Monday, November 22, 2010

தென் சென்னை மாவட்ட பொதுக்குழு!

தென் சென்னை மாவட்ட பொதுக்குழு கூட்டம் சென்னை திருவல்லிக்கேணி மர்கசில் ஞாயிறன்று நடை பெற்றது ! பொதுக்குழுவில் கடந்த இருபத்தி இரண்டு மாத செயல்பாடுகளை அலசி ஆராயப்பட்டன! தலைவர் எஸ்.எம்.பாக்கரிdam கிளை நிர்வாகிகள் தங்கள் கிளை மாவட்ட நிர்வாகத்தின் செயல் பாடுகளை விளக்கி கூறினார்கள் .

இ .த . ஜ . வில் தற்போது பி .ஜே .வின் பித்தலாட்டத்தால் நிகழ்ந்த பெயர் அபகரிப்பு பற்றி மாநில செயலாளர் செங்கிஸ் கான் விரிவாக எடுத்துரைத்து 'கொள்கை சகோதரர்களுக்கு இடையில் குழப்பத்தை ஏற்படுத்தி குளிர்காய நினைக்கும் பி.ஜே.வின் விசயத்தை மாநில நிர்வாகம் சட்ட ரீதியாக அணுகும்! நீங்கள் த,த .ஜ. மாவட்ட கிளை நிர்வாகிகள் வரம்பு மீறி ,நமது பெயரில் போஸ்டர் .ஓட்டினாலோ அல்லது நம் போஸ்டரை கிழித்தாலோ பொறுமையை கையாண்டு நிதானத்தை கடைபிடியுங்கள் விரைவில் இப்பிரச்சனைக்கு அல்லாஹ்வின் உதவியால் முற்றுப்புள்ளி வைக்கப்படும் என கூறினார் .

மேலும் சிறப்பு அழைப்பாளராக முன்னால் த.த.ஜ.வளைகுடா பொறுப்பாளர் .அதிரை ஜமால் மக்கள் ரிப்போர்ட் பற்றி எடுத்துரைக்கும் பொது ஆரம்ப காலங்களில் உணர்வு பத்திரிக்கையை பள்ளி வாயில்களில் நின்று விற்றதை நினைவு கூர்ந்து பொதுக்குழு உறுப்பினர்களுக்கு பத்திரிக்கையின் முக்கியத்துவத்தை எடுத்து கூறினார். , கோவை ஜாபார் ,அப்துல் ஹமித் தொண்டியப்பா . முஹம்மத் மைதீன் , கலிமுல்லாஹ் உள்ளட்ட மாநில நிர்வாகிகள் கலந்து கொண்டனர் .

இறுதியில் நிர்வாக தேர்தல் நடை பெற்று புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்க பட்டனர் .மாநில செயலாளர் இணையதுல்லாஹ்வை மாவட்ட நிர்வகததிற்காக அனுப்பி வைக்க வேண்டி கோரிக்கை வைத்ததை ஏற்று இணையதுல்லாஹ் மாவட்ட நிர்வாகத்திற்கு சென்றார் .மேலும் தாயிக்களின் பொறுப்பை கவனித்து வருவதால் மாநில நிர்வாக குழு கூட்டங்களிலும் கலந்து கொள்வர் என முடிவெடுக்க பட்டது!

தென் சென்னை மாவட்ட புதிய நிர்வாககுழு:
தலைவர்- இனாயத்துல்லாஹ்
செயலாளர்- காஜா கரிமுல்லாஹ்
பொருளாளர்- மடுவை சாகுல் ,
து.தலைவர்- யூனுஸ் பாஷா
துணை செயலர்கள் - பயாஸ், முன்சு கனி
வர்த்தக அணி - ஆசாத் நகர் சேட்
தொண்டரணி - எம்.எம்.டி.எ.செய்யத்
மருத்துவ அணி -கிருஷ்ணம் பேட்டை காஜா

0 comments:

Post a Comment