Thursday, October 21, 2010

அண்ணனை விட ....

ஒப்பற்ற ஓரிறையின் திருப்பெயரால்....
பாபர் மஸ்ஜித் தீர்ப்பு வெளியான பின் தீர்ப்பு குறித்து ஒரு ஜூம்மா உரையுடன் 'சும்மா' இருந்து விடுவோம் என்று எண்ணிய அண்ணன் ஜமாஅத், இந்திய தவ்ஹீத் ஜமாஅத், நீதிமன்ற முற்றுகை அறிவித்தவுடன் வேறு வழியின்றி, பாபர் மஸ்ஜித் தீர்ப்பும்- முஸ்லிம்களின் கடமையும் என்ற ஒரு பொதுக்கூட்டத்தை நடத்தி, அதில் அண்ணன் புகழ் பாடியதோடு, பாக்கர் உள்ளிட்ட எதிரிகளை சாடித்தீர்த்து, பாபர் மஸ்ஜித் குறித்த ஒரு தீர்மானம் கூட நிறைவேற்றாமல் நிறைவு செய்தனர்.

பின்பு இந்திய தவ்ஹீத் ஜமாஅத் நீதிமன்ற முற்றுகை நடத்த, நாம் மட்டும் சும்மா இருந்தால் பார்ப்பவர்கள் எள்ளி நகையாடுவார்களே என்று நினைத்தார்களோ என்னவோ, ஒரு போராட்டத்தை அறிவித்திருக்கிறார்கள். அந்த போராட்டமும் நாளைக்கல்ல. அடுத்த வருஷம்.

சட்ட வரம்பைத் தாண்டி மதச் சார்பின்மைக்கு எதிராகவும் மதநம்பிககையின் அடிப்படையிலும் வழங்கப்பட்ட அலஹாபாத் உயர்நீதிமன்றத் தீர்ப்பைக் கண்டித்தும் மேல் முறையீட்டின் போது சட்ட வரம்பிற்கு உட்பட்டு இவ்வழக்கில் தீர்ப்பளிக்கும்படி உச்ச நீதிமன்றத்தை கோரியும் வருகின்ற ஜனவரி 4 2011 அன்று தமிழகம் தழுவிய அளவில் சென்னையிலும் மதுரையிலும் மாபெரும் பேரணி மற்றும் கண்டண ஆர்ப்பாட்டம் நடத்துவது என்று இச்செயற்குழு தீர்மானிக்கின்றது.

'தாயும்- தகப்பனும் உயிரோடு இருக்கையில் அவர்களுக்கு பச்சத்தண்ணி கொடுக்காதவன், அவர்கள் மவுத்தானவுடன், இந்த ஆலிம்ஷா பேச்சை கேட்டுக்கிட்டு கத்தம் பாத்தியாவுக்கு காசை செலவழிக்கிறான்' என்று அண்ணன் மேடையில் பேசியதுண்டு. அதுபோல தீர்ப்பு வெளியாகி தீர்ப்பு தந்த மன வேதனையில், முஸ்லிம்கள் துடித்துக் கொண்டிருக்கும் நிலையில், இவர் இப்போது மருந்து தர மாட்டாராம். சாவகாசமாக அடுத்த வருஷம் தருவாராம்.

அது என்னங்க! அண்ணனை பத்தின மேட்டருன்னா; உடனே குய்யோ- முறையோன்னு கூப்பாடு போட கொடி புடிச்சுக்கிட்டு கெளம்புறீங்க. அல்லாஹ்வுடைய பள்ளிவாசல் மீட்பு என்றால் அடுத்த வருஷத்துக்கு தள்ளிப் போடுறீங்களே! அப்ப அண்ணனை விட அல்லாஹ்வுடைய பள்ளிவாசல் பிரச்சினை அவ்வளவு மட்டமா என்ன..?

ஆக, நடத்தப் போகும் போராட்டம் பாபர் மஸ்ஜித் மீட்பு போராட்டமா? அல்லது பாமர முஸ்லிம்களை ஏமாற்றும் போராட்டமா என்பதை நடுநிலையாளர்கள் சிந்திக்கட்டும்.

10/20/2010 08:51:00 AM அன்று இயக்கங்களின் மறுபக்கம். இல் abdul muhaimin ஆல் இடுகையிடப்பட்டது

0 comments:

Post a Comment