Wednesday, November 3, 2010

ஓணானின் சாட்ச்சியத்தை ஏற்றுக்கொண்ட அதிசயம்


அளவற்ற அருளாளனும்,நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்....
ஓணானின் சாட்ச்சியத்தை ஏற்றுக்கொண்ட அதிசயம்

யாதவ மகா சபை சார்பில் நடை பெற்ற இட ஒதுக்கீடு மாநாட்டில் கலந்துக்கொண்ட
சகோ:பாக்கர் அவர்களை பாக்கர்யாதவ் என மிகவும் மட்டமான முறையில்
விமர்சித்து தன்னிடம் மூளையை தாரை வார்த்த அப்பாவி தொண்டர்களை
குஷிப்படுத்தினார் சமூதாயத்தை வழிகெடுக்கும் அந்தத் தலைவர். சகோ:பாக்கர்
அவர்கள் மாநாட்டுக்கு முன் நடை பெற்ற சிலை திறப்பு நிகழ்ழ்ச்சியில்
கலந்துக்கொண்டதாக அன்றைய நாளிதழில் வெளி வந்த செய்தியினை ஆதாரம் காட்டி
விமர்சிக்கப்பட்ட விமர்சனம் தான் இது.

சிலை திறப்பு நிகழ்ச்சியில் பாக்கர் கலந்து கொண்டதாக அவதூறு பரப்பிய
அந்த பத்திரிகை தனது தவறுக்கு மறுப்பு வெளியிட்டு பத்திரிகை தர்மத்தை
நிலை நாடிய பிறகும்,சமூதாயத்தை வழிகெடுக்கும் அந்த தலைவரின் அதிகாரத்தில்
உள்ள பத்திரிகை மட்டும் அவதூறாக தான் வெளியிட்டதுக்கு மறுப்பு
தெரிவிக்காமல் தனக்கே உரிய [பொய்களை பரப்பும்] பத்திரிகை தர்மத்தை நிலை
நாட்டி தனது ரசிகர்களின் மத்தியில் சாதனை[?]படைத்தது.

நம்மோடு இருக்கும்வரை நேரான வழியில் இருந்தார்கள் நம்மை விட்டு பிரிந்தப்
பின் தடம் புரண்டு கொள்கை மறந்து வழிகேட்டு விட்டார்கள் என்றெல்லாம்
ஒப்பாரி வைத்த அந்த தலைவர்,. 1997 -ல் பெரியகுளத்தில் நடைபெற்ற ஜாதி
கலவரத்தில் கொல்லப்பட்ட முருகன் என்ற சகோதரரின் படத்திறப்பு விழா
நிகழ்ச்சி கண்டனக் கூட்டமாக சகோ:திருமாவளவன் தலைமையில் நடை பெற்ற பொழுது
அதில் கலந்து கொண்டு இந்த மாபெரும்[?]மேதை உரை நிகழ்த்தினார்.

இஸ்லாத்திற்கு இது முரணான செயல் இல்லையா?என்று அன்றைய ஜாக் சகோதரர்கள்
வினா தொடுக்க,அவன் எது செய்தால் நமக்கு என்ன,நாம சத்தியத்தை சொன்னோமா
...
என பதிலளித்ததை சுட்டி காட்டி அவர் என்ன பறையரா? என் நாம் கேள்வி
எழுப்பி நமது நியாயமான உணர்வை வெளிபடுத்தினோம்.இந்த நிகழ்ச்சியை கண்ணால்
கண்ட சகோதரர்களை,சான்றுகளாக சமர்பித்தோம்..

ஓணானின் சாட்ச்சியத்தை ஏற்றுக்கொண்ட அதிசயம் :
நம்மை பற்றிய செய்தியை தொண்டிவிட்டார்களே என்று கோபத்தில் கொந்தளித்து
போன அந்த தலைவர் [?]உடனே பொய்களின் பிறப்பிடமான,ஆபாசத்தின் அஸ்திவாரமான
இவர்களின் நீலத்தலத்தில் [பொய்யன்], "வேலிக்கு ஓணான் சாட்சி" என்ற
தலைப்பில்,இது முற்றிலும் அவதூறு,ஒரு குற்றச்சாட்டை சுமத்துவது என்றால்
அதை சுமத்துபவர் சார்பற்றவாராக இருக்க வேண்டும் ஒரு இயக்கத்தின் எதிரிகள்
,அந்த இயக்கத்துக்கு எதிராக சாட்சி சொன்னால் ஏற்க்க முடியாது.வேலியின்
ஆதரவில் வாழும் ஓணான் வேலிக்கு ஆதராவகதான் தான் சாட்சி சொல்லும் அதுபோல்
பாக்கர் என்னும் வேலியை நம்பி பிழைப்பு நடத்தும் ஓணான்கள் சட்ச்சியத்தை
ஏற்க்க முடியாது என்று நாம் சமர்பித்த நபர்களின் சான்றுகளை நிராகரித்தார்
இந்த சத்திய சீலன்.[?]இவர் நிராகரித்தாலும் நம் மக்கள் நிராகரிக்கவில்லை.
இவரை புரிந்து கொள்ளாத சில சகோதரர்களுக்கு புரிந்துகொள்ளும் நல் வாய்ப்பை
இந்நிகழ்ச்சி வழங்கியது.அஹம் துலி....

