நக்கீரனில் வெளிவந்த பி.ஜே.வை பற்றி வெளிவந்த பேட்டிக்காக நான்கே நாட்களில் நக்கீரனை' கண்டித்து என்று கண்டனபோரட்டங்கள் நடத்திய துப்பாக்கி ஜமாத்தினர், பாபர் மஸ்ஜித் தீர்ப்புக்காக பல மாதங்கள் கழித்து போராட்டம் நடத்த போவதாக அறிவித்துள்ளனர்.அது சரி அண்ணின் கண்ணியத்தை குறித்து வந்த செய்தியை விட ,அல்லாஹ்வின் பள்ளி குறித்து வந்த அநீதியான தீர்ப்பென்ன பெரிதா? ஆகையால் அடுத்தவருடம் பொறுமையாக போராடலாம்! இதுவே விருப்பத்துடன் நடத்தும் போராட்டமா? இ.த.ஜ. அறிவித்த போராட்டத்தால் ஏற்பட்ட நிர்பந்தம் தானே!
நக்கீரன் போராட்டத்தில் அண்ணனை பற்றி எழுதியதால் அனைத்து முஸ்லிம்களையும் தீவிரவாதிகளாக சித்தரித்து விட்டதாக 'குய்யோ முறையோ' என குதித்தவர்கள் 'சிமி தீவிரவாதிகளான பாக்கர், ஜவஹிருல்லாஹ்வை கைது செய்' 'பாப்புலர் பிரான்ட் பயங்கரவாத இயக்கம்'என சங்க பரிவார் பாணியில் போஸ்ட் அடித்த போது 'முஸ்லிகளை தீவிரவாதிகளாக சித்தரிக்கும்' என்ற சொற்றொடர் தெரியாமல் போனதும் , திருவிடசேரி கொலை தொடர்பான கூட்டமைப்பின் போஸ்டரை பற்றி சொல்லும் போது 'இந்த போஸ்டர் அடித்தவர்கள் இதை வேறு நல்ல காரியத்திற்கு பயன் படுத்தியிருக்கலாம் ' என்று சொன்ன 'புத்திமதியும்' இவர்களுக்கு இல்லை போலும்!
'ஜாக் அமைப்பிற்கு உண்டியலில் பணம் வருகிறது உளவுத்துறை ஒழுங்காக குறித்துக்கொள்' ' ஹாமித் பக்ரி லஸ்கர் தொடர்புள்ளவர்' என்று காலம் காலமாக காட்டிக்கொடுக்கும் வேலை செய்பவர்களிடம் 'சிமி தீவிரவாதி என்ற சொல்லை தவிர வேறு எதை எதிர் பார்க்க முடியும்
0 comments:
Post a Comment