Tuesday, October 19, 2010

போராட்டத் துளிகள் !


போராட்டத்தில் முஸ்லிமல்லாத சகோதர்கள் கலந்து கொண்டது மிகவும் மகிழ்ச்சியளித்தது!
மீனவ சமுக பிரதிநிதிகளும் , சேப்பாக்கம் லாக் நகர் பகுதியில் இருந்து வந்த சகோதரர்கள், கோவையில் இருந்து விபூதி ,பொட்டு உத்ராட்ச மாலை சகிதமாய் காட்சியளித்த பெரியவர் , போன்றவர்களை பார்த்த போது ,பெரும்பான்மை இந்து சகோதரர்கள் இந்த தீர்ப்பை ஏற்கவில்லை என்பது தெரிந்தது!

வின் டி,வியில் வந்த போராட்ட அறிவிப்பைக்கண்டு போராட்டத்திற்கென மும்பையில் இருந்து தன் குடும்பத்தோடு வந்த ஒருவரைக் கண்ட போது உண்மையிலே வியப்பை ஏற்படுத்தியது!

மாலை ஏழு மணிவரை இழுத்தடித்த காவல் துறையினர் , காரணமாக அரசியல் சட்ட புத்தகத்தை யாரோ சில சகோதர்கள் எரித்தாக கூறினர்.

மாலை ஏழு மணி வரைக்கும் லுஹர், அசர் மக்ரிப் தொழுகைகள் அணி அணியாக நிறைவேற்ற பட்டன! பெண்களை வைத்திருந்த மண்டபத்தில் மசூதா ஆலிமாவும், ஆண்கள் வைக்கப்பட்டிருந்த மண்டபத்தில் மாநில பேச்சாளர் மைதீன், மற்றும் நாச்சியார் கோயில் ஜாபார் ஆகியோர் உரை நிகழ்த்தினர்.

வழக்கத்திற்கு மாறாக இந்த போராட்டத்தில் நம் சகோதரர்களின் உணர்ச்சி கொந்தளிப்பு சற்று கூடுதலாகவே இருந்தது! தொண்டரனியும் தலைவர்களும் கூட்டத்தை கட்டுக்குள் வைத்துக் கொள்ள கஷ்டப்பட்டனர்.

தர்வேஷ் ரஷாதி தொடங்கி , தேவ நாதன் ,திருமா , மார்க்ஸ் அப்பல்லோ ஹனிபா , மறுமலர்ச்சி பாருக் , உட்பட அனைவரது உரையும் சிறப்பாக இருந்தது!

பாபுலர் பிரான்ட் பொருளாளர் உரை நிகழ்த்தியதோடு , அதன் தொண்டர்கள் சிலர் தங்கள் கொடியோடு வந்திருந்தது தமிழகத்தில் பொதுவான போராட்டங்களில் அவரவர் கொடியோடு முஸ்லிம் இயக்கங்கள் பங்கேற்கும் ஒரு புதிய வழிமுறைக்கு இந்தபோராட்டம் வழிவகித்தது.

முறையான அழைப்பு விடுத்தும் த.மு.மு.க தலைவர்கள் யாரும் இந்த போராட்டத்தில் பங்கெடுக்காததும், தீர்ப்பு குறித்த அவர்களின் நிலைப்பாடும் இ.த.ஜ. தொண்டர்களிடத்தில் மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது!
இவர்களின் உலகாதய தேர்தல் விசயங்களுக்காக நாம் தெருத்தெருவாக அலைந்து பிரசார பணி செய்ததோடு மட்டுமின்றி , திருவல்லிக்கேணியில் தேர்தல் நேரத்தின் போது நடந்த வன்முறையின் போது ,களமிறங்கி போராடினோம் ! ஆனால் அல்லாஹ்வின் பள்ளி விசயத்திற்காக அழைத்தபோது இவர்கள் நடந்து கொண்டது வேதனை அளிக்கிறது! என்று பல சகோதரர்கல் வருந்தினர்.

0 comments:

Post a Comment