Friday, October 22, 2010

'சிமி' இயக்கம் குறித்த அண்ணன் ஜமாஅத்தின் முரண்பட்ட ...

தடை செய்யப்பட்ட சிமி இயக்கத் தீவிரவாதிகளான பாக்கர், ஜவாஹிருல்லாஹ் மீதும், தமுமுக குண்டர்கள் மீதும், பயங்கரவாத பாப்புலர் பிரன்ட் மீதும் நடவடிக்கை எடு என்ற போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளதாக குழுமங்கள் வாயிலாக பரவுகிறது. அந்த போஸ்டர் அண்ணன் ஜமாஅத்தின் பெயரால் அடிக்கப்பட்டுள்ளது.

இந்த போஸ்டர் அண்ணன் ஜமாஅத் சார்பாக அடிக்கப்பட்டது உண்மையானால், அண்ணன் ஜமாஅத் சிமி விசயத்தில் இரட்டை வேஷம் போடுகிறது என்பது வெள்ளிடை மலை.

இதற்கு ரெம்பநாள் முன்னாடி போக வேண்டாம். சில நாட்களுக்கு முன்னால், ஆர்.எஸ்.எஸ்ஸுக்கும், சிமிக்கும் பெரிய வேறுபாடு இல்லை என்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் ராகுல்காந்தி கூறியதை விமர்சித்து,
''சிமிக்கும்-ஆர்.எஸ்.எஸ்ஸுக்கும் பெரிய வேறுபாடில்லையா'' என்ற தலைப்பில், சிமியை ஆதரித்து உணர்வு அக்டோபர் 15 -21 இதழில் எழுதியுள்ளார்கள்.

எழுதிய மை காய்வதற்கு முன்பாகவே சிமியை தீவிரவாத இயக்கமாக சித்தரிப்பதற்கு அண்ணன் ஜமாஅத்திற்கு எத்தகைய துணிச்சல்? எல்லாம் சிந்திக்காத பின்பற்றுபவர்கள் இருக்கும் தைரியம்தான்.

--
10/22/2010 09:19:00 AM அன்று இயக்கங்களின் மறுபக்கம். இல் abdul muhaimin ஆல் இடுகையிடப்பட்டது

0 comments:

Post a Comment