Wednesday, October 6, 2010

போராட பிறந்த சமுதாயம் புறமுதுகிடலமா?



இறை இல்லத்தை இடித்ததோடு மட்டுமன்றி , இன்று
இடமே உங்களுக்கு இல்லை! என்று கூறுவதும்
இதை எதிர்த்து பேசாது அமைதி காக்க வேண்டும் என்பதும ,
நாங்கள் தொடர்ந்து அடிப்போம்! அழுவதற்கு கூட உனக்கு
உரிமையில்லை ! வேண்டுமானால் மனதிற்குள் அழுது கொள்!
என்று கூறுகிறது காவி மயமான நீதி துறையும் ,
காங்கிரசின் அரசு துறையும்!

புழு கூட உடலை வளைத்து தன் எதிர்ப்பை பதிவு செய்கிறது!
பூனை கூட தாக்கப்படும் பொது புலியென பாய்ந்து சீறுகிறது!
தேனீ கூட தன் கூட்டில் கை வைத்தவனை கொட்டுகிறது!

போராட பிறந்த சமுதாயம் புறமுதுகிடலமா?
அநீதியை எதிர்ப்பது அண்ணல் நபி வழியல்லவா?
அல்லாஹ்வின் இல்லத்தை மீட்பது கடமையல்லவா?

உரிமையை உரத்து சொல்லவும்,
உணர்வுகளை வெளிப்படுத்தவும் ,
ஒன்று கூடுவோம் வாருங்கள்!
நீதி மறுத்து , ஜாதி மயமான
நீதி மன்றத்தை கண்டித்து
முற்றுகையிடுவோம்!

இன்ஷா அல்லாஹ் வரும் 19.10.10 அன்று
சென்னை உயர் நீதி மன்றம் முற்றுகை.

0 comments:

Post a Comment