அவதூறாக சொல்லப்படும் இந்த செய்தி ஏற்றுக்கொள்ள முடியாது.நான்
கலந்துக்கொன்டத்தை நிருபிக்கும் வீடியோ ஆவணங்கள் உண்டா ? என்றெல்லாம்
வாய் சவடால் விட்டார். ஆனால் இன்று எல்லோரும் அசந்து போகும் விதத்தில்
மோசமான ஒரு அந்தர் பல்டி அடித்து அப்படியே நாம் சமர்ப்பித்த
சான்றுகளுடன் சரணடைந்து விட்டார்.நாம் சமர்பித்த சாட்ச்சியத்தின்
வாக்குமூலத்தில் தனக்கு சாதகத்தை உணர்ந்த காரணத்தினால் தான் இந்த
சரணம்.நமது சாட்ச்சியத்தின் சாட்ச்சியம் யாருக்கு சாதகமாக
இருக்கிறது?என்பதை அறியும் முன் ஓணான் என்ற பழமொழியின் பொருத்தத்தை
பார்த்துவிடுவோம்.

பழமொழிக்கு முதல் சொந்தக்காரர் :
பாக்கர் என்ற வேலியை நம்பி,இத்தனை ஆண்டுகள் பிழைப்பு
நடத்திவிட்டு,இயக்கம் இப்பொழுது ,மரமாகவும்,பல கிளைகளாகவும் வேரூன்றி
வளர்ந்து விட்ட பிறகு இனி இந்த வேலியின் ஆதரவு வேண்டாம் என்று எட்டி
உதைத்து விட்டு மரத்தில் போய் ஒட்டிகொண்டாரே! இவர் தான் இந்த அற்ப்புதமான
பழமொழிக்கு முதல் சொந்தக்காரர்.,"எனக்கு பேசமட்டும் தான்தெரியும்...!ஜமாத்தை கட்டி காக்க தெரியாது...!பொருளாதாரத்தை வசூல் செய்ய
தெரியாது...! அவர் பங்கு 95 சதவீதம் என்றால் என் பங்கு வெறும் 5 சதவீதம்
தான்!
என்றெல்லாம் அன்று பேசிய பேச்சுக்களே இந்த பழமொழிக்கும்
அவருக்கும் அன்றைக்கு இருந்த நெருக்கத்தை உறுதி படுத்துகிறது.இனி இந்த
பழமொழிக்கும் தனக்கும் தொடர்பில்லை என்று கருதியதால் தான் நமது
சாட்ச்சிகளில் ஒருவரான ரபீக் ஜமானை அதோடு முடிச்சிபோடுகிறார் இந்த
முடிசூடா மன்னன்.

எதிரியாக இருந்தாலும் செய்த தவறு மட்டும்:
முருகன் என்ற சகோதரரின் படத்திறப்பு விழா நிகழ்ச்சியின் கூட்டத்தில்
அவர் கலந்து கொண்டதை தான் நாம் விமர்சனம் செய்தோம்.விமர்சனத்துக்கு பதில்
சொல்ல புறப்பட்ட புரோகிதர்,முருகனின் சிலை திறப்பு விழாவில் நான்
கலந்துக்கொள்ளவில்லை என்று பதில் சொல்கிறார்.சிலைக்கும்,உருவ
படத்துக்கும் வித்தியாசம் தெரியாத இவரும் இவரை சார்ந்தவர்களும் கீழ்
பாக்கம் போகவேண்டியவர்களா?இல்லை ரெண்டுக்கும் வித்தியாசம் தெரிந்தவர்கள்
கீழ் பாக்கம் போகவேண்டியவர்களா? சிந்திக்கும் சகோதரர்கள் மத்தியில்
விட்டு விட்டு விஷயத்துக்கு வருவோம்.

