''நாளை நமக்கும் இக்கதிதான் ஏற்படும் என்பதை உணராத சிலர், தனிநபருக்காக ஒரு ஜமாஅத் போராட்டத்தில் ஈடுபடுவதா? என கூக்குரலிடுகின்றனர். நரகத்தின் விளிம்பிலிருந்த தமிழக முஸ்லிம்களை பாதுகாக்க போராடியதில், இந்த தனிநபருக்கு பெரும்பங்குண்டு.'' என்ற வாதத்தை வைத்து, நக்கீரனுக்கு எதிராக நடத்தப்படட் 'தக்லீது' போராட்டத்தை நியாயப்படுத்துகிறது அண்ணன் ஜமாஅத்.
இந்த வாதம் சரியா? என்று பார்ப்பதற்கு முன்னால், ஒரு வாதத்திற்கு இவர்தான் தமிழக முஸ்லிம்களின் 'நரக மீட்பர்' என்றே வைத்துக் கொண்டாலும், இவரை யாரும் விமர்சிக்கவே கூடாது என்ற சட்டம் எதுவும் உள்ளதா?
நீதிமன்ற தீர்ப்பை விமர்சித்தால், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு போட முடியும் என்ற சட்டம் இருந்தும், பாபர் மஸ்ஜித் விஷயத்தில் நீதிமன்றத்தின் அநியாயதீர்ப்பை அண்ணன் உட்பட, முஸ்லிம்கள் அனைவரும் எதிர்க்கும்போது, இவரை பற்றி மட்டும் விமர்சித்தால், போராட்டம்-முற்றுகை என்றால் இவர் என்ன குறைகளுக்கு அப்பாற்பட்ட மலக்கா?
அடுத்து அவர்களின் வாதத்திற்கு வருவோம். நரகத்தின் விளிம்பிலிருந்த தமிழக முஸ்லிம்களை மீட்டதில் இவருக்கு பெரும் பங்குண்டாம். தமிழக முஸ்லிம்கள் நரகத்தின் விளிம்பில்தான் நின்றார்கள் என்று இவர் எப்படி அறிந்து கொண்டார்? இவருக்கு என்ன வஹியா வருகிறது?
முஸ்லிம்கள் இணைவைத்துக் கொண்டிருந்தார்கள். அதனால் நரகத்தின் விளிம்பில் நின்றார்கள் என்று கூறினோம் என்று கூற வருவீர்களானால், எல்லா தமிழக முஸ்லிம்களுமா இணைவைத்துக் கொண்டிருந்தார்கள்?
மேலும் ஒரு போராட்டத்தில் தனக்கு பெரும் பங்குண்டு என ஒருவர் எப்போது கூறிக்கொள்ளலாம் என்றால், அந்த போராட்டத்தில் ஓர் முடிவு எட்டப் பட்டிருக்க வேண்டும். ஒன்று வெற்றி அல்லது தோல்வி. அதாவது அண்ணன் உரிமை கொண்டாடும் போராட்டமான 'நரகத்திலிருந்து மீட்பு' என்பதை பொருத்தவரை நரகத்திலிருந்து உறுதியாக தமிழக முஸ்லிம்கள் மீட்கப்பட்டிருக்க வேண்டும்.
அந்த வகையில் தமிழக முஸ்லிம்களில் இத்தனை லட்சம் பேரை, அல்லது இத்தனை ஆயிரம் பேரை, அல்லது இத்தனை நூறு பேரை, அல்லது ஒரு பத்து பேரை, அல்லது ஒரே ஒருவரையாவது நான் நரகத்திலிருந்து மீட்டிவிட்டேன் என்று அண்ணனால் உறுதியாக கூறமுடியுமா? அட அவ்வளவு வேண்டாம். 'நரக மீட்பர்' என்று தன்னை சொல்லிக்கொள்ளும் அண்ணன், நான் நரகம் செல்லமாட்டேன் என்று தன்னளவில் உத்திரவாதம் தரமுடியுமா?
சரி. தனது நரகமீட்பில் தோல்வி என்றும் உறுதியாக கூறமுடியுமா? என்றால் அதுவும் முடியாது. எனவே தமிழக முஸ்லிம்களில் எவர் நரகம் செல்வர்- எவர் சொர்க்கம் செல்வர் என இறைவனின் பதிவேட்டில் உள்ளதுதான் நடக்கும். இதில் அண்ணன் பில்டப் செய்வதாக இருந்தால், குறைந்தது தன்னளவில் உத்திரவாதம் தரட்டும்.
இன்னும் சொல்லப்போனால், கேமராவின் வெளிச்சத்திலும், இரவை பகலாக்கும் வெளிச்சத்திலும், அலங்கரிக்கப்பட்ட மேடையில் முழங்கும் இவரைப்போல், பலத்த எதிர்ப்புகளுக்கு மத்தியில் அழைப்பு பணி செய்த அல்லாஹ்வின் தூதர்[ஸல்] அவர்களோ,தங்களின் உயிர் பொருள் அனைத்தையும் தனது மார்க்கம் வளர்த்த சஹாபாக்களோ, ஒரு ஹதீஸை பெற பலநூறு கிலோ மீட்டர் பயணித்த இமாம்களோ, இறை பொருத்தத்தை மட்டுமே நாடி அழைப்பு பணியாற்றும் இன்றைய நல்ல அறிஞர்கள் எவருமே தங்களை 'நரக மீட்பர்' என்று பெருமையடித்துக் கொள்ளவில்லை. இதிலும் அண்ணன் தனித்து விளங்குகிறார்.
இன்னும், நீங்கள் (நரக) நெருப்புக் குழியின் கரை மீதிருந்தீர்கள்; அதனின்றும் அவன் உங்களைக் காப்பாற்றினான் - இது அல்லாஹ்வின் கூற்று.
'நரகத்தின் விளிம்பில் இருந்த தமிழக முஸ்லிம்களை மீட்க போராடினேன்- இது அண்ணன் கூற்று.
இதில் எதை பின்பற்றவேண்டும் என்பதை நடுநிலையாளர்கள் சிந்திக்கவேண்டுகிறோம்.
--
10/18/2010 09:42:00 AM அன்று இயக்கங்களின் மறுபக்கம். இல் abdul muhaimin ஆல் இடுகையிடப்பட்டது
0 comments:
Post a Comment