Tuesday, October 26, 2010

INTJவின் அஞ்சா நெஞ்சைத்தைப் பாராட்டினார்கள் மக்கள்.

தமிழக முஸ்லிம் இயக்கங்கள் அனைத்தும் மவ்னம் காத்த வேளையில் பாபரி மஸ்ஜித்தின் தீர்ப்பு கண்டு வேதனையில் திளைத்திருந்த போது, யாரேனும் இந்த அநியாயத்தை எதிர்த்து குரல் எழுப்ப மாட்டார்களா? என்று கொதித்து போய் இருந்த வேளையில் ஐஎன்டிஜெ அறிவித்த போராட்டத்தை கண்டு INTJவின் அஞ்சா நெஞ்சைத்தைப் பாராட்டினார்கள் மக்கள்.

இன்னும் சொல்லப் போனால் நாளுக்கொரு நிலையில் இருந்த பொய்யன் ஜமாஅத் கூட தங்களுடைய அனைத்து விளக்கமும் தங்களுடைய வளைகுடா எஜமானர்களிடம் எடுப்படாமல் போனதை எண்ணி தங்களுடைய நிலையை மறு பரிசீலனை செய்து பிறகு INTJவின் நிலையைதான் மேற் கொண்டுள்ளார்கள். புகழ் அனைத்தும் இறைவனுக்கே!

தீர்ப்பு வந்த உடனேயே சில நாட்களில் போராட்டத்தை அறிவித்து இந்திய முஸ்லிம்களின் உணர்வை தட்டி எழுப்பியது இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தான். இப்படிப்பட்ட நல்ல விஷயத்தை செய்து முடித்ததை பொறுக்க முடியாத பொய்யன் ஜமாஅத் வழக்கம் போல் பிணம் தின்னும் வேலையில் இறங்கியுள்ளது. கூட்டத்தை குறைத்து மதிப்பிட்டால் INTJ குன்றிவிடும் என்ற பொய் கணக்கை துவக்கி உள்ளது. அல்லாஹ்தான் இவர்களை பாதுகாக்க வேண்டும்.

மாலை கண் நோய் உள்ளவர்களுக்கு சீரான பார்வை பற்றி என்ன தெரியும்? நன்றாக கண்ணாடி போட்டு பாருங்கள் அன்பர்களே! இதஜவின் ஆர்ப்பாட்டக்களம் பலம் கூடி இருக்கிறதா என்று தெளிவாக தெரியும்.

கூட்டத்தை பற்றி பேசும் இந்த பொய்யன் ஜமாஅத், இதஜவை விட குறைந்த காலத்தில் அறிவிப்பு செய்து ஆர்ப்பட்டகளம் கண்டு இருந்தாலாவது இவர்கள் வல்லவர்கள் என்று எடுத்துக் கொள்ளலாம். குறைந்த பட்சம் இதஜ இந்த ஆர்ப்பாட்டத்திற்கு எடுத்துக் கொண்ட கால அளவையாவது இவர்கள் எடுத்துக் கொண்டு நடத்தி இருந்தால் இவர்களை பாராட்டலாம். நோயுற்றவனுக்கு உடனே மருந்து அளிப்பது நல்லதா? அல்லது அவன் மரணிக்கும் வரை பொறுத்திருந்து சிகிச்சை அளிப்பது நல்லதா? அவர்களுக்கு என்ன? அண்ணன் விட்ட வழியே கடைநிலை வழி.

MOINUDEEN Chennai

0 comments:

Post a Comment