Monday, November 22, 2010

முத்தம் ஒரு அருட்கொடை!


First Alphabet
எல்லாம் வல்ல அல்லாஹ் மனிதர்களின் உள்ளம் மகிழ்ச்சியில் நெகிழ்ச்சியில் திளைப்பதற்கு பல்வேறு அருட்கொடைகளை வழங்கி உள்ளான்.சிலவற்றை பார்த்ததுமே மகிழ்ச்சி ஏற்படும், சிலவற்றைக் கேட்டதும் மகிழ்ச்சி ஏற்படும், இன்னும் சிலவற்றை நினைத்தாலே மகிழ்ச்சி ஏற்படும்.நினைக்கும் போதே உள்ளத்தில் உவகையை ஏற்படுத்தும் விஷயங் களில் ஒன்று "முத்தம்' ஆகும்.

அன்பு, பாசம், நேசம் போன்ற வற்றை வெளிப்படுத்தவதற்கும், ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்வதற்கும் இறைவன் வழங்கிய பொக்கிஷம் முத்தம் ஆகும்.
முத்தம் என்ற வார்த்தையைக் கேட்டதும், உள்ளத்தில் சந்தோசம் வந்தாலும், அதனை மறைத்துக் கொண்டு, வெளிப்படையில் அரு வருப்பையும், முகச் சுழிப்பையும் பலர் காட்டுவதற்கு காரணம், மேலைநாட்டடவர்கள் ஒழுக்கச் சீர்கேட்டுக்கும், விபச்சாரத்திற்கும் அச்சாரமாக, தூண்டுகோலாக ஆக்கிக் கொண்டதால் இந்த அவலநிலை.

முஸ்லிம்கள்
நன்மையை ஏவி, தீமையைத் தடுக்கும்படி கட்டளை இடப் பட்ட முஸ்லிம்களோ, அல்லாஹ் வழங்கிய இந்த அருட்கொடையை அல்லாஹ்வும், அவனது தூதரும் கூறியபடி பயன்படுத்துவதில்லை.இணை வைப்பை ஊக்குவிப்பதற்கும், அடிமைத் தனத்தை வெளிப்படுத்துவதற்கும், மூட நம்பிக்கையை வளர்ப்பதற்கும், மாற்று மத கலாச்சாரத்தைப் பின்பற்றுவதற்கும், பயன்படுத்தி வருகின்றனர். அறியாமையின் காரணமாக அல்லாஹ்வுக்கு மாறு செய்கின்றனர்.

ஷிர்க் (இணை வைப்பு)
முஸ்லிம்களில் பெரும்பாலா னவர்கள் வியாபாரம் செய்து வருகின்றனர். காலையில் கடை யைத் திறக்கும்போது முதல் வியா பாரம் நடக்கும், பணத்தை வாங்கி பணப் பெட்டியில் போடுவதற்கு முன்பு பணத்தை கண்களில் ஒற்றி முத்தமிட்டு விட்டு பிறகு போடு வதைப் பார்க்கிறோம். அனுதினமும் இவ்வாறு நடைமுறைப்படுத்தவ தைக் காண்கிறோம்.
தமது ஊழியர்களோ, குழந்தை களோ காசை - பணத்தை தவற விட்டு அதனை வேண்டுமென்றோ, தவறுதலாகவோ மிதித்து விட்டால், காசை எடுத்து முத்தம் இடு, காசு பணத்தால் தான் நாம் உண்கிறோம், உயிர் வாழ்கிறோம், காசு பணம் இல்லை என்றால் எவனும் மதிக்க மாட்டான் என்று உபதேசம் செய்வதைப் பார்க்கிறோம்.
இறைவன் உணவளிக்கிறான், இறைவன் உயிர்வாழச் செய்கிறான், இறைவனால் தான் எல்லாம் நடக்கிறது என்று எண்ணிச் செயல் பட வேண்டிய முஸ்லிம்கள், காசு பணத்தால்தான் எல்லாமே நடக் கிறது என்று நம்புவதும், உபதேசம் செய்வதும் எதைக் காட்டுகிறது, காசு பணத்தை முத்தமிட்டு இணை வைப்பு செய்கிறோமா இல்லையா?

அடிமைத்தனம்
பெற்றோர்கள் தமது சிறு குழந்தைகளைப் பார்த்து (பண் டிகை காலங்களில்) தாத்தா காலை தொட்டு முத்தமிடு, பாட்டி காலை தொட்டு முத்தமிடு என்பது சர்வ சாதாரணமாக நடக்கிறது.
புதிதாக திருமணம் ஆன தம்பதி களைப் பார்த்தும், பெரியவர்கள் காலைத் தொட்டு முத்தமிட்டு ஆசிர்வாதம் வாங்கிக் கொள்ளுங் கள் என்று சொல்லக் கூடியவர்கள் முஸ்லிம்களில் ஏராளம் உண்டு.

