அல்லாஹ்வின் பேரருளால் இந்திய தவ்ஹீத் ஜமாத்தின் கோவை மாவட்டம் மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது! அதன் செயல் வீரர்களின் பங்களிப்பை உயர் நீதி மன்ற முற்றுகையில் கண்டோம். அதன் தொடர்ச்சியாக கோவை மாவட்டத்தில் பல நகர, கிளை நிர்வாகங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.
கடந்த வாரம் ஆனைமலை ஒன்றியம், நகரம் அமைக்கப்பட்டு அதன் நிர்வாகிகள் தேர்ந்தெடுக்க பட்டனர். இந்த வாரம் கோவை மாநகரம் , கவுண்டம்பாளையம் நகரம், குனிசை நகரம் ஆகியவை அமைக்கப்பட்டு நிர்வாகிகள் தேர்ந்தெடுக்க பட்டனர். கோட்டைமேடு எம்.வி.எம். சங்க ஹாலில் நடை பெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர் அப்துல் ரஹ்மான் கோவை ஜாபர் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்
0 comments:
Post a Comment