Tuesday, October 26, 2010

இந்தியா டுடே பேட்டியும் அண்ணனின் பல்டியும்!



சமிபத்தில் வெளியான இந்தியா டுடே பேட்டியில் பி.ஜே.வின் முரண்பாடுகள்: .

பல்டி ஒன்று - திருவிடசெரி கொலை விசயத்தில் சம்மந்தப்பட்ட குத்புதீன் ' எந்த விதத்திலும் ஜமாத்தோடு தொடர்புடையவர் இல்லை' என்ற நிலை மாறி'அமைப்பின் அனுதாபி' என ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளார்.

பல்டி இரண்டு; அரசியல்வாதிகள் சந்திப்பு தேவை இல்லை! உத்தரவு போட்டால் உயிரை கொடுத்து [!?] ஒட்டுகேட்போம்!என்று புதுபேட்டையில் பேசிய பி.ஜே. இன்று மார்கத்தை முன்னிறுத்தும் நீங்கள் அரசியல் தலைவர்களை சந்திக்கின்றீர்கள் ? என்ற கேள்விக்கு 'அவர்களிடத்தில் தான் ஆட்சி அதிகாரம் இருக்கிறது" என்று கூறியுள்ளார்.

பல்டி மூன்று : பாபர் மஸ்ஜித் தீர்ப்பை முஸ்லிம்கள் எப்படி பார்க்கிறார்கள்? என்ற கேள்விக்கு 'தங்கள் எதிர்ப்பை காட்ட இயலாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்'! என்று தன் முந்தைய நிலைப்பாட்டை முஸ்லிம்களின் நிலைப்பாடாக கூறி பிந்தைய தன் போராட்ட நிலைப்பாட்டை பின்னுக்கு தள்ளியுள்ளார் [இது செயற்குழுவுக்கு முந்திய பேட்டி என்றாலும் பல்டி பல்டிதான்]

பல்டி நான்கு: இது வரை அல்லாஹ்வை நம்பிய அண்ணன் 'மதரசாக்களில் ஆங்கிலமும் அறிவியலும் புறக்கணிக்கப்பட்டது துரதிஷ்டம் ஆன முடிவு' ' என்று சொல்லி ' அதிஷ்டத்தை' நம்பத் துவங்கியுள்ளார்.

0 comments:

Post a Comment