Monday, November 29, 2010

குற்றத்தில் தனக்கு பங்கிருந்தும் அதை மறைக்கும் அப்பாவி தொண்டன்.!


அளவற்ற அருளாளனும்,நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்....

இ த ஜ வின் மாநில பேச்சாளர் சகோ:அப்துல் ஹமீத் அவர்களை தொலை பேசியில்
தொடர்பு கொண்டு உசுப்பேற்றியதன் மூலம் அவர் தவறு செய்ய காரணமாக இருந்த
,அந்த அறிஞரின் அப்பாவி தொண்டர் நசுருதீன்,ஒரு கடிதத்தை சகோ: அப்துல்
ஹமீதுக்கு எழுதியுள்ளார்.தான் பேசியது தவறு தான் என்று மனமுவந்து
சகோ:அப்துல் ஹமீத் அவர்கள் வருத்தம் தெரிவித்ததற்கு பகரமாக தான், இந்த
கடிதத்தை அப்பாவி தொண்டர் எழுதியுள்ளார்.அதில்.. முழுக்க முழுக்க சுயநலமே
மேலோங்கியிருப்பதை படிப்பவர்கள் எளிதில் புரிந்து கொள்ளலாம்...


"தாங்கள் என்னை தவறான வார்த்தைகளினால் திட்டியது தங்களுக்கு வருத்தம்
அளிப்பதினால் அதற்க்கு மன்னிப்பு தெரிவித்து இந்த இணையதளத்தில் எழுதி
இருந்தீர்கள். நான் மிகவும் வருத்தப்பட்டேன் இந்த மன்னிப்பிற்கு."
நானும் அதை மறந்து விட்டேன். தாங்களும் அதை மறந்து விடவும்.
நீங்கள் வயதில் பெரியவரோ அல்லது சிறியவரோ அது எனக்கு தெரியாது.
இருப்பினும் அது தவறு என்று தெரிந்து தாங்கள் மன்னிப்பு கேட்டதற்கு அல்லா
அதை மன்னிப்பானாக
".என்று கூறுகிறார்.

சகோ:அப்துல் ஹமீத் அவர்கள் தவறாக பேசியதற்கு தான் ஒரு முக்கிய காரணமாக
இருந்தும் அதை மறைத்து தனக்கு சிறிதும் சம்மந்தம் இல்லாதது போல்
சித்தரிக்கிறார். தான் செய்த தவறுக்கு மன்னிப்போ வருத்தமோ
தெரிவிக்கவில்லை.மாறாக அவருடைய தவறை தான் சுட்டிக்காட்டுகிறார்.

அவருக்கு மன்னிப்பு அளிப்பதின் மூலம் தான் பரிசுத்தவான் போல் காட்ட முற்படுகிறார்.

தான் செய்ததை நியாயப்படுத்த சில காரணங்களையும் முன்வைக்கிறார்.

தவறான நோக்கத்துக்காக பதிவு செய்துவிட்டு ,அப்படி ஒரு நோக்கம் தனக்கு
இல்லை. என்று திசை திருப்புகிறார்.

"மேலும் நானும் தாங்களை கோபப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில்
ரெகார்டிங் செய்யப்படவில்லை. தாங்கள் சார்ந்து இருக்கும் இயக்கத்தின்
கொள்கை நிலைபாடு வித்தியாசப்படுகிறதே! என்றும், தனி ஒருவருக்கு (அதாவது:
உங்களுக்கு) கருத்து வேறுபாடு இருந்தால்! தாங்கள் ஆய்வு பணியை செவ்வனே
செய்ய வேண்டும், அல்லது தனித்து இருக்கவேண்டுமே தவிர பிற நமது
சகோதரர்களுக்கும் புகுத்தக் கூடாது என்ற நோக்கத்தில் தான் இதை ரெகார்டிங்
செய்தேனே தவிர தங்களை புண்படுத்தும் நோக்கத்தோடு செய்யவில்லை."

எனவே இந்த கடிதத்தை ஒரு கபட நாடகமாகவே கருதேவேண்டியுள்ளது.இறுதியாக ஒரு
கோரிக்கையை வைத்து விடைபெறுகிறார் .

"இந்திய தவ்ஹீது ஜமாஅத் டிரஸ்ட்டை” சார்ந்த சகோதரர் அப்துல் ஹமீது
அவர்கள் தன் தவறை உணர்ந்து வருத்தம் தெரிவித்த காரணத்தால்! இனி இவர்
என்னை தவறான வார்த்தைகளினால் பேசியதை விமர்சிக்க வேண்டாம் என்று கேட்டுக்
கொள்கிறேன்.


மேலும் இந்த வாக்கியத்தில், அப்துல் ஹமீத் அவர்கள் தவறுக்கு மன்னிப்பு
கேட்டு விட்டதால்,அவர் தொடர்பான பேச்சுக்களை இனி விமர்சிக்க வேண்டாம்
என்று கோரிக்கை வைக்கிறார். இந்த கோரிக்கை யாரை நோக்கி வைக்கிறார் என்று
தெரியவில்லை . இவர் மதிக்கும் அந்த அறிஞருக்கு[?] மட்டும் இதில்
விதிவிலக்கு உண்டா! என்பதையும் புரியவில்லை.அனைவருக்கும் சேர்த்துதான்
கூறுவாரேயானால். இதிலாவது நசுருத்தீன் உண்மையாளராக இருப்பாரேயானால்
முதலில் அபகரிக்கப்பட்ட கள்ள வெப்சைட்டில் உள்ள சகோ:அப்துல் ஹமீத்
அவர்களின் உரையாடல் அடங்கிய பதிவுகளையும் ,அது தொடர்பான ஆக்கங்களையும்
தனது ஆன்மீக அறிஞரிடம்[?] சொல்லி அகற்றிவிட்டு தனது தூய்மை தனத்தை
நிலைநாட்டட்டும்.

அப்பொழுதுதான் சகோ :அப்துல் ஹமீதின் மன்னிப்பை ஏற்றத்தை போல் ஆகும்
.இல்லை என்று சொன்னால் மக்களை ஏமாற்ற தான் இந்த கடிதம் என்ற நிலைக்கு
தான் வரவேண்டியிருக்கும். அறிஞரிடம்[?] சொல்லி அகற்ற போகிறாரா அல்லது
அவரோடு சேர்ந்து ஐக்கியமாகி தனது நிறத்தை வெளிபடுத்தப் போகிறாரா ?
பொறுத்திருந்து பார்ப்போம்.

ஆக்கம் :முபாரக்
குவைத் மண்டலம் : இந்திய தவ்ஹீத் ஜமாஅத்

0 comments:

Post a Comment