகோதரர்களை ஒருங்கிணைத்தது!


https://mail.google.com/mail/?ui=2&ik=0b0bfae0ac&view=att&th=12c5d7c38ffd6660&attid=0.1&disp=inline&realattid=f_ggn7kd2t0&zw

ல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் நேற்றைய ஹஜ் பெருநாளில் சென்னை, மதுரை கோவை திருச்சி உள்ளிட்ட பேரு நகரங்களிலும், தமிழகம் முழுவதும் முஸ்லிம்கள் அதிகம் வாழும் அனைத்துபகுதிகளிலும் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் திடல் தொழுகை ஏற்பாடு செய்யப்பட்டு சிறப்பாக நடை பெற்றது! இதை தடுப்பதற்கும் மக்களிடத்தில் குழப்பம் ஏற்படுத்துவதற்கும் தமிழ் நாடு தக்ளித் ஜமாத்தினர் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் வியாழனன்று தான் பெருநாள் என போஸ்டர் அடித்து ஒட்டியும் பல்வேறு இடங்களில் ,மோதலை ஏற்படுத்தி மீண்டும் திருவிடசேரி போல் முஸ்லிம்களுக்கு மத்தியில் பிரச்சனையை ஏற்படுத்த முயன்று அதில் தோல்வியுற்றனர். அல்லாஹ்வின் அருளால் திடல் தொழுகைக்கு திரளாக வந்ததன் மூலம் பொறுமையாளர்களோடு அல்லாஹ் இருக்கிறான் என்பது நிரூபணமானது! பல இடங்களில் த.த.ஜ.சகோதரர்களே திடல் தொழுகையில் .பங்கேற்றது பி.ஜே.வின் பிறை நிலைப்பாட்டை ஏற்கவில்லை என்பதை எடுத்து காண்பித்தது!

கோவையில் இவர்களின் போஸ்டர் கிழிப்பு , பிரசார தடுப்பு , மேலும் இ.த.ஜ. சார்பில் மக்களை குழப்ப ஒட்டிய போஸ்டர் அனைத்தையும் மீறி , ஆயிரக்கணக்கில் மக்கள் திடல் தொழுகைக்கு திரண்டனர்! பள்ளி ஒன்றில் ஏற்பாடு செய்யபட்டிருந்த தொழுகை, மழையால் மைதானம் முழுதும் நீர் நிரம்பியிருந்ததால், பக்கத்திலுள்ள ஒரு மண்டபத்திற்கு மற்றபட்டிருந்தும் மக்கள் திரளாக கலந்து கொண்டனர். ஆண்களை விட பெண்கள் அதிக அளவு கலந்து கொண்டது பொய்யர்களின் பிரசாரத்தை முறியடிக்கும் விதமாக இருந்தது! மாநில செயலர் செங்கிஸ் கான் 'இப்ராகிம் [அலை] உலக மக்களை ஒருங்கிணைக்க இறையில்லத்தை உருவாக்கினர்! ஆனால் அந்த இப்ராஹிமின் வழியை பின்பற்றுவதாக சொல்லிக்கொண்டு ,பள்ளிவாசல்களின் பெயராலும் பண்டிகைகளின் பெயராலும் பிரித்து வழி கெடுப்போரை மக்கள் புரிந்து புரிந்து கொண்டு புறக்கணிக்க வேண்டும்! ' என்று தனது குத்பா உரையில் குறிப்பிட்டார். கோவை மாவட்ட மாநகர செயல் வீரர்களின் சிறப்பான ஏற்பாட்டால்
கோவையில் பெருநாள் கொள்கை சகோதரர்களை ஒருங்கிணைத்தது!

0 comments:

Post a Comment