Friday, October 8, 2010

தன்னையே சமுதாயமாக்கிய பிஜெ!

நாட்டின் பிரபல்யமான ஒருவர் குறித்து பாரதூரமான குற்றச்சாட்டை முன்வைத்து பற்றி செய்தி வெளிடுவதாக இருந்தால், வைக்கப்படும் குற்றச்சாட்டு பற்றி சம்மந்தப்பட்ட நபர் கருத்து என்ன என்பதையும் கேட்டு பதிவு செய்வதுதான் பத்திரிக்கை தர்மமாகும். ஆனால், 'ரயிலில் குண்டு வைக்கத் தூண்டிய பீஜே' என்ற தலைப்பில் மூவர் தந்த பேட்டியை வெளியிட்ட பிரபல நக்கீரன் வார இதழ், இதுகுறித்து சம்மந்தப்பட்ட பீஜெயிடம் விளக்கம் பெற்று அதையும் வெளியிட்டிருக்க வேண்டும். அவ்வாறு செய்யாத நக்கீரனின் செயல் வன்மையாக கண்டிக்கத் தக்கது என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.

அதே நேரத்தில் நக்கீரனின் இந்த செயலை எவ்வாறு எதிர்கொள்வது என்பதில்தான் தான் சகோதரர் பீஜே அவர்கள் நிதானமிழந்து, இன்று கேலிக்கும்- கேள்விக்கும் உரியவராக நிற்கிறார். நக்கீரன் தன்னிடம் விளக்கம் கேட்காததை கண்டித்தும், நக்கீரன் வெளியிட்டுள்ள செய்திக்கு மறுப்பாகவும் ஒரு மடலை நக்கீரன் ஆசியருக்கு பீஜே எழுதியிருப்பாரானால் பீஜேயின் கண்ணியம் எங்கோ உயர்ந்திருக்கும்.

அல்லது நக்கீரனை விடமாட்டேன். அவன் எப்படி என்னிடம் விளக்கம் கேட்காமல் செய்தி வெளியிடலாம் என்று கோபம் வந்தால், நக்கீரன் மீது ஒரு வழக்கை பதிவு செய்யலாம். இப்படித்தான் பிரபல்யமானவர்கள் எல்லாம் செய்கிறார்கள். ஆனால் பீஜே இதிலிருந்து நேர்மாற்றமாக, தனக்கு எதிராக கருத்து வெளியிட்ட நக்கீரனை, முஸ்லிம்களின் விரோதியாக காட்டி, முஸ்லிம்கள் மத்தியில் தனக்கு ஒரு அனுதாபத்தை உண்டாக்கியுள்ளார்.
முஸ்லிம்கள் மத்தியில் வேண்டுமானால் அதாவது அவரது இயக்கத்தவர் மத்தியில் வேண்டுமானால் அவர்க்கு அனுதாபம் கிடைத்திருக்கலாம். அவரது அழைப்பை ஏற்று 'விளக்குமாறுடன்' ஒரு கூட்டம் வந்திருக்கலாம். அனால் ஏனைய முஸ்லிம்கள் மத்தியில், ஏற்கனவே ஊடகங்கள் மத்தியில் முஸ்லிம்கள் விரோத போக்கு நீடிக்கும் நிலையில் இவரை நோக்கி சீண்டிய நக்கீரனை ஒட்டுமொத்த முஸ்லிம்ளுக்கு எதிராக திருப்பி விட்டு விட்டாரே' என்ற மனநிலைதான் உள்ளது.

அதோடு, எத்தகைய கடுமையான முறையில் கேள்வி கேட்டாலும், பொறுமையாக பதில் சொல்பவர் என்ற நற்பெயர் முஸ்லிமல்லாதவர்கள் மத்தியில் பீஜேவுக்கு இருந்தது. ஆனால் இப்போது இவர் இவ்வளவு மோசமானவரா என்று முகத்தை திருப்பும் நிலையை பீஜே உருவாக்கிவிட்டார்.
எவ்வாறெனில், நக்கீரன் செய்தி முழுக்க முழுக்க பீஜே எனும் தனி மனிதனை பற்றியதாகும். முஸ்லிம்களை நோக்கியதல்ல. ஆனால் அதை முஸ்லிம்களை நோக்கி திருப்பியுள்ளார். நக்கீரன் முற்றுகை போரட்ட வாசகங்கள் சில:

