ஒப்பற்ற ஓரிறையின் திருப்பெயரால்...
திருவிடைச்சேரி படுகொலையின் சூத்திரதாரியான குத்புதீனையும், கொலையாளியான ஹாஜிமுகம்மதுவையும் ததஜவுக்கு தொடர்பில்லாதவர்கள் என கூறி வந்த அண்ணன், இந்தியா டுடே இதழுக்கு அளித்த பேட்டியில், குத்புதீனை ததஜ அனுதாபியாக அடையாளம் காட்டினார். இதையொட்டி, திருவிடைச்சேரி; அண்ணனின் 'லேட்டஸ்ட் பல்டி' என்ற ஆக்கம் வரைந்தோம்.
அந்த ஆக்கத்தில்,
''இன்று அதே குத்புதீன் இயக்க அனுதாபி என்று அண்ணன் கூறுகிறார். இதன்மூலம் குத்புதீனுக்கும் ததஜவுக்கும் தொடர்பில்லை என்று அண்ணன் இவ்வளவு காலம் சொன்னது புரூடா. அதுமட்டுமன்றி அண்ணனால் தற்காப்புவாதியாக அடையாளம் காட்டப்பட்ட கொலையாளி, 'ரவுடிகளுடன் வந்து துப்பாக்கி சூடு நடத்தினார்' என்று அண்ணன் சொல்வதன் மூலம், நடந்தது தற்காப்பு கொலையல்ல என்று தெளிவாகவே புலப்படுகிறது.''என்று கூறியிருந்தோம்.
பிறரை அரைகுறை ஞானமுள்ளவர்கள் என்றும் தான் மட்டுமே உலகமகா அறிவாளி என்ற மிதப்பில் இருக்கும் அண்ணனின் ஆசி பெற்ற ''பொய்யன்டிஜே'' நாம் எழுதியதை அரைகுறையாக விளங்கி பதில் என்ற பெயரில் பிதற்றியுள்ளது.
பொய்யன்டிஜே;
அதாவது இதுவரை காலமும் தவ்ஹீத் ஜமாத்திற்கும் இந்த சம்பவத்திற்கும் தொடர்பில்லை என்றார்கள்.ஆனால் இந்தியா டுடே பேட்டியில் குறிப்பிட்ட நபர் தவ்ஹீத் ஜமாத்தின் அனுதாபி என்று பி.ஜெ பேட்டி கொடுத்துள்ளார்.
ஆக திருவிடைச் சேரி சம்பவத்திற்கும் தவ்ஹீத் ஜமாத்திற்கும் தொடர்பிருக்கிறது என்பதற்கு பி.ஜெ சொன்ன அனுதாபி என்ற வார்த்தை தான் ஆதாரமாம்.
நமது பதில்; திருவிடைச்சேரி சம்பவத்திற்கும், ததஜவுக்கும் உள்ள தொடர்புக்கு இது ஒன்று மட்டும் ஆதாரமில்லை. இன்னும் இருக்கிறது. ததஜ உள்ளூர் நிர்வாகம் மீது, ஜமாஅத் கொடுத்த புகார். அதையொட்டி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள ததஜவினர். இதுபோக, இந்த படுகொலை தொடர்பாக நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக அண்ணன் உளரும் உளறல்கள். இதெல்லாம் எதை காட்டுகிறது? மேலும், ததஜவினர் மீது போடப்பட்டுள்ளது பொய் வழக்கு என்றால், கைது செய்யப்பட்டது அநீதி என்றால் அதற்கு காரணமான திருவிடைச்சேரி ஜமாஅத் மீது வழக்கு தொடுக்காதது ஏன்? சம்மந்தமில்லாத படுகொலையில் எங்கள் இயக்கத்தவரை கைது செய்தது தவறு என்று அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்யாதது ஏன்? மவ்னம் சம்மதம் தானே?
பொய்யன்டிஜே;
அனுதாபி என்பதற்கும் உருப்பினர் என்பதற்கும் வித்தியாசம் தெரியாதவர்கள்.
நமது பதில்;
நமது ஆக்கத்தில் நாம் குத்புதீனை, ததஜ உறுப்பினர் என்று எங்கேனும் குறிப்பிட்டு இருக்கிறோமா? இல்லையே? அண்ணன் சொன்ன வார்த்தையான 'அனுதாபி' என்று தானே நாமும் சொல்லியுள்ளோம். பிறகு எதற்கு உறுப்பினர்-அனுதாபி என்று பொய்யன்டிஜே புலம்பவேண்டும்?
உறுப்பினர் யார்? அனுதாபி யார்? என்று அண்ணனுக்கும் அவரை பின்பற்றுபவர்களுக்கும் நாங்கள் பாடம் நடத்தும் அளவுக்கு நிர்வாகவியல் பற்றி அறிந்து வைத்துள்ளோம். அல்ஹம்துலில்லாஹ்.
