Tuesday, November 9, 2010

கோவையில் குழந்தைகளை கடத்தி கொன்ற மோகன்ராஜ் என்கவுண்டரில் சுட்டுக்கொலை!



கோவையில் இரண்டு குழந்தைகளை கடத்தி கொன்ற கால் டாக்ஸி டிரைவர் மோகன்ராஜ் இன்று காலை காவல் துறையினரால் என்கவுண்டரில் சுட்டு கொல்லப்பட்டுள்ளான் ! காவல் துறையினரை, அவர்களது துப்பாக்கியை பிடுங்கி, சுட முயற்சித்ததால் சுட்டுகொன்றனர்' என வழக்கம்போல் அரசு மருத்துவமனையில் கட்டுப்போட்டு படுத்திருந்து போஸ் கொடுத்தாலும் , உண்மை என்னவென்று உணர முடிகிறது!

இவர்களை கோர்டுக்கு கொண்டு வந்த போது பொது மக்கள் திரண்டு இவர்களையெல்லாம் உடனே கொல்ல வேண்டும்! என்று கோபக்குரல் எழுப்பியதன் எதிரொலிதான் இது! இவர்களை போன்ற பச்சிளம் குழந்தைகளிடம் பாலியல் கொடுமை செய்யும் ஈவிரக்கமற்ற அரக்கர்களை விசாரணை என்ற பெயரில் காலத்தையும் , பாதுகாப்பு என்ற பெயரில் காவல்துறையினரின் சக்தியையும் , சிறை என்ற பெயரில் மக்கள் பணத்தில் சோறு போடுவதையும் விட மூன்று தோட்டாக்களில் வேலையை முடிப்பதுதான் சிறந்தது!

இப்போது அந்தகுழந்தைகளின் பெற்றோர் மன நிம்மதி அடைவர்! மக்களும் திருப்தி அடைவர்! இனி இது போன்ற செயல்களில் ஈடுபடுவோர் பயப்படுவார்கள்! குற்றங்கள் குறைய வேண்டுமானால் இது போன்று தண்டனைகள் கடுமையாக்கப் பட வேண்டும்!

அது இது போன்று சட்டத்திற்கு புறம்பான என்கவுண்டர் முறையில் அல்ல!பாதிக்கப்பட்டவன் மன நிலையில் இருந்து தாமதிக்கப்படாத உடனடி நீதியாக , இஸ்லாம் சொல்லும் நீதியாக இருக்க வேண்டும்! இஸ்லாமிய குற்றவியல் சட்டங்களால் தான் இவ்வுலகில் குற்றங்கள் களையப்பட்டு அமைதியை நிலைநாட்ட முடியும் என்பதற்கு இச்சம்பவம் சாட்சியம் கூறுகின்றது!

அறிவுடையோரே பழிக்கு பழி வாங்கும் சட்டத்தில் உங்களுக்கு வாழ்வு உள்ளது!
அல்குரான்- 2:179

அநியாயமாக கொல்லப்பட்டோரின் பொறுப்பாளர்களுக்கு அதிகாரம் அளித்துள்ளோம்!
அல்குரான்- 17:33

0 comments:

Post a Comment