Thursday, November 25, 2010

தனது செயலை மார்க்க ரீதியாக நியாயப்படுத்தாதது ஏன்?


அளவற்ற அருளாளனும்,நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்... .

கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக சிறப்பாக இயங்கி வெற்றியின் சிகரத்தை நெருங்கிக் கொண்டு இருக்கும் இதஜ -வை வீழ்த்தும் நோக்கில் ,பிரபல மார்க்க அறிஞராகவும்!, அறிவாளியாகவும்! தன்னை அடையாளப்படுத்திக்கொள்ளும் அந்த அறிஞரின்[?]
கள்ள புத்தியால் [உலகில் எவனுக்குமே இல்லாத] மேற்கொள்ளப்பட்ட ஈனச்செயளையும் ,இழிச்செயளையும் அனைவரும் கா...ரி துப்பியதை நாம் அனைவரும் அறிந்த ஒன்று தான்.
நடு நிலையாளர்கள் முதல் மூளையை அவரிடம் அடகு வைத்த அவரது அபிமானிகள் வரை இதை கண்டித்த காட்சியையும் அதற்க்கு அவர்களே சாட்சியாக நின்றதையும் நாம் கண்டோம்.

இதஜ -வை கள்ளத்தனமாக பதிவு செய்த அந்த கள்ளப்பேர்வழி தனது ஈனச்செயலுக்கு
இதுவரையில் இறை வசனத்தையோ, இறைத் தூதரின் பொன்மொழியையோ சான்றுகளாக சமர்ப்பிக்காதது கவனிக்கப்படவேண்டியதும்,குறிப்பிடத்தக்கதும்,ஆகும்.

கள்ளத்தனமாக இதஜ -வை பதிவு செய்துவிட்டு மக்கள் கா ..ரி துப்பிவிடுவார்களோ! என்று நினைத்த காரணத்தினால் எடுபடாத கரணங்கள் எடுத்து வைக்கப்பட்டது. ஆனாலும் மக்கள் கா..ரி துப்பவே செய்தனர்.தான் செய்தது மார்க்க அடிப்படையில் சரியா?தவறா? என்று விளக்க வக்கற்றவர் ட்ரஸ்ட் என்று ஏன் பதிவு செய்தீர்கள்?அதை ஏன் மக்களிடம் மறைத்தீர்கள்?என்றல்லாம் கேள்விமேல் கேள்வி கேட்டு தன் நிலையை மக்கள் சரிகான முர்ப்பட்டார். ஆனாலும் மக்கள் அவரின் ஈன-இழிநிலையை முறியடித்தனர்! அல்ஹம்துலில்லாஹ்.

இதஜ -வை ட்ரஸ்ட் ஆக பதிவு செய்து மார்க்கப்பணிகளும்,சமுதாய பணிகளும் செய்து வருவதால் சமுதாயத்துக்கு என்ன பாதிப்பு? நாம் ட்ரஸ்ட் ஆக செயல் படுவதால் இவருக்கு என்ன சட்ட சிக்கல்? மாறாக நாம் நமது வழியில் அழைப்பு பணி செய்து வருகிறோம். அவர் அவரது வழியில் அவதூறு பணி செய்து வருகிறார்.இப்படி இருக்கையில் பாரதூரமான விளைவுகள் ஏற்ப்பட்டு விட்டதை போல் தனது ஈன செயலால் ஒரு தோற்றத்தை உண்டாக்குவது ஏன்? அறிவுத்தனமான கேள்விகளை கேட்டுவிட்டதாக எண்ணி
அறிவிலி யாவது ஏன்?

இதஜ –வால் சமுதாயத்துக்கு ஏற்ப்பட்ட நன்மைகளை பட்டியலிடலாமே ஒழியே ஒரு
தீமையை கூட பட்டியலிடமுடியாது.அதே நேரத்தில் இந்த சமுதாயத்திற்கு இந்த
கள்ளரால் ஏற்ப்பட்ட, நன்மைகளை விட தீமைகள் தான் அதிகம். அதை
பட்டியலிட்டால் பக்கங்கள் பத்தாது.

