Monday, November 8, 2010

டி.என்.டி.ஜே.ஆலந்தூர் மதரசா இமாம் டி.என்.டி.ஜே.வினராலேயே தாக்கப்பட்டார்!

தனி நபர் ஜமாத்தின் தவறான கொள்கைகளாலும் , நிர்வாக குளறுபடிகளாலும் , மக்கள் வெளியேறி வருவதும் , மாவட்டந்தோறும் இ.த.ஜ.வில் இணைந்து வருவதும் தொடர்ந்து வருகிறது! நாம் எந்த முயற்சியும் செய்யாமலே காஞ்சி மாவட்டத்தில் அவர்களாகவே நமக்கு ஆட்களை அனுப்பி வைக்கும் வேலையை த.த.ஜ.வின் துணை பொது செயலளர் தவ்பிக் செய்து வருகிறார். சில நாட்களுக்கு முன் இவர்களின் அணுகு முறையால் ஆட்டோ ஸ்டான்ட் ஒன்று இ.த.ஜ.வில் இணைந்த செய்தி அறிந்திருப்பீர்கள்! தற்போது அதே ஆலந்தூரில் மதரசா இக்லாஸ் என்ற பெயரில், தற்போது இ.த.ஜ.வில் இருக்கும் நம் சகோதரர்களின் முயற்சியால் உருவாக்கப்பட்டது! இதில் கமலுதீன் மன்பயி முக்கிய பங்காற்றி வந்தார். இதில் சுமார் நூற்றி ஐம்பது குழந்தைகள் மார்க்க கல்வி பயின்று வந்தனர். இயக்கம் பிரிந்த நேரத்தில் கூட அந்த மதரசாவில் பயிலும் மாணவர்களின் மார்க்க கல்வியை மனதில் கொண்டு மன்பயி த.த.ஜ.வில் தங்கிவிட , அதையே காரணமாக கொண்டு அதற்கென உழைத்த நம் சகோதரர்களும் , நடுநிலையாளர்களும் விட்டு கொடுத்து விலகி நின்றனர்.

இந்நிலையில் மன்பயி இயக்க வேறுபாடின்றி எல்லோருடனும் பழகி வந்ததை பொறுக்காத தவ்பிக் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் மதரசா நிர்வாகத்திற்கு தொடர்ந்து தொல்லை கொடுத்துவர , கடந்த வெள்ளியன்று ஜும்மா உரையின் போது இதை சுட்டி காட்டினர். மதரசா நிர்வாகத்தை முடக்க நினைக்கும் மாவட்ட நிர்வாகிகளை கண்டித்ததை பொறுக்காத தவ்பிக் மற்ற மாவட்டங்களில் இருந்தெல்லாம் ஆட்களை வரசொல்லி அங்கு மன்பயியை தாக்க திட்டமிட்டு ஒரு பொய்யான பொதுகுழு வை கூட்டியுள்ளார். வட சென்னை, தென் சென்னை , திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த சுமார் அறுபது பேர் கமலுதீன் மன்பயி மற்றும் அவருக்காக நியாயம் கேட்ட மதரசா மாணவர்கள் ஐவரையும் கண் மூடித்தனமாக தாக்கியுள்ளனர்.அது மட்டுமல்லாமல் இவ்வளவு நாள் பணியாற்றிய ஒரு ஆலிமை தரக்குறைவாக பேசி அவரது துணிகளை எல்லாம் அள்ளி வெளியில் வீசி எறிந்துள்ளனர். கடைசியில் காவல் துறை தலையிட்டு நிலைமையை சமாளித்துள்ளது!

மன்பயிக்கு நேர்ந்த கொடுமையை பார்த்த பகுதி மக்கள் அவருக்கு ஆதரவாய் களமிறங்கி , உடனடியாக ஒரு இடத்தை ஏற்பாடு செய்து , மதரசா நாளை காலை நடக்கும் என அறிவிப்பு செய்து , மறுநாள் காலை மன்பயி தலைமையில் துவங்கிய மதரசவுக்கு தெருவில் உள்ள அனைத்து குழந்தைகளும் ஆஜராகின த.த.ஜ மதரசாவை அனைவரும் புறக்கணித்தனர். மேலும் தெரு மக்கள் அனைவரும் சேர்ந்து மேற்படி இடத்தை காலி செய்யுமாறும் கூற வீட்டு உரிமையாளரும் வேறு இடம் பார்த்து சென்று விடுமாறு கூறிவிட்டாராம்! மதரசவுக்கு ஒரு மாணவரும் வராதது கண்டு த.த.ஜ வினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இனி ஒரு வேலை மற்ற மாவட்டங்களில் இருந்து வாகனம் வைத்து ஆள் கொண்டு வந்து அண்ணனே பாடம் நடத்தினாலும் ஆச்சர்ய படுவதற்கில்லை!

இந்த நிலையில் இதில் எந்த விதத்திலும் சம்பந்தமில்லாத இ,த.ஜ.வை 'மதரசாவை அபகரிக்க முயன்றதாக' எஸ்..எம்.எஸ். மூலம் அவதூறு பரப்பியுள்ளனர். 'என்னுடைய உழைப்பு ஐந்து என்றால் பாக்கருடைய உழைப்பு தொண்ணூற்றி ஐந்து சதவீதம்! பாக்கருடைய உழைப்பினால்தான் இந்த மர்கஸ் , மதரசா சொத்து ,பத்து என்று வாக்கு மூலம் கொடுத்தாரே அண்ணன்' அதையே விட்டு விட்டு வெறும் கையோடு வெளியேறியவர்கள் நாங்கள்! அல்லாஹ்வின் கிருபையால் நாங்கள் உருவாக்க கூடியவர்கள்! உங்களைப்போல் பிறருடைய உழைப்பில் உட்கார்ந்து பயன் அடைவோர் இல்லை! அதனால் தான் இரண்டு ஆண்டுக்குள்ளாக அல்லாஹ் இத்தனை வளர்ச்சியை தந்துள்ளான்.

கொசுறு செய்தியாக இது குறித்து வந்த எஸ்.எம்.எஸ். ஒன்று : டி.என்.டி.ஜே.ஆலந்தூர் மதரசா இமாம் டி.என்.டி.ஜே.வினரால் டி.என்.டி.ஜே. அலுவலகத்தில் வைத்து தாக்கப்பட்டார்! நல்ல வேலை யாரிடத்திலும் துப்பாக்கி இல்லை! .

0 comments:

Post a Comment