Wednesday, November 17, 2010

அண்ணே! எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும்

First Alphabetஒப்பற்ற ஓரிறையின் திருப்பெயரால்...
வான்பிறை வளர்ந்து தேயும் என்பதை நாம் அறிந்து வைத்துள்ளோம். அதுபோல் பீஜேயின் கைப்பிடிக்குள் மாட்டிக்கொண்ட ததஜவும் தேய்பிறையாக தேய்ந்து கொண்டு வருவதை, திருவிடைச்சேரி சம்பவத்திற்கு பிறகும் பீஜேயின், பாக்கர் அமைப்பு ஆக்கிரமிப்புக்கு பின்பும் கண்கூடாக உலகம் கண்டு வருகிறது.

அதேபோல் பிறை விஷயத்திலும் பீஜேயின் நிலைப்பாடு ஆரம்ப காலம் தொட்டு, தத்தமது பகுதி பிறை, மாவட்ட பிறை, மண்டலப்பிறை, மாநிலப் பிறை என்று எண்ணற்ற வடிவத்தில் பீஜேயின் பிறைக் கொள்கை தேய்ந்து வருவதை காண்கிறோம். தமது மாநிலப் பிறைக்கு ஆதாரமாக இவர் வைக்கும் ஹதீஸ் இதோ;

”நீங்கள் நோன்பு என முடிவு செய்யும் நாள் தான் நோன்பு ஆகும். நோன்புப் பெருநாள் என நீங்கள் முடிவு செய்யும் நாள் தான் நோன்புப் பெருநாள் ஆகும். ஹஜ்ஜுப் பெருநாள் என நீங்கள் முடிவு செய்யும் நாள் தான் ஹஜ்ஜுப் பெருநாள் ஆகும்” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: திர்மிதீ

இந்த ஹதீஸை வைத்து மாநிலப் பிறை முடிவெடுக்கும் இவர்கள், இந்தியப் பிறை என தீர்மானிக்க இந்த ஹதீஸில் என்ன தடை என விளக்கத் தயாரா? மேலும் இறைத்தூதர்[ஸல்] சொன்னபடி மக்கள் முடிவு செய்த நாளை புறக்கணித்து, நாட்டின் எந்த மூலையிலும் எவரும் கொண்டாடாத நாளில் பெருநாள் என அறிவித்து கேலிக்குள்ளாகி நிற்பதை காண்கிறோம்.

மேலும், அரசு முஸ்லிம்கள் கொண்டாடும் பண்டிகைக்கு வழக்கமாக தானாக முன்வந்து விடுமுறை அளிப்பதை அனைவரும் அறிவோம். ஆனால் தாங்கள் அனாதையாக கொண்டாடும் பெருநாளுக்கு 'லீவு' கேட்டு புதுவை முதல்வரை சந்தித்து அய்யா! லீவு கொண்டுங்கய்ய்யா!!என மனு கொடுத்துள்ளனர். அது கீழே;

புதுவை மாநிலத்தில் கடந்த 15-11-2010 அன்று புதுவை முதல்வரை புதுவை TNTJ நிர்வாகிகள் சந்தித்து வருகின்ற 18 ஆம் தேதி ஹஜ் பெருநாளாக இருப்பதால் அன்று விடுமுறை அறிவிக்குமாறு வழியுறுத்தி மனு அளித்தனர்.

அதுசரி! தமிழ்நாடு முதல்வரை சந்தித்து 'லீவு லெட்டர்' குடுக்கலியா? ஏன் புதுவை மாதிரி 'ஈசியா' முதல்வரை சந்திக்க முடியலையோ!

அண்ணே! எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும்.
குர்ஆண்-ஹதீஸ் வழிமுறைப்படி 18 ம் தேதி பெருநாள்[!] என்று நீங்கள் ஒருபுறம் அறிவிக்க, அதற்கு மாற்றமாக அதாவது உங்கள் வாதப்படி நபிவழிக்கு மாற்றமாக 17 ம் தேதி பெருநாள் கொண்டாடி, குர்பானி கொடுத்தவர்களிடம் உங்கள் அமைப்பினர் குர்பானித் தோலை கீழக்கரையில் வசூலித்த கதை தெரியுமா? அது எப்படின்னே அவங்க கொண்டாடுன பெருநாள் மட்டும் தப்பு. அவங்க குடுத்த குர்பானி மட்டும் சரியா? இது நபிவழிப்படி சரியா? கொஞ்சம் சொல்லுங்கண்ணே!

--

0 comments:

Post a Comment