Tuesday, November 23, 2010

முன் இரண்டு தினம் பெருநாள் கொண்டாடிய முஸ்லிம்கள் வழி கெட்டவர்களா?

ங்களைத்தவிர முதல் இரண்டு நாட்கள் பெருநாள் கொண்டாடியவர்கள் வழிகேட்டு விட்டதாகவும்
தாங்கள் மட்டுமே நேர் வழியில் உள்ளதாகவும் சொல்லிக்கொண்டு தங்களை தாங்களே ஏமாற்றிக்கொள்ளும் அபகரிப்பு ஜமாத்தின் பிரசாரத்தால் மக்கள் கொதித்து போய் உள்ளனர்.

.கீழக்கரையில் ஒரு படி மேலே போய் பெருநாள் அழைப்பு ஆட்டோ பிரசாரத்தில் , முதல் நாள் பெருநாள் கொண்டாடுவோர் முனாபிக்குகள் என சொல்லி பொது மக்களிடம் தர்ம அடியை வாங்கிக்கட்டிக் கொண்டனர். அது மட்டுமின்றி மறு நாள் வெள்ளிக்கிழமை மாநில தலைமையகத்தில் நடந்த ஜும்மாவிலும், இதே கருத்தை சொல்ல கொதித்து போன சகோதரர் எழுந்து ' முன் இரண்டு தினங்களில் பெருநாள் கொண்டாடியவர்கள் வழி கெட்டவர்கள் என்றால் , அதற்க்கு முன் தத்தம் பகுதி, பிறை, மாவட்ட பிறை, மண்டலப்பிறை, தற்போது தமிழகப் பிறை , என வந்திருக்கும் நீங்கள் ஏற்கனவே வழிகேட்டில் இருந்தீர்களா? என கேட்க அனைவரும் அவரை நோக்கிப் பாய ,ஒரே கூச்சல் குழப்பமாகி , பின்னர் நிலைமை சரி செய்யப் பட்டதாம் !

உங்களில் யார் நேர்வழியில் உள்ளவர்கள் என்பதையும் ,யார் வழிகேட்டில் உள்ளோர் என்பதையும் அல்லாஹ் தான் அறிவான் என்பதையும் , நீங்கள் முரண் பட்டு கொண்டிருந்தவை பற்றி அந்நாளில் தீர்ப்பளிக்கப்படும்! என இறைவன் திருமறையில் தெளிவாக கூறி இருந்தும் , அல்லாஹ்வின் அதிகாரத்தை கையில் எடுத்துக்கொண்டு மற்றவர்களை வழிகேடர்கள் எனக்கூறும் அபகரிப்பு ஜமாத்தினர் உள்பட நம் அனைவருக்கும் நேர்வழி காட்ட அல்லாஹ் போதுமானவன்!

த,த.ஜ.வின் பிறை நிலைப்பாடு பற்றிய அதிரை சகோதரரின் பி.டி.எப். பைல் http://intjonline.in/sites/default/files/tntj-1.pdf
த ,த ,ஜ வின் ,தவறான பிறை கொள்கை பற்றிய வீடியோ தொகுப்பு:.
பார்க்க ;

0 comments:

Post a Comment