முஸ்ம்களிடம் மோதிப் பார்க்கும் நக்கீரனே எச்சரிக்கை!
தயாரடா தயாரடா
முஸ்ம்களை சீண்டிப் பார்த்தால்
நாங்களும் தயாரடா
விளையாடாதே! விளையாடாதே!
முஸ்ம்களின் உணர்வுகளோடு
விளையாடாதே! விளையாடாதே!
இவ்வாறாக பீஜே என்ற தனிமனிதனை நோக்கி சுமத்தப் படும் குற்றச்சாட்டுகள் எனபது ஒட்டுமொத்த முஸ்லிம்களை நோக்கி சுமத்தப்படுவதை போன்றதாக திருப்பியுள்ளார். அதாவது பீஜேதான் சமுதாயம்; சமுதாயம்தான் பீஜே என்று காட்ட முனைகிறார். இப்ராஹீம் ஒரு சமுதாயமாக இருந்தார் என்று அல்லாஹ் நபி இப்ராஹீம்[அலை] அவர்களை சிறப்பித்து கூறுவதைப் போன்று, தன்னை ஒரு சமுதாயமாக காட்ட முற்படுகிறார்.
மேலும், நக்கீரன் கோபால் மற்றும் காமராஜ் ஆகியோரை, ஒரு சாமான்யன் கூட பயன்படுத்தக் கூசும் வார்த்தைகளால் அர்சித்து, தன்னை மேலும் இழிவு படுத்திக் கொண்டுள்ளார். அது அவரது வலைதளத்தில் விரிவாக உள்ளது. அதோடு முற்றுகை கோஷத்திலும் இழிவான வார்த்தைகள் அவைகளில் சில:

கோபால் மாமா! கோல்மால் மாமா!
மாமா வேலை பார்க்கும் கோபால் மாமா!
காசுக்காக எதையும் செய்யவும்
நீ துணிவாயோ

புரோக்கர் மாமா கோபாலே
நக்கீரன் என்ற பெயரில்
மஞ்சப் பத்திரிகை நடத்தி
தமிழகத்தை சீரழிக்கும் கோபாலே

எச்சரிக்கை! எச்சரிக்கை!
கோபாலே! கோபாலே!
திருட்டுப் பயல் கோபாலே!
மற்ற பத்திரிகை பேட்டிகளை
திருடி விட்டு திருடி விட்டு
தனது பேட்டியாக வெளியிடும்
திருட்டுப் பயல் கோபாலே

மாமா மாமா கோபால் மாமா
மீசை உனக்கு தேவைதானா?

கோபாலா கோபாலா என்ன தொழில் செய்கிறாய்
கோபாலா கோபாலா வெளியே வந்து சொல்வாயா?
மஞ்சள் பத்திரிகை நடத்தவும் மாமா வேலை செய்யவும்
நக்கீரன் என்ற பெயரிலே பத்திரிகை உனக்குத் தேவைதானா?

அயோக்கியனே அயோக்கியனே
உன் பத்திரிகை படுத்து விட்டால்
உன் குடும்பப் பெண்களின்
அந்தரங்கத்தையும் வெளியிடுவாயோ!
சீ… சீ… வெட்கக் கேடு! மானக் கேடு!

இவ்வாறாக நீள்கிறது வர்ணனை. இதையே போராட்டக் களத்தில் எத்தகைய 'எதுகை-மோனை' யோடு வாசித்திருப்பார்கள் என்று சொல்லித் தெரியவேண்டியதில்லை. தன்னையும் ஒரு பத்திரிக்கையாளராக காட்டிக்கொள்ளும் பீஜே, இந்த அளவுக்கு கீழ்த்தரமாக சென்று தன்னைத்தானே தரம் தாழ்த்திக் கொள்வார் என்று எவரும் எண்ணிக்கூட பார்த்திருக்க மாட்டார்கள்.

என்ன செய்வது..? அல்லாஹ்வின் இல்லம் விஷயத்தில் அநீதி தீர்ப்பு கண்டு அகில முஸ்லிம்கள் குமுறிக்கொண்டிருக்கும் நிலையில், அதையெல்லாம் இரண்டாம் பட்சமாக்கி, தன்னை பற்றிய விமர்சனத்திற்கு முன்னுரிமை தந்து அதற்கு ஒரு போராட்டம் நடத்தி முஸ்லிம் சமுதாயத்தை பலிகடா ஆக்கியுள்ளார்.

''அவரே ஒரு சமுதாயம் எனும்போது தனியாக சமுதாயத்தை பற்றி கவலை கொள்ள என்ன இருக்கிறது என்கிறீர்களா..?

-அப்துல் முஹைமின்.

» அ

0 comments:

Post a Comment