குரு - சிஷ்யன் பணிவிடை என்கிற பெயரில், குருவின் காலைத் தொட்டு முத்தமிடுவதும், தலை வணங்குவதும் மாற்று மதத்தவர்கள் மட்டுமின்றி, முஸ்லிம்கள் மத்தியி லும் ஷேக், பீர், முரீது என்கிற பெயர்களில் தலை குனிந்து கைகளை முத்தமிடுவதும், காலைக் கழுவிக் குடிப்பதும், மரியாதை என்கிற பெயரில் நடைபெறும் அடிமைத்தனம் இல்லையா?
மாற்று மதத்துப் பெண்கள் காலையில் எழுந்ததும், குளித்து முடித்து தூங்கிக் கொண்டிருக்கும் கணவனின் காலைத் தொட்டு, தாலியைத் தொட்டு கண்களில் முத்தமிடுவதைப் பார்த்து, முஸ்லிம் பெண்களில் பலரும் தாலியைத் தமது கண்களில் ஒத்தி முத்தமிடு வதைக் காண்கிறோம். இவை எல்லாம் "முத்தமிடல்' என்ற பெயரில் நடக்கும் அடிமைத்தனம் இல்லையா?

மூடநம்பிக்கை
வீட்டிலோ, அலுவலங்களிலோ, பொது இடங்களிலோ, வேலை மும்முரத்தில் இருக்கும்போது தெரிந்தவர்கள் மீதோ, தெரியாதவர் கள் மீதோ நம்மை அறியாமல் நமது கால்கள் பட்டு விடும், சில சமயங் களில் மிதித்தும் கூட விடுவோம். அப்போது மிதி பட்டவரைத் தொட்டு முத்தமிடுகிறோமா இல்லையா?

நமது சில குழந்தைகள் விளை யாட்டில் இருக்கும்போது, விளை யாட்டு மும்முரத்தில் வீட்டு வந்த உறவினர்களை மிதித்து விடுவார் கள். அப்போது குழந்தையைப் பார்த்து, தொட்டு முத்தமிடு என்கி றோமா இல்லையா? கால்பட்ட தற்கு வருத்தம் தெரிவிக்கலாம். தெரியாமல் மிதித்து விட்டால் மன்னிப்புக் கேட்கலாம். கால்பட்ட தற்கும், தொட்டு முத்தமிடுவதற்கும் ஏதேனும் தொடர்பு உள்ளதா. இது அறிவிப்பூர்வமான செயலா? முத்தத்தின் பெயரால் செய்யும் மூடநம்பிக்கையா?

மாற்றமதக் கலாச்சாரம்
பள்ளிவாசல்களில் பாங்கு சொல்லும்போதும், பயான்கள் செய் யும் போதும், இன்ன பிற சந்தர்ப் பங்களிலும் நபி (ஸல்) அவர்களின் பெயர் பயன்படுத்தப்படுவதைக் காண்கிறோம்.
நபி (ஸல்) அவர்களின் பெயரை பாங்கு சொல்லும்போது செவியேற் றால், அதனையே திருப்பிச் சொல்ல வேண்டும் என்றும், பயான்களில் இன்ன பிற சந்தர்ப்பங்களில் நபி (ஸல்) அவர்களின் பெயரைச் செவியேற்கும்போது "ஸலவாத்' சொல்ல வேண்டும் என்றும் நமக்கு கட்டளை இடப்பட்டுள்ளது. இதனை புகாரிஉட்பட பல நபி மொழி கிரந்தங்களில் காணலாம்.
ஆனால், முஸ்லிம்களில் பெரும் பாலானவர்களின் நிலை என்ன?
நபி (ஸல்) அவர்களின் பெயரை செவியேற்கும் போதெல்லாம், இரு கைகளின் விரல்களால் கண்களைத் தொட்டு, பிறகு முத்தம் இடுவதை வழக்கமாகச் செய்வதைப் பார்க்கி றோம்.
இது நபி (ஸல்) அவர்கள் காட்டிய வழிமுறையா? மாற்று மதக் கலாச்சாரமா?
கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவர் கள்தான் தேவாலயங்களில் மணி ஓசை கேட்கும்போதும், ஏசுவின் பெயரை செவியேற்கும்போதும், கழுத்தில் தொங்கவிட்டுள்ள சிலு வையை எடுத்து கண்களில் ஒற்றி, முத்தம் இடுவதைப் பார்க்கிறோம். இது போல ஒரு முஸ்லிம் செய்ய லாமா?
""எவர் பிற மத கலாச்சாரப்படி நடக்கிறார்களோ, அவர்கள் அவர்க ளைச் சார்ந்தவராவார்''
- என்பது நபிமொழி. இதனை மறக்கலாமா?

