Monday, October 4, 2010

நக்கீரன் ஆபீஸ் முற்றுகை -"தனிநபர் தற்காப்பு ஜமாத்தாக மாறிய த த ஜ !

"தொடர் முஸ்லிம் விரோத போக்கை கண்டித்து நக்கீரன் ஆபீஸ் முற்றுகை "
தற்போதைய த த ஜ வின் முக்கிய போராட்டம்.... பாபர் மஸ்ஜித் வழக்கில் முஸ்லிம்களுக்கு ஏற்பட்டிருக்கும் அநீதியை கண்டு உலகமே வேதனையில் திளைத்துள்ள போது பீ. ஜெ. என்ற தனி நபரை பற்றி செய்தி வெளியிட்டதற்காக மிக முக்கிய ஆர்பாட்டம் நடத்தி விட்டு மீண்டும் இது தனி நபர் துதி பாடும் ஜமாஅத் தான் என்று நிரூபிதிருக்கிரார்கள்.

மிக முக்கிய பிரச்சினையான பாபர் மஸ்ஜித் விவகாரத்தை புறந்தள்ளிவிட்டு, கேவலம் இயக்க தலைவராகவும் இல்லை, சாதாரண தொண்டன் என்று தன்னை பறைசாற்றிகொள்ளும் இந்த பீ. ஜெ. திருவிடைசெரி சம்பவத்தில் கைதாகி இருக்கும் 12 பற்றி சற்றும் கவலை கொள்ளாமல், அவர்களுக்காக போராட்டம் எதுவும் நடத்தாமல் தன்னை பற்றிய செய்தி வெளி வந்தவுடன் தன்னை நல்லவன் என்று காட்டுவதற்காக அணைத்து வழிமுறையும் கையாளுகிறார்.

இவர் நடத்தும் சமிபத்திய கூட்டம் மற்றும் போரட்டங்கள் வாயிலாக ஒன்று மட்டும் நிரூபணம் ஆகிறது, நியாய உள்ளம் படைத்த அணைத்து தரப்பினரின் ஈடுபாடுகள் கணிசமாக குறைந்து வருவதை உன்னிப்பாக கவனிப்பவர்களுக்கு தெரியும். நாளுக்கு நாள் குறைந்து வரும் செல்வாக்கு, தன்னுடைய செல்வாக்கு மேலோங்குவதற்காக அவர் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் அவரை கேவலத்தில் கொண்டு சேர்க்கும் அவலம் அவருக்கே நன்றாக தெரியும். இன்ஷா அல்லாஹ் இனியாவது உருப்படியாக சமுதாய வழியில் தொடர்வாரா என்று பொறுத்திருந்து பார்போம்.
BY
A.J. ABDUL KAREEM M.B.A

0 comments:

Post a Comment