Friday, November 12, 2010

அடுத்தவன் சொத்தை அநியாயமாக அபகரிப்பதுதான் தவ்ஹீதா?

ஏகன் அல்லாஹுவின் திருப்பெயரால்...
அன்பிற்கினிய கொள்கை(?) ச்சகோதரர்களே...
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
இறைவனின் மாபெரும் கிருபையாலும் அதே நேரம் அண்ணன் பீ.ஜெ வின் சீரிய அறிவார்ந்த குர் ஆன் ஹதீஸ் தெளிவுரைகளினாலும் இன்றைக்கு தவ்ஹீத் (ஏகத்துவ ) கொள்கையில் இருப்பவர்களில் நானும் ஒருவன் ...இதை சொல்வதில் நமக்கு வெட்கம் இல்லை ...ஆனால் இன்றைக்கு அண்ணன் பி.ஜெ யின் திருவிளையாடல்களை பார்க்கையில் தலை சுற்றி வருகிறது..!

இந்திய தவ்ஹீத் ஜமாஅத் என்ற பெயரில் தனியார் ஹஜ் நிறுவனங்களை தடை செய்ய கோரி, ஒரு போஸ்டரையும், வரும் 18ஆம் தேதி ஹஜ்பெருநாள் என்று மற்றொரு போஸ்டரையும் அடித்து சென்னை உள்ளிட்ட சில ஊர்களிலும் ஒட்டியும் , தங்களது
தொலைகாட்சி நிகழ்ச்சிகளில் விளம்பரப்படுத்தியும் வருகின்றனர்... என்ன இவர்களின் அமைப்பு பணிகள் ..?

யாரை இவர்கள் முட்டாள் களாக்குகிறார்கள்..

டி. என் .டி. ஜெ விலிருந்து என்றைக்கு பாக்கர் உள்ளிட்டவர்கள் வெளியேறினார்களோ அதன் பிறகு ஐ .என்.டி. ஜெ பெயரில் அவர்கள் இயங்கி வருவதை சமுதாயம் நன்கறியும் கடந்த வருடம் ஜனவரி 16, 2009 இல் துவக்கப்பட்ட இந்திய தவ்ஹீத் ஜமாஅத்பெயரால்... ஒரு புதிய அமைப்பு துவங்கப்பட்டு (பீ.ஜெ யால் துவக்கப்பட்டதாக சொல்வதை நம்பாமல் இருக்க முடியவில்லை) அந்த அமைப்பு டி.என்.டி.ஜெ விற்கு ஆதரவு என்று சொன்ன உடன் அதை விளம்பரப்படுத்துவதா?

பீ.ஜெ தனது 3 மகன்கள், தனது தம்பி, 3 மைத்துனன்கள், தன் சகளை மற்றும் சகளை மகன் உள்ளிட்ட 8 பேர்களை நிர்வாகிகள் என காட்டி, இந்திய தவ்ஹீத் ஜமாஅத் என்ற பெயரில் ஒரு அமைப்பை பதிவு செய்து குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறார் என்று சொல்வதில் எந்த அளவிற்கு உண்மை என்பதை டி.என்.டி.ஜெ.வினர் தெளிவு படுத்துவார்களா..?

இறைநேசன்

0 comments:

Post a Comment