"முத்தம்' பற்றி மார்க்கம் சொல்வது என்ன?
அனஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்
நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் (அன்னாரின் மகன்) இப்ராஹீம் வசித்து வந்த அபூ ûஸஃப் என்பவரின் வீட்டுக்குச் சென்றோம். அவர் இப்ராஹீமின் பால் குடித் தாயாரின் கணவர் ஆவார். நபி (ஸல்) அவர்கள் இப்ராஹீமை தூக்கி முகர்ந்து முத்தம் இட்டார்கள்.
ஆதார நூல்: புகாரி 1303

அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தமது பேரரான) ஹசன் பின் அலீயை முத்தம் இட்டார்கள். அப்போது அன்னாரின் அருகில் அமர்ந்து இருந்த அக்ரஉ பின் ஹாபித் அத்தமபீ (ரலி) அவர்கள் எனக்கு பத்துக் குழந்தைகள் இருக்கிறார்க்ள. அவர்களில் ஒருவரைக் கூட நான் முத்தமிட்டது இல்லை, என்று கூறினார்கள். அவரை ஏறெடுத்துப் பார்த்த நபி (ஸல்) அவர்கள், அன்பு காட்டாதவர், அன்பு காட்டப்பட மாட்டார் என்று கூறினார்கள்.
ஆதாரம்: 5997

ஆயிஷா ரலி கூறினார்கள்
ஒரு கிராமவாசி நபி (ஸல்) அவர்களிடம் வந்து நீங்கள் சிறு குழந்தைகளை முத்தம் இடுகிறீர்களா? நாங்களெல்லாம் அவர்களை முத்தம் இடுவது இல்லை என்று கூறினார். அப்போது நபி (ஸல்) அவர்கள், அல்லாஹ் உமது உள்ளத்தில் இருந்து அன்பை கழற்றி விட்ட பின் உமக்காக நான் என்ன செய்ய முடியும்? என்று கேட்டார்கள்.
மேற்கண்ட நபிமொழிகள் குழந் தைகளை, சிறுவர்களை முத்தமிட வேண்டும் என்றும், முத்தம் இடு வது அன்பின் வெளிப்பாடு என்றும், முத்தம் இடாதவன் உள்ளத்தில் அன்பு இல்லை என்றும் தெளி வாகப் பிரகடனப்படுத்துகிறது.
அது மட்டுமல்ல

ஆயிஷா (ரலி) அலி அவர்கள் அறிவிக்கிறார்கள்
நபி (ஸல்) அவர்கள் இறப்பெய்திய போது, உமர் (ரலி) அவர்கள் எழுந்து, அல்லாஹ்வின் மீது ஆணையாக! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறக்கவில்லை. எனது உள்ளத்தில் அப்படித்தான் தோன்றுகிறது. அவர் களை அல்லாஹ் (இப்போதே) நிச்சயம் எழுந்திருக்கச் செய்வான். (நபி (ஸல்) அவர்கள் இறந்து விட்டார்கள் என்று கூறிய) பலரைப் பார்த்து, கைகளையும் கால்களையும் துண்டிப்பேன் என்றும் சொன்னார்கள். (அப்போது எனது தந்தை) அபூபக்கர் (ரலி) அவர்கள் வந்தார்கள். அல்லாஹ்வின் தூதரை போர்த்தி இருந்த போர்வையை விலக்கி, அன்னாரின் (நெற்றியில்) முத்தமிட்டு, எனது தாயும், தந்தையும் தங்களுக்கு அர்ப்பனம் ஆகட்டும்! நீங்கள் உயிரோடு இருந்தபோதும் நறுமணம் கமழ்ந்தீர்கள். இறந்த நிலையிலும் நறுமணம் கமழ்கிறீர்கள்.
எனது உயிரைத்தன் கைவசம் மீது வைத்திருப்பவன் மீது சத்தியமாக! அல்லாஹ் ஒரு போதும் இரண்டு மரணங்களை சுவைக்கும்படி உங்களைச் செய்ய மாட்டான் என்று கூறிவிட்டு வெளியே வந்தார்கள்.
நெருங்கிய நண்பர்களை சந்திக் கும்போதும், பிரியும் போதும், நெற்றியில் முத்தம் இடுவதை இஸ் லாம் அனுமதிக்கிறது என் பதை இதன் மூலம் அறிந்து கொள்ளலாம்.