அடுத்து, அண்ணனால் தற்காப்புவாதியாக அடையாளம் காட்டப்பட்ட கொலையாளி, 'ரவுடிகளுடன் வந்து துப்பாக்கி சூடு நடத்தினார்' என்று அண்ணன் சொல்வதன் மூலம், நடந்தது தற்காப்பு கொலையல்ல என்று தெளிவாகவே புலப்படுகிறது.''என்று கூறியிருந்தோம். அதற்கு மறந்தும் கூட பதில் சொல்லத்தான் மூலம், நடந்தது தற்காப்பு படுகொலையல்ல என்று ஒப்புக் கொள்கிறது அண்ணன் ஜமாஅத்.
மேலும், கேட்ட கேள்விக்கு பதில் இல்லையானால் அவர்களிடமிருந்து அடுத்து வருவது விமர்சனம்தான் என்று அண்ணன் சொல்வார். அதை மெய்ப்படுத்தும் வகையில், பல்வேறு விமர்சனங்களை வீசியுள்ளது பொய்யன்டிஜே. அதில் ஒன்று;
'' கீழ்பாக்கத்தில் இருக்க வேண்டியவர்கள் எல்லாம் ஜமாத் நடத்த வந்தால் இதுதான் நிலைமை. என்கிறது பொய்யன் டிஜே.
கீழ்பாக்கத்தில் இருக்கவேண்டியது யார்? கொஞ்சம் கீழே படித்து விட்டு முடிவெடுப்போமா?
இதே திருவிடைச்சேரி குறித்து அண்ணனும் அவரது ஜமாத்தும் அடித்த பல்டிகள்;
கொலை நடந்தவுடன் விடுத்த முதல் அறிக்கையில் கொலையாளி குறித்து 'சமூக விரோதி' என்றார்.
இரவு நடந்த விளக்க[!]உரையில், கொலையாளியை 'தற்காப்புவாதி' என்றார்.
அதே விளக்க உரையில் ஆரம்பத்தில் கொலையாளி 'லைசன்ஸ் ஹோல்டர்' என்றார்.
அதே உரையின் இறுதிப்பகுதியில், கொலையாளி 'லைசன்ஸ் ஹோல்டர்' இல்லாமலும் இருக்கலாம் என்றார்.
பிறகு கொலையை கண்டிக்காதது ஏன் என கேள்வி எழுப்பியபோது, கொலையாளி துப்பாக்கியுடன் வந்தார்; கொல்லப்பட்டவர்களோ அரிவாள், கம்பு போன்ற பயங்கர ஆயதங்களுடன் இருந்தனர். எனவே கொன்றவர்- கொல்லப்பட்டவர் இருவரும் குற்றத்தில் சமமானவர்கள். எனவே நபிவழிப்படி இந்த படுகொலையை கண்டிக்கக் முடியாது என்றார்.
செங்கல்பட்டில் நடந்த செயற்குழுவில் திருவிடைச்சேரி படுகொலையை வன்மையாக கண்டிக்கிறோம் என்றார்.
அமைப்புகள் சார்பாக போஸ்டர் ஓட்டப்பட்டவுடன், இந்த போஸ்டர பாத்து எங்கமேல அரசாங்கம் கை வைச்சுருமா என்று கர்சித்தார்.
எங்கள் அமைப்பை சேர்ந்தவர்கள் இந்த படுகொலை தொடர்பாக கைதுசெய்யப்பட்டுள்ளனர் என ஒப்புக்கொண்டு, அரசாங்கம் கை வைத்ததை ஒப்புக்கொண்டார்.
எங்கள் மீது திருவிடைச்சேரி ஜமாஅத்தை வழக்குப் போடச்சொல் பார்க்கலாம் என்று பொய்யன் டிஜே மூலம் சவால் விட்டார்.
எங்கள் அமைப்பு உள்ளூர் நிர்வாகிகள் மீது, ஜமாஅத் வழக்கு போட்டுள்ளது என்று அசடு வழிந்தார்.
குத்புதீன் சும்மா எங்க மர்கசுக்கு தொழவந்தவர். அவருக்கும் ஜமாஅத்துக்கும் எள்ளளவும் சம்மந்தமில்லை என்றார்.
இன்று குத்புதீன் எங்கள் இயக்க அனுதாபி என்றார்.
இப்போது சொல்லுங்கள் சிந்தனையாளர்களே! ஒரே ஒரு வழக்கு விசயத்தில் இத்தனை பல்டி அடிக்கும் அண்ணனும் அவரை பின்பற்றுபவர்களும் கீழ்பாக்கம் செல்ல வேண்டியவர்களா? அல்லது புனித மாதத்தில், புனித பள்ளியில் நடந்த படுகொலையை கண்டிக்கும் நாங்களா?
சிந்தனையை தூண்டும் மார்க்கத்தில் பிறந்த நாம், சிந்தனையை மழுங்கடிக்கும் கூட்டத்தில் சிக்கிக்கொள்ளாமல் இருக்க அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடுவோம்.
--
10/28/2010 08:57:00 AM அன்று இயக்கங்களின் மறுபக்கம். இல் abdul muhaimin ஆல் இடுகையிடப்பட்டது
0 comments:
Post a Comment