Sunday, October 24, 2010

இராக்கில் அத்து மீறி நுழைந்த டோனி ப்ளைரின் இல்லத்தில் புகுந்த இஸ்லாம்!




லண்டன், அக்.24- பிரிட்டனின் முன்னாள் பிரதமர் டோனி பிளேரின் மனைவியின் சகோதரி இஸ்லாமிய மதத்துக்கு மாறியுள்ளார்.

இத்தகவல் லண்டனில் இருந்து வெளிவரும் "டெய்லி மெயில்" பத்திரிகையில் வெளியாகியுள்ளது.

டோனி பிளேர் மனைவி செர்ரி பிளேர். இவரது சகோதரியான லாரன் பூத் (43) ஈரானில் ஒளிபரப்பாகும் ஆங்கிலத் தொலைக்காட்சி ஒன்றில் பணியாற்றி வந்தார். அப்போது, ஈரான் கொம் நகரில் உள்ள பாத்திமா அல்-மசுமெ வழிபாட்டுத் தலத்துக்குச் சென்று வந்தாராம். அதன்பின்னர், லாரன் பூத் இஸ்லாமிய மதத்துக்கு மாறினாராம்.
ஈரானில் இருந்து பிரிட்டன் திரும்பிய அவர், தற்போது தினமும் 5 முறை தொழுகை செய்வதாகவும், வீட்டுக்கு அருகில் உள்ள இஸ்லாமிய வழிபாட்டுத்தலத்துக்குச் சென்று வருவதாகவும் கூறியுள்ளார்.

நன்றி-தினமணி

0 comments:

Post a Comment