கணவன் - மனைவி
ஆயிஷா (ரலி) கூறுகிறார்கள்
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நோன்பு நோற்றிருக்கும்போது (தமது துணைவியரை) முத்தம் இடுவார்கள்! நோன்பு நோற்று இருக்கும் போது கட்டி அணைப்பார்கள். ஆனாலும் அவர்கள், உங்களை எல்லாம் விட தமது உணர்ச்சிகளை அதிகமாக கட்டுப்படுத் திக் கொள்ளக் கூடியவர்களாக இருந் தார்கள்.
ஆதார நூல்: புகாரி 1928,
முஸ்லிம்: 2020

தாம்பத்ய உறவுக்காக மட்டும் இன்றி, சாதாரணமாகவும் மனைவி யரை முத்தமிடுவது நபிகளாரின் நடைமுறை என்பதை இந்த ஹதீஸ் நமக்கு விளக்குகிறது.
ஜாபிர் (பின்) அப்துல்லாஹ் (ரலி) கூறினார்கள்:
என்னிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ஜாபிரே! திருமணம் முடித்துக் கொண்டாயா? என்று கேட்டார்கள். நன் ஆமாம் என்றேன். கன்னி கழிந்த (விதவைப்) பெண் ணையா? கன்னிப் பெண்ணையா? என்று கேட்டார்கள். (கன்னிப் பெண்ணை) அல்ல, கன்னி கழிந்த பெண்ணைத்தான் (மனம் முடித்துக் கொண்டேன்) என்று கூறினேன். கன்னிப் பெண்ணை மணம் முடித்து இருக்கலாமே, அவளும் நீயும் கொஞ்சிக் குலாவி இருக்கலாமே! என்று கூறினார்கள். உனக்கு என்ன நேர்ந்தது? கன்னிப் பெண்களும், அவர்களின் உமிழ் நீரும் உமக்கு வேண்டாமா? என்று கேட்டார்கள்.
புகாரி: 4052, 5080

இந்த நபிமொழி முத்தம் இடு வது என்பது நபி (ஸல்) அவர்களுக் குரியது மட்டுமல்ல, பொதுவான சட்டம் தான் என்பதைத் தெளிவாக விளக்குகிறது.
நபி (ஸல்) கூறினார்கள்:
ஆண்களாகிய நீங்கள் மிருகங்க ளைப் போல் நடந்து (தாம்பத்ய உறவு) கொள்ளாதீர்கள். (உறவுக்கு முன்) "தூது அனுப்புங்கள். அதன் பிறகு தாம்பத்ய உறவு செய்யுங்கள் என்று கூறியபோது, தூது என்றால் என்ன? என்று நபித் தோழர்கள் கேட்டார்கள். அது முத்தங்க ளைப் பரிமாறிக் ùôகள்வது ஆகும் என்று நபி (ஸல்) அவர்கள் பதில் கூறினார்கள்.

மொத்தத்தில் முத்தம் என்பது அன்பு, ஆசை, பாசம், நேசம் ஆகியவற்றின் தூது ஆக செயல்படுத்தப்பட வேண்டி யது என்றே மார்க்கம் கூறுகிறது. சிறுவர்கள் மீது ன்பு செலுத்த, நண்பர்கள் நேசத்தை வெளிப் படுத்த, மனைவியை ஆசையோடும் பாசத்தோடும் அணுக இறைவன் முத்தம் என்ற வெகுமதியைத் தந்துள்ளான்.

முத்தம் இடுமுறை
உதட்டால் முத்தம் இடலாம், ஒருவரைத் தொட்டு கரத்தை முத்தம் இடலாம். சைகையிலும் முத்தம் இடலாம். ஏனெனில் நபி (ஸல்) அவர்கள், கஅபாவில் உள்ள "ஹஜ்ருல் அஸ்வத்' என்ற கருப்பு நிறக் கல்லை, உதட்டால் முத்த மிட்டு உள்ளார்கள். அதனை தொட்டு கரத்தை முத்தமிட்டு உள் ளார்கள். சைகையின் மூலமும் அதனை முத்தம் இட்டு உள்ளார் கள்.
குறிப்பு: ஹஜ்ருல் அஸ்வத் என்னும் கருப்புக் கல்லை தொட்டு முத்தம் இடுவது மூட நம்பிக்கையா? இல்லையா? என்பது பற்றி அடுத்த இதழில் அறிந்து கொள்வோம்.
இன்ஷா அல்லாஹ்.

நன்றி- தௌஹீத் மாத இதழ்.
சந்தா தொடர்புக்கு-9941828477

0 comments:

Post a Comment