நமது சாட்ச்சிகளில் ஒருவரான ரபீக் ஜமானின் வாக்குமூலத்தை தொலை பேசியின்
வாயிலாக வாங்கியுள்ளார் இந்த வாய்மையாளர். [?].அதில் தனக்குசாதகமானதை
எடுத்துக்கொண்டு பாதகமானதை விட்டு விட்டார்.

மதி இழந்து,மறை கழன்று இந்தமகான் உளறுவது போல் முருகனின் சிலைதிறப்பு குறித்து ரபீக் ஜமான் கூறவே இல்லை.மாறாக முருகனின் படத்திறப்பு விழாகுரித்து தான் அவர் கூறுகிறார்.
எதையுமே மிகைபடுத்தி சொல்லும் இவரை போல் நாமும் மிகைபடுத்தி சொல்ல விரும்பவில்லை.எதிரியாக இருந்தாலும் அவன் என்ன தவறு செய்தானோ அதை
மட்டும் தான் சொல்லவேண்டும். என்ற நிலையில் நாம் தெளிவாகவே உள்ளோம்.

எனவே சிலை திறப்பு என்று இவர் சொல்வதை நாமே மறுக்கிறோம்.மாறாக படத்திறப்பு
நிகழ்ச்சி என்றே கூறுகிறோம்.எனவே ரபீக் ஜமானின் வாக்கு மூலத்தில் உள்ள
படத்திறப்பு விழாகுறித்த[சிலை திறப்பு அல்ல ]செய்தியினை திட்டமிட்டு
மறைத்து விட்டு,அந்த அவதூறு ஆசாமி கலந்துக்கொண்டது கண்டனக்கூட்டம் தான்"
என்று ரபீக் ஜமான் கூறியதை மட்டும் ஹை லைட் பண்ணிவிட்டார். இவர் என்ன
சொல்ல வருகிறார் என்றால் நடந்தது உருவ படத்திறப்பு நிகழ்ச்சியில்லை.
கண்டனக்கூட்டம் தான் அதில் தான் நான் கலந்துக்கொண்டேன் என்பதுதான்.

கண்டனக்கூட்டமாகவே வைத்துக்கொள்வோம் அந்தக்கூட்டத்தில் முருகனின் உருவப்படம் திறந்தார்களா இல்லையா?அதை மையமாக வைத்து நடந்தது தானே கண்டனக்கூட்டம். முருகா என்று அழைக்கவா! முத்துகுமரா என்று அழைக்கவா! என்றெல்லாம் பஜன பாடல்கள் ஒலித்ததாகவும் வாக்குமூலம் சொல்கிறது.
படத்திறப்பும் ,கண்டனக்கூட்டமும் தனி தனியே நடந்தது என்று கூறுவாரேயானால்,பாக்கர் கலந்து கொண்டதும் அப்படித்தான் தான்.பாக்கர் கலந்துகொண்டது தவறு என்றால் இவர் கலந்து கொண்டதும் தவறு தான்
.
ஆக ரபீக் ஜமானின் வாக்குமூலம் எள்ளளவும் இவருக்கு சாதகமாக இல்லை என்பதை ஆணித்தரமாக இங்கே பதிவு செய்து கொள்கிறோம்.

ரிமோர்ட் இல்லை வாக்கி டாக்கி :
யாதவ மகா சபை சார்பில் நடை பெற்ற இட ஒதுக்கீடு மாநாட்டில் அதன் தலைவர்
தேவநாதன் கையில் வைத்திருந்தது ரிமோர்ட் இல்லை வாக்கி டாக்கி தான் என்று
ரபீக் ஜமான் சொல்லும் கூற்றை மறுக்கும் அவதூறார்.தான் கலந்துக்கொண்டது
கண்டனக்கூட்டம் தான்" என்று ரபீக் ஜமான் சொன்னதை மட்டும்
ஏற்றுக்கொள்கிறார்.ஓணான் இவருக்கு சாதகமாக சாட்சி சொன்னால் மட்டும்
ஏற்றுக்கொள்வாராம் மற்றவருக்கு சாட்சி சொன்னால் மட்டும் மறுப்பாராம்.இது
என்னய்யா அளவுகோல். இதுவும் இவரது முரண்படும் நிலையை வெட்ட
வெளிச்சமாக்குகிறது.

ஆக்கம் :முபாரக்
குவைத் மண்டலம் : இந்திய தவ்ஹீத் ஜமாஅத்

0 comments:

Post a Comment