எல்லாமே அண்ணனும்- அல்லாஹ்வுமே அறிந்த ரகசியங்கள்.
கோவை குண்டுவெடிப்பு நடப்பதற்கு முன்பாகவே, இன்னின்ன இடங்களில் குண்டு வைக்கப்போகிறார்கள் என்ற தகவல் தமுமுகவுக்கு [அண்ணன் தமுமுகவில் இருந்த காலகட்டம்] கிடைத்ததாம். உடனடியாக அந்த குண்டு வெடிப்பை தடுத்து சமுதாயத்தை பாதுகாக்கும் நோக்கில், அன்றைய டி.ஜி.பி. அலெக்சாண்டரை, அண்ணன் தலைமையில் சிலர் சந்தித்து தகவலை கூறினார்களாம். அவர் கோவை காவல்துறைக்கும் தெரியப்படுத்தி விடுங்கள் என்றாராம். அவ்வாறே கோவை காவல்துறைக்கும் நம்பகமானவர்கள் மூலமாக தெரியப்படுத்தினாராம்.
ஆனால் காவல்துறை, அவர்களின் காவலர் குடியிருப்பில் வைக்கப்பட்ட் குண்டை மட்டும் அகற்றிவிட்டு, மற்ற இடங்களில் அகற்றாமல், குண்டுவெடிப்பை தடுக்க வாய்ப்பிருந்தும் அதை தடுக்கவில்லை. தடுக்கவிரும்பவில்லை. அதாவது காவல்துறை வேண்டுமென்றே குண்டுவெடிப்பை தடுக்கவில்லை என்று அண்ணன் தனது தொடரில் கூறுகிறார்.
குண்டுவெடிப்பு நடந்து அப்பாவிகள் பலியாக கூடாது; அதன் மூலம் முஸ்லிம்களும் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்ற அண்ணனின் என்னத்தை நாம் வரவேற்கிறோம். உரிய நேரத்தில் உரிய அதிகாரிகளின் கவனத்திற்கு தகவலை கொண்டு சென்றதையும் பாராட்டுகிறோம். ஆனால், நமது சந்தேகம் என்னவெனில்,
காவல்துறை குண்டுவெடிப்பை தடுக்கத்தவறியதன் மூலம் மக்கள் பலியாக காரணமாக இருந்துள்ளது. தனது கடமையை செய்ய வேண்டுமென்றே தவறியுள்ளது. அன்றைக்கு காவல்துறை செய்த தவறு சுமார் ஐம்பது உயிர்கள் பலியானதோடு, முஸ்லிம்களின் தொடர் சிறைவாசத்திற்கும் காரணமாகிவிட்டது. அப்பாவிகளும் இந்த வழக்கில் பாதிக்கப் பட்டுள்ளார்கள்.
இத்தகைய மாபாதக செயலை செய்த காவல்துறை குறித்து இத்தனை ஆண்டுகளாக அண்ணன் வாய் திறக்காதது ஏன்..?
மக்களை காக்க தவறிய காவல்துறையை கண்டித்து போராட்டம் நடத்தாதது ஏன்..?
குறைந்த பட்சம் துறை ரீதியான நடவடிக்கைக்கு கூட அவர்களை உட்படுத்த கோராதது ஏன்.?
காவல்துறையே இந்த சம்பவத்தில் குற்றவாளிகளாக இருக்கும் நிலையில், அதை வைத்து சிறைவாசிகள் விடுதலைக்கு போராடாதது ஏன்..?
காவல்துறையின் இந்த பொடுபோக்கு பற்றியும், மக்களின் உயிரிழப்புக்கு காரணமான அவர்களின் செயல் பற்றியும் ஒரு மேடையில் கூட முழங்காதது ஏன்..?
இங்குதான் அதிகார வர்க்கத்தோடு 'ரகசிய ஒப்பந்தம்' நடத்தப்பட்டதா..? அல்லது அதிகார வர்க்கத்திற்கு அண்ணன் பயந்து வாய் மூடியிருந்தாரா..? என்ற சந்தேகம் மக்களுக்கு எழுகிறது.
இதைஎல்லாம் விட முக்கியமான கேள்வி என்னவென்றால், குண்டுவெடிப்பு விசயத்தில் பல்லாண்டுகள் சிறைவாசத்தை முஸ்லிம்கள் அனுபவித்து சிலர் விடுதலையாகியுள்ள நிலையில் இப்போது காவல்துறையின் துரோகத்தை வெளிப்படுத்துவதால் என்ன பயன்..?
எல்லாமே அண்ணனும்- அல்லாஹ்வுமே அறிந்த ரகசியங்கள்.
-அப்துல் முஹைமீன்.
0 comments:
Post a Comment