Thursday, November 18, 2010

நித்தமும் நாடகம்! நினைவெல்லாம் 'காவி'யம்!

First Alphabetஒப்பற்ற ஓரிறையின் திருப்பெயரால்...
சகோதரர் பாக்கர் அவர்களால் துவங்கப்பட்டு, அவரது தலைமையின் கீழ் இயங்கும் இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தில் குழப்பம் விளைவிக்கும் நோக்கில், அதே பெயரில் தனது வாரிசை தலைவராக்கி, ஒரு மைத்துனரை பொதுச்செயலாளராக, மற்றொரு மைத்துனரை பொருளாளராக, தனது மற்ற இரு இளவல்களை உறுப்பினர்களாக ,சகலையை, சகலையின் மகனை இப்படி ஒட்டுமொத்த குடும்பத்தை மட்டும் காட்டி பதிவு செய்த பீஜே,

அபகரிக்கப்பட்ட பெயரின் அதிகாரப் பூர்வ இணையதளம் என்ற பெயரில் நடத்திவரும் தளத்தில், தனது சங்கத்தின் தலைமையக முகவரி ஆரம்பத்தில் 30 அரண்மனைக்காரன் தெருவென்றும், பின்பு அடுத்த பத்து நிமிடத்தில் அங்கப்பநாயக்கன் தெருவென்றும் நாடகமாடினார்.

தனது நாடகத்தின் அடுத்த கட்டமாக, யாரை நிர்வாகிகளாக காட்டி பதிவு செய்தாரோ, அந்த குடும்ப உறுப்பினர்களை, அதாவது தலைவரான முஹம்மதை, பொதுச் செயலாளரான ஹிதாயத்துல்லாவை, பொருளாளரான ஷம்சுல் ஹுதாவை நிர்வாகிகளாக வெப்சைட்டில் அடையாளம் காட்ட திராணியின்றி, முதலில் மூன்று பேரை மாநிலச்செயலாளர்கள் என்று அடையாளம் காட்டினார். ரெண்டு நாளில் அந்த மூவரில் ஒருவரையே பொதுச்செயலாளராக அடையாளம் காட்டுகிறார்.

முதலில் அடையாளம் காட்டப்பட்ட மூவரில் ஒருவரான ஷபீக் என்பவரை காணாமல் ஆக்கிவிட்டு, இப்போது மவ்லவி ஜமால் என்பவரை மாநிலச்செயலாளர் என்று அடையாளம் காட்டுகிறார். கானல் நீரை விட வேகமாக இவர்களது வெப்சைட்டில் இருக்கும் நிர்வாகிகள் மறைவதும், புதிய நிர்வாகிகள் தோன்றுவதுமாக உள்ளனர்.

இந்திய தவ்ஹீத் ஜமாஅத் எனும் பெயரை களவாட, பயன்படுத்திய தனது குடும்ப உறுப்பினர்களை நிர்வாகிகளாக காட்ட பீஜே தயங்குவது ஏன்? உண்மையான பொறுப்பாளர்களான குடும்ப உறுப்பினர்களை மறைத்து யாரையோ பொதுச்செயலாளராக, நிர்வாகிகளாக அடையாளம் காட்டுவது ஏன் தெரியுமா?

இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தை கைப்பற்றியது கொள்கைக்காக என்று மக்களை ஏமாற்றியாகிவிட்டது. இந்த நேரத்தில் உண்மையான நிர்வாகிகளான தனது மகனையும், மைத்துனர்களையும் நிர்வாகிகளாக அடையாளம் காட்டினால்,
''ஏனப்பா! கொள்கைக்காக[!] கைப்பற்றிய இயக்கத்தை குடும்ப சொத்தாக பதிவு செய்துள்ளாயே என்று கேட்பார்கள். அதோடு, உனது மகன்களும்- மைத்துனர்களும் தவ்ஹீதுக்காக, தவ்ஹீத் ஜமாத்திற்காக செய்த தியாகங்கள் என்ன என்று கேட்டு காரி துப்புவார்கள். அதனால்தான் பதிவு செய்ய பயன்படுத்திய குடும்ப உறுப்பினர்களை மறைத்து, யார் யாரையோ நிர்வாகிகளாக காட்டியும், மறைத்தும், மாற்றியும் மக்களை ஏமாற்றுகிறார் பீஜே.

மேலும், நேச்சுரல் ஜாபர் என்பவர் பெயரில் ஒரு அறிக்கையும் அந்த வெப்சைட்டில் வெளியாகியுள்ளது. அதில் தற்போது சீனில் உள்ள மும்மூர்த்திகளின் தியாக வரலாறு பட்டியலிடப் பட்டிருந்தது. சிறுநீர் கழித்து விட்டு திரும்பி வந்து பார்த்தால், ஐந்து நிமிடத்தில் இன்றைய நிர்வாகியான ஜமால் என்பவரின் தியாக வரலாறும் சேர்ந்துவிட்டது. இவர்களின் தியாக வரலாறு குறித்து நாம் அலசவேண்டிய அவசியமில்லை.

பீஜே, பாக்கரின் அமைப்பு பெயரை பதிவு செய்யும்போது நிர்வாகிகளாக அடையாளம் காட்டினாரே! அந்த தனது இளவல்கள்- மைத்துனர்கள். இவர்கள் தவ்ஹீதிற்காக, தவ்ஹீத் ஜமாஅத்திற்காக, தமிழகத்தில் தவ்ஹீத் வளர்ச்சிக்காக செய்த தியாகங்களை பட்டியலிடத் தயாரா? கள்ளத்தனமாக பதிவு செய்யும்போது பயன்படுத்திய தனது குடும்ப உறுப்பினர்களை நிர்வாகிகளாக அறிவிக்கும் திராணி பீஜெயிக்கு உண்டா?

கெட்டிக்காரனின் பொய்யும்- புரட்டும் எட்டுநாளைக்கு என்பார்கள். இப்போது இந்த பொய்யரின் முகத்திரை ஐந்து நாளிலேயே கிழிந்து தொங்குகிறது. இன்னும் இழிவு காத்திருக்கிறது இன்ஷா அல்லாஹ்.

--
11/18/2010 07:13:00 AM அன்று இயக்கங்களின் மறுபக்கம். இல் abdul muhaimin ஆல் இடுகையிடப்பட்டது
__._,_.___

0 comments:

Post a Comment