தமிழ் நாடு எய்ட்ஸ் கட்டுப்பட்டு சங்கம் மற்றும் மாநில குருதி கொடையாளர் குழுமம் வழங்கும் 2009 ஆண்டுக்கான இரத்த தான விருதுகள் இன்று சென்னை சேத்துபட்டு சின்மயா ஹாலில் -ல் வழங்கப்பட்டன !
இதில் அமைச்சர் எம்,ஆர்.கே பன்னீர் செல்வம் , மாநகர மேயர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகிக்க , தமிழ் நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கத்தின் நிர்வாக இயக்குனர் அமுதா விருதுகளை வழங்கினார். இதில் இந்திய தவ்ஹீத் ஜமாத்தின் இரத்த தான சேவையை பாராட்டி எட்டு விருதுகள் வழங்கப்பட்டன!
உதிரம் கொடுப்போம் ! உயிர் காப்போம் ! என்ற உயரிய நோக்கோடு , உன்னத சேவையாற்றும் இந்திய தவ்ஹீத் ஜமாத்தின் மாநில மருத்துவ அணி செயலர் கலிமுல்லாஹ் , மற்றும் வடசென்னை தென் சென்னை , காஞ்சி மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு விருதுகளை பெற்றுக்கொண்டனர். புகழனைத்தும் இறைவனுக்கே!
0 comments:
Post a Comment