Saturday, November 20, 2010

பஞ்ச் பட்டிக்காட்டான்[9] just 4jokes



ஞ்ச் பட்டிக்காட்டான்
அ.தி.மு.க., பேச்சாளர் நடிகர் ராமராஜன் பேச்சு: ஜெயலலிதா ஆட்சியில், கையில் காசு இருந்தது. கருணாநிதி அளித்த பல்வேறு வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. ஒரு ரூபாய்க்கு அரிசி போடுவதை சாதனையாக தி.மு.க.,வினர் கூறுகின்றனர். ஆனால், மக்கள் ஒரு ரூபாய்க்கு அரிசி வாங்கக் கூடிய அவல நிலையைத்தான் இது காட்டுகிறது.

பஞ்ச் பட்டிக்காட்டான்; கையில காசு இருந்துச்சுன்னு இப்பிடி மொட்டையா சொன்ன எப்பிடி.? யார் கையிலன்னு தெரியவேணாமா? ஆட்சி நடத்திய உங்க அம்மா கையிலையா? அல்லது அந்த நேரத்துல கையில படம் வச்சுருந்த உங்க கையிலையா? இல்ல மக்கள் கையிலா என்று தெளிவா சொன்னா தேவலை.


தேமுதிக தலைவர் விஜயகாந்த் பேச்சு; துணை முதல்வர் ஸ்டாலினும் புதிதாக கட்சி ஆரம்பித்தவருக்கு முதல்வர் பதவி மீது ஆசை என்கிறார். நீங்கள் துணை முதல்வராக ஆசைப்படவில்லையா? இல்லை என்றால் துணை முதல்வர் பதவியை அன்பழகனுக்கோ, கோ.சி.மணிக்கோ, ஆற்காடு வீராசாமிக்கோ கொடுத்திருக்கலாமே. இல்லையெனில் மூத்தவர் அழகிரிக்காவது கொடுத்திருக்கலாமே. உங்களுக்கு ஆசை இருக்கலாம், எனக்கு ஆசை இருக்கக் கூடாதா? நான் என்ன மடமா நடத்துகிறேன்.

பஞ்ச் பட்டிக்காட்டான்; நல்லவேளை! துணை முதல்வர் பதவியை எனக்கு கொடுத்திருக்கலாமேன்னு சொல்லாம விட்டீங்களே! எனக்கு ஆசை இருக்கக் கூடாதான்னு கேட்குறீங்களே! நீங்க ஆசைப்படலாம். மக்கள் ஆசைப்பட வேணாமா?

மிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தலைவர் யுவராஜா பேசியதாவது: தமிழகத்தில் மக்களுக்கு இலவசமாக "டிவி' கொடுக்கின்றனர். ஆனால் கல்வி கொடுப்பதில்லை.

பஞ்ச் பட்டிக்காட்டான்; என்னமோ திமுக அரசு நேற்றுதான் இலவசமாக "டிவி' கொடுக்க ஆரம்பிச்சமாதிரி பேசுறீங்க; டிவி கொடுக்கிறதும், இலவச கல்வி கொடுக்காததும் தேர்தல் வரப்போகிற இந்த நேரத்துலதான் தெரிஞ்சதாக்கும்?

மதுரையில் மத்திய அமைச்சர் மு.க., அழகிரி மகன் திருமண விழாவில் தமிழக முதல்வர் கருணாநிதி பேச்சு; இந்த தம்பதியர் போலவே நமது கூட்டணியும் தொடர வேண்டும். தொடரும்.

பஞ்ச் பட்டிக்காட்டான்; கூட்டணி தொடருமா என்ற சந்தேகம் உங்களுக்கே வந்துருச்சு போல. அதுனாலத்தான் கல்யாண வீடு கூட விடாம கூட்டணி தொடரும் என்று உங்களுக்கு நீங்களே ஆறுதல் சொல்றமாதிரி தெரியுதே?

முன்னாள் மத்திய மந்திரியும், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவருமான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்;

பாரதியஜனதா, கம்யூனிஸ்டு, அ.தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்தியதின் காரணமாகவே மத்திய மந்திரி ஆ.ராசா தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

பஞ்ச் பட்டிக்காட்டான்; மத்திய அரசுக்கு நெருக்கடி ஏற்படுவதை தடுக்கவும், சுமூகமாக நாடாளுமன்றம் இயங்க வேண்டும் என்பதற்காகவும் தான் ராசா ராஜினாமா செய்தார் என்று திமுக கூற, ஜெயலலிதா வலியுறுத்தியதால்தான் ராசா ராஜினாமா செய்தார் என்று கூறி, திமுகவை தர்மசங்கடத்தில் தள்ளி விட்டீர்களே!

ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணியசாமி; தொலை தொடர்பு துறை முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசாவின் உயிருக்கு ஆபத்து இருப்பதால் அவருக்கு அதிகபட்ச பாதுகாப்பு அளிக்க வேண்டும்.

பஞ்ச் பட்டிக்காட்டான்; கூட்டணிக்கு தோட்டத்து பக்கம் சிக்னல் கிடைக்கததால, எதிர் திசை சிக்னலுக்கு அடிப்போடுறமாதிரி தெரியுது. வேடிக்கை என்னன்னா நீங்கள் சீரியஸா அறிக்கை விட்டாலும் மக்கள் அதை 'காமெடியா' எடுத்துக்கிறாங்க என்பதுதான்.

பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் பேச்சு; பாமக ஆட்சிக்கு வந்தால் 3 வேளை உணவு, உடைக்கு உத்திரவாதம் அளிக்கப்படும். வீடு இல்லை என்று பட்டா கேட்டு மனு தரும் நிலை இருக்காது.

பஞ்ச் பட்டிக்காட்டான்; 3 வேளை உணவு, உடை, வீடு இப்பிடி எல்லாமே 'ஓசில' கெடச்சா யாருமே வேலைக்கு போக வேண்டியதில்ல. அப்ப நாட்டுல ஒரு சோம்பேறி சமுதாயத்தை உருவாக்க மருத்துவர் விரும்புகிறாரோ! அது சரி! சோம்பேறியா இருந்த நோய் வரும்; நோய் வந்தா மருத்துவத்துல 'கல்லா' கட்டிகிறாலாம்னு நெனைப்போ என்னவோ?

0 comments:

Post a Comment