கோவையில் த.த.ஜ. மர்கஸ் ஒன்றின் வெளியே நோட்டீஸ் விநியோகித்து கொண்டிருந்த இ.த.ஜ.வில் புதிதாக இணைத்து கொண்ட முன்னாள் த.த,ஜ. மாவட்ட பேச்சாளர் அப்துல் ரஹ்மானை 'இங்கு நின்று நோட்டீஸ் கொடுக்க கூடாது' என த.த.ஜ.வை சேர்ந்த சிலர் தடுத்துள்ளனர். இவர் ஏன் கொடுக்க கூடாது ? நீங்கள் மற்ற பள்ளிவாசல்களில் நின்று கொடுக்கும் போது நான் ஏன் கொடுக்க கூடாது? நான் என்ன நோட்டீஸ் கொடுக்கிறேன் என்று பார்த்தீர்களா? பாபர் மஸ்ஜித் பற்றிய நோட்டீஸ் கொடுக்க கூடாது என தடுக்க நீங்கள் என்ன சங் பரிவார் கொள்கை உடையவர்களா? அவர்கள் கூட இதை கடை வீதிகளில் கொடுக்கும் போது தடுக்கவில்லையே? நான் உங்கள் பள்ளிக்குள் வந்து கொடுக்கவில்ல்யே? வீதியில் நின்று கொடுப்பதற்கு ஏன் தடுக்கின்றீர்கள்? என்று கேட்டதும் , கேள்விக்கு பதிலின்றி அவரை தாக்க தொடங்கியுள்ளனர்.
'நோட்டீஸ் கொடுத்தால் கொன்று விடுவேன் ' என்று சட்டையை பிடித்து இழுத்து கீழே தள்ளியுள்ளனர். பாபர் மஸ்ஜித் நோட்டீஸ் கொடுப்பதற்கே கொலை என்றால் திருவிடசேரி கொலை எல்லாம் நீங்கள் செய்திருப்பீர்கள்' என்று கூற , பின்னர் காவல் துறையினர் வந்து சமரசம் செய்து அனுப்பியுள்ளனர்.பின்னர் ஜும்மா முடிந்ததும் 'சிலர் இங்கு இருந்து விலகி இதஜ வில் இணைந்துள்ளனர் அவர்களோடு யாரும் தொடர்பு வைத்து கொள்ள வேண்டாம்.. என அறிவிப்பும் செய்துள்ளனர்.
இது பற்றி அப்துல் ரஹ்மான் கூறும் போது 'நாம் விலகியதும இ.த.ஜ.வில் இணைந்ததும் நிறைய தவ்ஹீத் சகோதரர்களுக்கு தெரியாமல் இருந்தது! அவர்கள் வாயாலேயே ஜும்மாவில் நமக்கு இலவச விளம்பரம் வழங்கியுள்ளனர்' என்றார் இனி கோவை மாவட்ட இ.த.ஜ வீரியமாய் களமிறங்கும்.என்று கூறினார்.
கடந்த மூன்று நாளாக மண்ணடியில் பிர்தவ்சி பேசிய ' பி.ஜே. பற்றிய புகழ்ச்சியையும் பாக்கர் பற்றிய இழிவான விமர்சனத்தையும் கண்ட பலர் போன் செய்து ' இவ்வளவு கேவலமாக போய் விட்டார்களே'.என குமுறிய போது இதற்க்கு முன்னர் உங்களை யாரென்று எனக்கு தெரியாது! உங்களையும் என்னையும் இணைக்கும் வேலையை இலவசமாக செய்து , எனக்கு நன்மை சேர்க்கும் அண்ணனின் விளம்பரத்திற்கு நன்றி' என்ற பாக்கரின் சிந்தனையை போலவே கோவை இ.த,ஜ.சகோதரர் அப்துல் ரஹ்மானின் சிந்தனையும் அமைந்திருந்தது.அல்ஹம்து லில்லாஹ்.
0 comments:
Post a Comment