Monday, October 11, 2010

மண்ணடியில் பிர்தவ்சியின் பிராண்டல்!

த.த.ஜ. சமிபத்தில் நடத்திய மண்ணடி பொது கூட்டத்தில் , கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் இருந்தெல்லாம் , மக்களை திரட்டி வந்துள்ளனர் . ஆற்காட்டில் இருந்து கூட மக்கள் வந்திருந்தனராம்! . கூட்டத்தில் பேசிய பிர்த்வ்சியின் பேச்சு பலரை முகம் சுளிக்க வைத்த செய்தியை கூட்டத்திற்கு சென்ற ஒருவர் நம்மிடம் கூறி வருந்தினார். பாவம் பாக்கரையும் பஸ்சையும் விட்டால் அவர்களால் இயக்கம் நடத்த முடியாது .

மேலும் திருவிடசேரி விசயத்தில் போஸ்டர் வெளியிட்ட இஸ்லாமிய கூட்டமைப்பை சகட்டு மேனிக்கு சாடியுள்ளார் . பாவம் அந்த கூட்டமைப்பில் உள்ள சிலர்தான் தான் தங்களை பிரதமரிடம் கூடி சென்றனர் என்பதால் அவர்களை விமர்சிப்பதை விட்டு விட்டார் . அது சரி கடந்த மாதம் ஜே.எம்.ஹாருனின் மைத்துனர் மவ்லனாவால், வட சென்னை கிளை ,மாவட்ட நிர்வாகிகள் தாக்கப்பட்ட போது, தலைமை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை! பாவம்!. ஸைக் அப்துல் ஜமாலியின் சீடரான சுன்னத் ஜமாஅத் ஐக்கிய பேரவையின் பாது காவலர், ஜே.எம்.ஹாருணை பகைத்தால் , வரும் தேர்தலில் கூட்டணி பேரம் எப்படி நடத்துவது , தேசிய லீக் பசிரை விமர்சித்தால் பிரதமரை சந்திக்க செய்த பிரயத்தனமெல்லாம் வெளிவருமே!

இவர்கள் பொது விசயத்திற்காக ஹாருனுடனும், பசிரிடமும் கை கோர்க்கலாமாம்! மற்றவர்கள் இரண்டு முஸ்லிம்களின் உயிர் இழப்பிற்காக ஒன்று சேரக் கூடாதாம்! என்ன நியாயம் இது? இந்தக் கொலையை சங் பரிவார கும்பல் செய்திருந்தால் நாம் சும்மா இருந்திருப்போமா ? மற்றவன் கொன்றால் கண்டனம்!. முஸ்லிம் கொன்றால் மவ்னமா?. 'நமக்கு எதிராக ஆயுதம் எந்துபவன் நம்மை சார்ந்தவன் இல்லை' என்ற அடிப்படையில் ஒன்று சேர்வது தவறா?

எப்படி இருப்பினும் கூட்டணி பேரமெல்லாம் இனி கை கொடுக்குமா என்பது சந்தேகமே! ஏன் எனில் இவர்களோடு கூட்டணி வைக்கும் கட்சிகளை புறக்கணிக்க வேண்டும்!என்று மாநில ஜமாத்துல் உலமா கூட்டமைப்புக்கு கோரிக்கை வைத்துள்ளதோடு , அரசியல் கட்சிகளுக்கும் கோரிக்கை வைக்க உள்ளதாக சமநிலை சமுதாய கட்டுரையில் குறிப்பிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment