கண்காணிப்பதிலும், கடுமையான தண்டனை வழங்குவதிலும் அல்லாஹ்வே போதுமானவன்!
அவதூறுதான், அடிப்படை பணியாக கொண்டு இயங்கி வரும் அந்த அமைப்பினர், [ததஜ],வரிக்கு வரி பதிலளிக்க கூடியவர்கள் நாங்கள் தான் என்று
மார்த்தட்டிக் கொள்ளும், இவர்கள் அவர்களை நோக்கி வைக்கப்படும் வாதங்களுக்கு பதில் கொடுக்க முடியாமல் மூச்சி திணறி வருவதும்,பதில் என்ற பெயரில் மிக மிக ஆபாச வார்த்தைகளையே அள்ளி வீசுவது அதிகரித்து வருவதும் நாம் எல்லோரும் அறிந்த ஒன்றுதான்.
எது சாதகம் என்று கருதுகிறார்களோ! அதை மட்டும் இந்த தக்லீதுகள் கவனத்தில் எடுத்துக் கொள்வதும், எதில் அவர்களின் முகத்திரை கிழிபடுமோ!அந்த விஷயத்தை கண்டு கொள்ளாமல் இருப்பதும் அவர்களின் இயக்க யுக்தி என்று தான் சொல்லவேண்டும்.
இழந்து வரும் மக்கள் செல்வாக்கை தக்க வைப்பதற்கு இவர்கள் ஆடும் ஆபாச ஆட்டங்களை அறியாமல் இல்லை மக்கள். நடுநிலை பார்வையோடு இவர்களின் இணைய தளம் பார்வையிடும் பார்வையாளர்கள் இதை நன்கு அறிந்து கொள்வார்கள்.
இந்த அறிவிலிகளை நோக்கி வினா? தொடுக்கப்பட்டால்..ஒரே ஓட்டம் ஓடி! ஏறுவது
என்னவோ பாக்கர் பயணித்த பஸ்ஸில் தான். போலும் அவர் ஏறி வேகத்தில், என்றைக்கோ இறங்கி விட்டார். அவர் ஏறிய பஸ் பயணத்திற்கு விளக்கம் அளித்து, அவருக்கு நல்ல சர்டிபிக்கெட்டும் கொடுத்ததும், இவர்களின் நவீன இமாம் பிஜெதான். இன்று பஸ் பயணம் பற்றி இல்லாதும் பொல்லாதும் பேசி தன் அமல்களை பிஜெயின் தனிப்பட்ட குரோத்திற்காக அழிக்கும் இவர்கள் யாரும், இது குறித்து அப்போது ஏன் வாய் திறக்கவில்லை? பாக்கருக்கு பின்னாடி பாக்கர் குறித்து அவதூறு பேசி மாட்டிக் கொண்ட கடலூர் சகோதரர்களிடம், அதன் பிறகு, தன்னை காப்பற்ற முபாஹலா நடத்திய நாடகத்தை அல்லாஹ் நன்கு அறிவான். இதே பிஜெயின் பொய்தனத்திற்காக பாவம் அந்த சகோதரர்களை இவர்கள்தான் துரோகி என்றார்கள். ஷைகுமார்களுக்கு கட்டுப்பட்ட உண்மையான முரிதுகள் இவர்கள்தான். பாவம் அல்லாஹ் இவர்களுக்கு உண்மையை விளங்க வைக்க துஆச் செய்கின்றேன். வீணாக அழியும் இவர்களின் அமல்கள் இவர்களுக்கே பயன்பட துஆச் செய்கின்றேன்.
எதை சொன்னால் சமுதாயத்தில் ஒரு மனிதனின் கண்ணியத்தை குறைக்க வழி வகுக்குமோ? எதை சொன்னால் ஒரு மனிதரின் செல்வாக்கு சரியுமோ! அதை, எப்படி? எல்லாம் சொல்ல முடியுமோ![கீழ் தரமான நிலையில்]அப்படியெல்லாம் சொல்லியும் பார்த்து விட்டனர்.இதனால் சரிந்தது என்னவோ இவர்களின் செல்வாக்கு தான்.கிழிந்தது என்னவோ இவர்களின் முகம் தான்.கிழிந்து போய் கோபத்தில் இருக்கும் இவர்கள், இப்பொழுது மீண்டும் கையில் எடுத்து இருப்பது இவர்களின் அடிப்படை பணியான
அவதூறுதான்.
வல்லம் மாநாட்டிற்காக சகோ:பாக்கர் அவர்கள் வசூலுக்காக குவைத் சென்றிருந்தார்.அங்கு ஒரு சகோதரர் ரூபாய் 20000 ம் மாநாட்டுக்காக கொடுத்துள்ளார்.அதற்க்கு பாக்கர் அவர்கள் ரசீது கொடுக்க வில்லை மாறாக அந்த அமோன்ட்டை [ரொக்கம்]அவர் அடித்துவிட்டார் என்பது தான் கூலிக்கு மாரடிப்பவர் போல் செய்யும் இந்த கோழைகளின் வாதம்.
20,000-ம் ரூபாய் சகோதரர் பாக்கரிடம் கொடுத்தது. பாக்கர் ரசீது தர மறுத்தது. இந்த தகவல்களை சம்மதப்பட்ட சகோதரர் இந்த பிஜெயின் பின்பற்றாளர்களுக்கு எழுத்து மூலமாகவோ, வாய் மூலமாகவோ சொல்லவில்லை. மாறாக எவனோ ஒருத்தன் தெரிவித்ததாக திரிக்கிறார்கள். பாவம். இவர்கள் கூவி, கூவி, விற்கும் இந்த வியாபாரம் இவர்களுக்கு நஷ்டத்தையும் கைசேத்தையும்தான் அளிக்கும் இன்ஷா அல்லாஹ்.