"மக்களிடம் நம்ம நிலைமை மோசமடைந்து விட்டது . நமது நிலைமையை சரி செய்ய
வேண்டுமானால், மக்கள் நம்பும் படியான காரணங்களை முன்வைக்கவேண்டும்.அப்படி
முன்வைப்போமேயானால் நாம் அரங்கேற்றிய ஈனசெயளுக்கு ஆதரவு கிடைத்து விடும் "என்ற ஒரு நம்பிக்கையில் தான் கேட்கப்பட்ட கேள்வியையே பலவடிவங்களில் வழங்கி தனது கிழிந்த முகத்தை ஓட்ட வைக்க பார்க்கிறார்.அவருடைய கேள்விகள் அனைத்துக்கும் நம்மிடம் பதில்
இருக்கிறது.அதை எப்படியெல்லாம் தனது வாய்வாற்றளால் வளைப்பார் என்பதும் நமக்கு தெரியும்.முதலில் அநியாயமாக ,அபாண்டமாக அமைப்பின் பெயரை அபகரித்தது சரிதான்!! என்று மார்க்க ரீதியான ஆதாரங்களை முன்வைக்கட்டும்.பிறகு நம்மை நோக்கி வினா விடுக்கட்டும்.

“எது எதுக்கெல்லாமோ மார்கத்தை வலைத்தவருக்கு இது ஒன்றும் பெரிய விஷயம்
இல்லையே! என்று உங்கள் உள்ளத்தின் ஒரு ஓரத்தில் ஒலிக்கும் ஓசை நமக்கு கேட்கிறது .இருந்தாலும் அந்த வலைப்பு தான் என்ன? என்பதையும் பார்ப்போமே!.

அத்து மீறி ஒரு வீட்டில் நுழைந்த திருடன் நீ ஏன் ?பூட்டு போடவில்லை அதுதான் நான் திருடினேன்.என்று சொன்னது போல் தான் உள்ளது இவருடைய இழி செயல்.[அமைப்பின் பெயர் அபகரிப்பு]

அடுத்த அயோக்கியத்தனத்தையும் இங்கே சுட்டி காட்ட வேண்டியுள்ளது.சிறிதளவு
மூளை கூட தன்னிடம் மிச்சம் வைக்காமல் அனைத்துமே தனது தார்மீக குருவிடம்
தாரை வார்த்த அப்பாவி நசுருதீன் என்ற தொண்டன்,குருவையே மிஞ்சிவிடும்
அளவுக்கு தனது அயோக்கியத்தனத்தை வெளிப்படுத்தி வருகிறார்.இந்த அப்பாவி
தொண்டனுடைய பிரதான வேலையே என்னவென்றால்,தனக்கு எதிரானவர்களிடம்
[இதஜ] தொலை பேசியில் தொடர்பு கொண்டு தனது வார்த்தை ஜாலங்களால் நரம்புகள்
புடைக்கும் வண்ணம் உசுப்பு ஏற்றி,மனிதர்கள் என்ற முறையில் ஏதேனும்
அவர்கள் சொல்லிவிடுவார்கலேயானால் அதை அப்படியே பதிவு செய்து தனது
தார்மீக குருவிடம்?கொண்டுபோய் சேர்த்து விட்டு அவரிடம் ஆசி பெறுவதுதான்.

நேருக்கு நேர் மோதுவதில் முதுகெலும்பு முறிந்து போன அந்த மானசீகர்?தனது
நீளத்தலத்தில்[பொய்யன்,ஆன்லைன்,அபகரிக்கப்பட்டவை] அப்படிப்பட்ட பதிவுகளை
வெளியிட்டு ,பார்த்தீர்களா?இவர்கள் எப்படி பட்டவர்கள் என்று...? என ஓலமிடுவது வழக்கம்.அந்த அடிப்படையில் தான் சகோ:அப்துல் ஹமீத் குறித்த ஒரு பதிவும் வெளியிட்டுள்ளா.. அதில் உள்ள பேச்சிக்கள் சகோ:அப்துல் ஹமீதுடையதாக இருக்குமேயானால் அவர் பேசியது தவறுதான் !அவரை அப்படி பேச தூண்டிய நசுருதீனும் தவரிழைத்தவரே ! இது யதார்த்தமாக நடந்த ஒன்றல்ல அவர்மீது களங்கம் கற்ப்பிக்கும் கெட்ட நோக்கில் திட்டமிட்டு அரங்கேற்றப்பட்டுள்ளது. எனவே இதன் பின்னணியில் உள்ள அனைவரும் குற்றவாளியே!

அப்பாவி தொண்டனாகிய நசுருதீனுக்கு அண்ணனால் ஆப்பு சீவப்பட்டு வருவது தெரியாது போலும்.பாவம் இறைவன் தான் பாதுகாக்க வேண்டும்.

எந்த அளவுக்கு வீரியமாக செயல் படுகிறாரோ அந்த அளவுக்கு இவருக்கு ஆப்பு
கூர்மையாக்கப்படுகிறது என்று அர்த்தம் .இதை இப்பொழுதே புரிந்துக்கொண்டால்
பிழைத்துக்கொள்வார்.

ஆக்கம் :முபாரக்
குவைத் மண்டலம் : இந்திய தவ்ஹீத் ஜமாஅத்

0 comments:

Post a Comment