Saturday, October 9, 2010

நக்கீரன் ஆர்பாட்டம் - நடந்தேறிய அவலம்!

நக்கீரன் இதழில் வெளிவந்த செய்திக்காக த.த.ஜ.நடத்திய போராட்டம் குறித்த சில கேள்விகளை கேட்டதற்கு 'வரிக்கு வெறி' பதிலில், பதில் சொல்வதற்கு வக்கின்றி பாய்ந்து பிராண்டியுள்ளனர்.

நாம் த,த,ஜ நிர்வாகிகள் திருவிடசேரி வழக்கில் கடந்த ரமலான் முதல் சிறையில் இருக்க , அதற்காக போராடாமல் தனிப்பட்ட நபரின். த.த,ஜ உருவாகும் முன் ஏற்பட்ட பிரச்சனைக்காக போராடுவது நியாயமா? என்ற கேள்விக்கு பதில் சொல்லாமல் ஏற்கனவே பி.ஜே. மலேசியாவில் கைதான போது தெரியவில்லையா? என கேட்கிறார்கள்.

மலேசியாவுக்கு த.த.ஜ. வின் பிரச்சாரத்திற்கு சென்று கைதானதால் போராட்டம் , நடத்த பட்டது 'அதில் எனக்கு சம்மந்தம் இல்லை' என பி.ஜே. கடந்த டிசம்பர் ஆறின் போது கூறினார். தற்போது அவரது சம்மதத்தின் பேரில், அவரின் கேவலமான வாசகங்களை கொண்டு , அவர் கைது செய்ய படாத , நிலையில், அவர்க்கு மட்டுமே சம்மந்தப்பட்ட ,தற்போதய த.த.ஜ.வுக்கு சம்மந்தமற்ற விசயத்திற்காக, பி.ஜே.வுக்கும் பெட்டி கொடுத்த மூவருக்கும் உள்ள பிரச்சனையை ஏதோ ஒட்டு மொத்த சமுதாய பிரச்னை போல் காட்டி மக்களை மாநிலம் முழுவதும் தூண்டி விடுவதேன்?

மேலும் இதே நக்கீரன் நபிகளாரை நித்யனந்தவோடு ஒப்பிட்டு எழுதியதாக போராட்டம் நடத்திய போது கூட இத்தனை இடங்களில் நடத்தவில்லையே! நபி ஸல் அவர்களை விட பி.ஜே. உயர்ந்தவரா? நபிகளாரின் கண்ணியதைவிட பி.ஜே.வின் கண்ணியம் உயர்ந்தாதா? சமிபத்தில் இறை வேதம் குரானை ஒருவன் எரிக்க போவதாக அறிவித்த போது , பெருநாள் என்றும் பாராமல் இ.த.ஜ. நிர்வாகிகள் போராடி கைதாகிய போது , குரானின் கண்ணியம் காக்க போராடாத த.த.ஜ. பி.ஜே.வின் கண்ணியத்திற்காக போராடுவதேன்?

மேலும் நக்கீரன் சம்மந்த பட்ட பி.ஜே.வின் கருத்தை கேட்டு ஏன் பதிவு செய்யவில்லை? அது தானே பத்திரிகை தர்மம். என்ற கேள்வி எழுப்புகின்றனர்.
மறுமையை நம்புவதாக , குரான் ஹதிஸை பின் பற்றுவதாக
சொல்லும் நீங்கள் உங்கள் பத்திரிக்கைகளில் இந்த தர்மத்தை பின் பற்றுகிறீர்களா? மற்ற சமுதாயத் தலைவர்கள் பற்றி உணர்வில் எழுதும் போது சம்மந்த பட்டவரிடம் கேட்டுத்தான் எழுதினீர்களா?

ஜவஹிருல்லாஹ் சாமியாரிடம் ஆசி வாங்கினார்! காதர் மைதீன் சாமியாரின் காலில் விழுந்தார்! என்று செய்தி வெளியிட்டு அவர்களின் கண்ணியத்தோடு விளையாடிய போது அவர்களிடம் விளக்கம் கேட்டு வெளியிட்டீர்களா? அவர்களாக முன் வந்து விளக்கம் தந்த போதும் அதை அதை மறுத்து உங்கள் கருத்தை தானே இன்று வரை கூறிக்கொண்டு இருக்கிறீர்கள்.

கவிக்கோ வக்பு வாரியத்தில் ஊழல் செய்தார் என செய்தி வெளியிட்ட போதும் , பாக்கர் சிலை திறப்பு விழாவில் பங்கேற்றார் என்று எழுதிய போதும் இன்று நீங்கள் கூறும் பத்திரிகை தர்மம் கடை பிடிக்கபபட்டதா?

இன்று நக்கீரனுக்கு எதிராக போராட்டம் நடத்துவது நியாயம் என்றால்; பாக்கரை பற்றி உங்கள் ஏடுகளில் எழுதிய மிக மோசமான வார்த்தைகளுக்கு எத்தனை முறை இ.த.ஜ. போராடியிருக்க வேண்டும்!

உங்களை பற்றி பேசிய வார்த்தைக்காக பாக்கர் ஜவஹிருல்லாஹ் வழக்கு தொடுக்கும் வாய்ப்பளித்து விட்டனர்.என்று கூறினீர்களே! இப்போது நக்கீரனுக்கு எதிராக ஆர்பாட்டம் நடத்தி, இனி நீங்கள் உங்களின் பத்திரிகை செய்திகளுக்காக மற்றவர்கள் உங்கள் அலுவலகம் முன் போராடுகின்ற வாய்ப்பை இப்போது நீங்கள் வழங்கியுள்ளீர்கள் ! இனி அடிக்கடி அது நடக்கும் ! ஏன் எனில் மற்றவர்களை பற்றி மோசமாக எழுதுவதில் உங்களுக்கு நிகர் நீங்களே!

நக்கீரன் அலுவலக முற்றுகையின் போது இவர்கள் போட்ட கோசங்கள் காது கொடுத்து கேட்க முடியாத அளவுக்கு இருந்ததாகவும் , இது மாதிரியான கோசங்களை எப்படி உங்கள் பெண்கள் ஏற்று கொண்டு இதில் கலந்து கொள்கின்றனர்? என்று நக்கீரன் அலுவலக ஊழியர் கேட்ட போது ,உண்மையிலேயே நமக்கு வேதனையாக இருந்தது.

0 comments:

Post a Comment