தூய இஸ்லாத்தை சொல்ல புறப்பட்ட அந்த தூயவான்? பெரியகுளத்தில் கலவரத்தில் கொல்லப்பட்ட முருகன் என்பவனின் வீர வணக்க
பொதுக்கூட்டத்தில் கலந்துக் கொண்டத்தை, அப்போது சகோதரர்கள, இது குறித்து இவரிடம், இது மார்க்க முரணான செயலில்லையா?என கேட்டதற்கு, இவர் என்ன சொன்னார்? “அவன் ஏதாவது செய்துக் கொண்டு போகிறான்! நமக்கு என்னமா? நாம உண்மையைச் சொன்னோமா.. என நடந்த நிகழ்வுகளை ஞாபகப்படுத்திய பொழுது, ”நான் கலந்துக் கொள்ளவே இல்லை." என முற்றிலும் பொய் சொன்ன பிஜெயின் போலி வாதத்திற்கு வலு சேர்த்தவர்கள். எவ்வித ஆதாரமும் இன்றி வருவோர், போவோர் சொன்னதாக ஜோடிக்கும் இந்த தகவல் மட்டும் எப்படி உண்மையாகும்? அடிவருடிகளுக்கான அளவுகோல் இதுதானோ?
சரி விஷயத்துக்கு வருவோம்..
புதுமடத்தைச் சேர்ந்த சகோதரர் ஒருவர், சகோ.பாக்கர் பற்றி சொன்னதாக இந்த வடிகட்டிய பொய்யர்கள் சொல்வதுதான் வேடிக்கை.
மே 10, 11 தஞ்சை வல்லம் மாநாட்டிற்கு பாக்கரிடம் கொடுத்த ரூ 20,000-க்கு 3 முறை குவைத் மர்கசில் வைத்து ரசீது கேட்டும், ரசீது தராமல் ஏமாற்றிவிட்டு வந்து விட்டாராம்.
இதில் 3 முறை வைத்து பாக்கரிடம் ரசீது கேட்டதாக அந்த சகோதரர் சொல்லுகிறார்.மூன்று முறை என்பது சகோ:பாக்கர் அவர்கள் மூன்று முறை குவைத் சென்ற பொழுது கேட்டாரா? அல்லது வசூலுக்கு சென்றாரே!அப்பொழுதே கேட்டாரா? என்பது தெரியவில்லை.
"மூன்று முறை வைத்து"என்பதை எந்த அர்த்தத்தில் சொன்னார் என்பதை அவர்தான் விளக்க வேண்டும்.மாறாக 3 முறை குவைத் வரும் பொழுதெல்லாம் என்று சகோதரர் சொல்வாரேயானால் அவரது வாதமே அடிப்பட்டு போகும். காரணம் வல்லம் மாநாட்டுக்கு பிறகு பாக்கர் அவர்கள் குவைத் செல்லவில்லை என்பது தான் உண்மை.
சரி வசூலுக்கு சென்றாரே அப்பொழுதே அவரிடம் [பாக்கர்] கேட்டிருப்பாரேயானால், (இந்த இடத்தில் சம்மதப்பட்ட சகோதரரும், நடுநிலை பேணும் சகோதரரும் புரிந்துக்கொள்ள வேண்டியது என்னவென்றால்) பாக்கராக இருந்தாலும் சரி! வேறு யாராக இருந்தாலும் சரி! மாநாட்டு செலவுக்காகவோ! மற்ற செலவுக்காகவோ! வசூல் நாடி வளைகுடா [குவைத்] செல்வார்களேயானால் அவர்கள் வசூல் மட்டும் தான் செய்வார்கள்.மொத்த வசூல் என்ன என்பதைத்தான் அவர்கள் சொல்லுவார்கள். இந்த ரசீது கொடுக்கிற வேலையெல்லாம் வளைகுடா மண்டல நிர்வாகிகளின் பொறுப்பாகும்.
எனவே இந்த செய்தி உண்மை என்றால் குற்றவாளிகள் இவர்களே! பாக்கர் அல்ல. பாக்கர் மீது அவதூறு சொல்ல துடியாய் துடிக்கும் குறுமதியாளர்கள் வேறு எதுவும் கிடைக்காததால் புதிதாக ஒன்றை கச்சிதமாக ஜோடித்துள்ளனர். வசூலில் பாக்கர் இருந்தார் என்ற ஒரே காரணத்துக்காக இப்படியெல்லாம் திரித்து திரியேற்றுவது இவர்களுக்கு மட்டும் கைவந்த கலை. [தற்காப்பு] சூப்பர் அப்பு...
கண்காணிப்பதிலும், கடுமையான தண்டனை வழங்கவதிலும் அல்லாஹ்வை மிஞ்ச யாரும் இல்லை. அவனிடம் கையேந்தியவர்களாக உங்களுக்கு துஆச் செய்கின்றோம்.
ஆக்கம்; முபாரக். துணைச்செயலாளர் இந்திய தவ்ஹீத் ஜமாஅத். குவைத் மண்டலம்.
0 comments:
Post a Comment