Friday, October 22, 2010

ஒரு SMS-ஸில் 10 ஆயிரம் பேரை கூட்டுவேன் என சவால் விட்ட அண்ணனின் பந்தா என்னாச்சு..?

அண்ணன் பிரச்சினை என்றால் அடுத்த வாரமே போராட்டம்; அல்லாஹ்வின் ஆலய பிரச்சினை என்றால் அடுத்த வருஷம் போராட்டமா? என்ற ஒரு ஆக்கம் நாம் வரைந்திருந்தோம். இதற்கு பதிலளிக்கக் புகுந்த அண்ணனின் ஆசி பெற்ற 'பொய்யன் டிஜே' கீழ்கண்டவாறு உளறியுள்ளது.

''பீஜே சம்மந்தப்பட்ட விஷயமானாலும், தவ்ஹீத் ஜமாஅத் பற்றிய விஷயமானாலும் அதற்காக போராட்டம் நடத்துவது என்றால் தவ்ஹீத் ஜமாஅத்தினர் மட்டுமே கலந்து கொள்வார்கள். தவ்ஹீத் ஜமாஅத்தில் இல்லாதவர்கள் யாரும் இதில் கலந்து கொள்ள மாட்டார்கள். ஆனால் பாபர் மஸ்ஜித் பிரச்சனைக்கான போராட்டங்கள் தவ்ஹீத் ஜமாஅத்தில் இல்லாதவர்களும் பங்கேற்று வலிமையாக நடத்தப்பட வேண்டிய போராட்டம்.

தவ்ஹீத் ஜமாஅத் சம்மந்தப்பட்ட போர்ராட்டங்களை உடனே அறிவித்தால் ஒரு குறுஞ்செய்தி மூலம் மக்கள் வந்து சேர்ந்து விடுவார்கள். எனவே அதற்கு அதிக அவகாசம் தேவை இல்லை. ஆனால் மற்றவர்களையும் திரட்டி நடத்தப்படும் போராட்டம் என்றால் அதை மக்களிடம் கொண்டு செல்வதற்கு உரிய அவாகாசம் எடுக்க வேண்டும். மக்களை அழைத்து வருவதற்கான வாகன ஏற்பாடு செய்ய வேண்டும். அதற்கும் போதுமான அவகாசம் வேண்டும். இதையெல்லாம் கருத்தில் கொண்டு தான் தவ்ஹீத் ஜமாஅத் ஜனவரியில் போராட்டம் அறிவித்துள்ளது''.

அதாவது பீஜே மற்றும் ததஜ சம்மந்தப்பட்ட போராட்டங்களுக்கு ஒரு குறுஞ்செய்தி போதுமாம்; அவகாசம் தேவையில்லையாம். ஏனெனில் அதில் ததஜவினர் மட்டுமே கலந்து கொள்வார்களாம். இதிலிருந்து தெரிவதென்ன? பீஜெவையோ, ததஜவையோ ஒட்டு மொத்த முஸ்லிம்கள் அங்கீகரிக்கவில்லை என்பதுதானே? அப்படி முஸ்லிம்கள் அங்கீகரித்திருந்தால், பீஜெவுக்கும், ததஜவுக்கும் ஒரு பிரச்சினை என்றால் அணிவகுத்திருக்க வேண்டுமே? ஆக இவர்கள் வாக்கு மூலப்படி, நக்கீரன் போராட்டத்தில் அண்ணன் ஜமாஅத்தினர் தவிர வேறு எந்த முஸ்லிம்களும் பங்கேற்கவில்லை என்பது உறுதியாகிறது.

அடுத்து பாபர்மஸ்ஜித் பிரச்சினை மற்றவர்களையும் திரட்டி நடத்த வேண்டியிருப்பதால் இவர்களுக்கு அவகாசம் வேணுமாம். ஆறுமாத காலம் அவகாசம் எடுத்து செய்வதற்கு இது என்ன மாநாடா? ஒரு தீர்ப்பு விஷயத்தில் அன்று எதிர்ப்பு காட்டுவது பயன்தருமா? ஆறுமாதம் ஆறப் போட்டு எதிர்ப்பது பயன்தருமா என்று கூட இவர்கள் சிந்திக்கவில்லை.

மேலும், இவர்கள் இதே பாபர் மஸ்ஜித் பிரச்சினைக்காக ஒவ்வொரு டிசம்பர்-6 அன்று போராட்டம் நடத்தினார்களே! அதுபோல மாவட்டம் தோறும் கத்த வேண்டியது தானே? மாநில அளவில் அதுவும் தீவுத்திடலை மிஞ்சும் அளவுக்கு கூட்டம் திரட்டுவதன் நோக்கம், சட்டத்தை எதிர்த்தா? அல்லது சட்டமன்ற தேர்தல் பலனை எதிர்பார்த்தா?
அடுத்து அண்ணன் சமீபத்தில் ஜமாலியோடு விவாதம் செய்யும்போது, தனது இயக்கத்தின் வீரியம் (!) பற்றி பேசும்போது,

''எங்கள் ஜமாஅத்தின் வீரியம் நாங்கள் சவால்விட்டு ஒரு எஸ்.எம்.எஸ்.ஸில் பத்தாயிரம் பேரை உடனே கூட்டிக்கட்டுவோம். உங்களால முடியுமா? என்றாரே அண்ணன்!
ஒரு எஸ்.எம்.ஸில் 10 ஆயிரம் பேரை கூட்டும் வலிமை கொண்ட இயக்கத்திற்கு மாதக்கணக்கில் அவகாசம் எதற்கு? அதுவும் ஒட்டுமொத்த முஸ்லிம்களும் உணர்ந்துள்ள பாபர் மஸ்ஜித் பிரச்னைக்கு? (அப்படியானால் ஜமாலியுடன் வாய் சவடால் விட்டாரோ அண்ணன்....!!)

ஆக, நாங்கள் கூட்டம் சேர்க்க வேண்டு மென்றால் ஊர் ஊராக போய் ஒப்பாரி வைத்து மக்களை அழைக்க வேண்டும். எனவே அவகாசம் வேண்டும் என்று அண்ணன் ஜமாஅத் கூறுவதிலிருந்து, ஒரு எஸ்.எம்.எஸ்.ஸில் 10 ஆயிரம் பேரை கூட்டுவேன் என்று அண்ணன் சொன்னது 'பில்டப்' என்பது புலனாகிறது. இல்லை அண்ணன் சொன்னது போல் வீரியம்[!] இருப்பதாக கூறுவார்களானால், போராட்டத்தை உடனடியாக நடத்திக் காட்டி நிரூபிக்கட்டும்.
-அப்துல் முஹைமீன்.

0 comments:

Post a Comment