Tuesday, October 26, 2010

விமர்சனங்கள் நியாயமாக இருக்கட்டும்!

விமர்சனங்கள் நியாயமாக இருக்கட்டும்

அன்பு நண்பர்களே அல்லாஹ் உங்களுக்கு நேர்வழி காட்ட போதுமானவன்... நாமெல்லாம் தவ்ஹீத் என்ற வட்டத்திற்குள் இருந்து கொண்டிருக்கிறோம் என்பதை மறந்து தங்கள் வாயில் வந்த அணைத்து சொற்களையும் கொட்டி விடுகிரீகள், இது ஒரு பக்குவபட்ட தவ்ஹீத் வாதியின் அடையாளம் அல்ல... நான் உங்களுக்கு சொல்ல விரும்புவதெல்லாம் தயவு செய்து பிறருக்காக நாம் கானதவற்றிர்காக உங்களுடைய நன்மைகளை இழக்கவேண்டாம். அல்லாஹ்வின் மீது ஆணையாக சொல்லுங்கள் உங்களில் எத்தனை பேர் பாக்கர் அவர்களை சந்தித்து விளக்கம் கேட்டு இருக்கிறீர்கள் ?.

ஒரு தனி நபர் குற்றம் சாட்டுவதால் அவர் குற்றவாளி ஆகி விடுவாரா ? மார்க்க அடிப்படையில் எந்த குற்றச்சாட்டை அவர் நிரூபித்துள்ளார் ? விவாதத்துக்கு அழைத்தால் மட்டும் போதுமா ? எத்தனை விவாதங்கள் உண்மையை வெளிப்படுத்தியுள்ளது மனசாட்சியுடன் சிந்தித்து பாருங்கள். வக்கீல்களில் யார் சிறந்தவர் தெரியுமா குற்றம் செய்தவரை காப்பாற்றுபவர் தான் வாத திறமையுள்ளவர், அது ஒரு புறம் இருக்கட்டும் இஸ்லாம் பாக்கர் விசயத்தில் என்ன நிலைப்பாடு எடுக்க சொல்கிறது...? குற்றம் சுமதுவபவர் தான் குட்ரத்தை நிரூபிக்க கடமை பட்டவர் எத்தனையோ மேடைகளில் பாக்கரை வசை பாடும் த த ஜவினர் ஏன் ஒன்றை கூட இது வரை நிரூபிக்கவில்லை ?

உதாரணத்திற்கு ஒரு சீன பழங்கதையை இங்கே குறிப்பிட்டால் நன்றாக இருக்கும்..... இரு விவசாயம் செய்யும் நண்பர்கள் சிறு வயது முதல் ஒன்றாக இனைந்து செயல்படுவார்கள், இருவரும் விவசாய வேலைக்கு காலையில் ஒன்றாக சென்று மாலையிலும் ஒன்றாகவே வீடு திரும்புவர், இருவரில் ஒருவர் தனது விவசாய கருவியை வேலை செய்யும் இடத்துக்கு அருகில் ஒரு மறைவடத்தில் வைத்து செல்வது வழக்கம் காலையில் வந்ததும் கருவியை எடுத்து பிறகு அந்த இடத்திலேயே வைத்து செல்வது அவரது வளக்கம். ஒருமுறை நண்பரில் ஒருவர் வேறு வழியாக சற்று தாமதமாக வேலைக்கு வருகிறார்..... மற்றொரு நண்பர் வழக்கம் போல் தன்னுடைய வழியில் சென்று தான் தினமும் கருவியை வைக்கும் இடத்தில் சென்று பார்த்தாள் அவருக்கு மாபெரும் அதிர்ச்சி அவருடைய பொருளை காண வில்லை அவருக்கோ மிகவும் மன குழப்பம் தன்னுடைய நண்பரை தவிர யாருக்கும் அந்த இடம் தெரியாது இருந்தாலும் தன்னுடைய நண்பனையும் சந்தேகம் கொள்ள மனமில்லை, மௌனமாக தன்னுடைய வேலைகளை செய்கிறார் வேலைகள் முடிந்ததும் நண்பனை சந்திப்பதற்காக நின்ற தருணத்தில் அவரோ சற்று முன்னரே தன் வேலை முடிந்ததும் வேறு வழியாக சென்று விட்டார் தற்போது கருவியை பறிகொடுத்த நண்பருக்கு மிகவும் வேதனையும் நண்பனின் மீது சந்தேகமும் அதிகமாகி விட்டது, மறு நாள் நண்பனை பார்த்தல் ஒரு திருடன் எப்படி தென்படுவானோ அப்படியே தன் நண்பனும் நடத்தையும் தென்பட்டது, உடனே பொருளை பறிகொடுத்த நண்பன் தன் ஊர் தலைவரிடம் முறையிட்டு பஞ்சாயத்தை கூட்டி நண்பனை முன் நிறுத்தி தன்னுடைய வார்த்தை சாதுரியத்தால் நண்பனை குற்றவாளியாகி பிறகு அவனிடம் உரிய நஷ்ட ஈட்டையும் பெற்று சென்றான், வீடு சென்ற நண்பனுக்கு திடீர் நியாபகம் தான் பொருளை கடைசியாக வைத்த இடம் தன்னுடைய சகோதரி வீடு முன் இருந்த குழாய் அடியிலோ என்று சந்தேகம் வலுத்தது, மறுநாள் விடிந்ததும் தங்கை வீடு அருகே சென்று பார்த்தான் அங்கு வைத்த இடத்தில் பொருளை கண்டதும் அவனுக்கு மிகபெரும் அதிர்ச்சி, உடனே தன நண்பனை பார்க்க சென்றான் விசயத்தை சொல்லாமல் தன நண்பனை பார்க்கும் பொழுதெல்லாம் அவனுக்கு தன்னுடைய நண்பன் ஒரு நிரபராதி போலவே தென்பட்டது, இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால் நாம் எந்த கண்ணோட்டத்தில் பார்கிறோமோ அதே கண்ணோட்டத்தில் தான் அனைத்தும் தென்படும்.

மேற்குரிபட்டது பழமொழி என்றாலும் அது தான் நிதர்சனமான உண்மை மனசாட்சியுடன் பார்பவர்களுக்கு நன்றாகவே தெரியும், இதற்கு ஒப்பார் போல் ஒரு ஹதீசையும் நினைவு படுத்த விரும்புகிறேன், ஒரு முறை ரசூல் (ஸல்) அவர்கள் தம்மிடம் நியாயம் கேட்க வந்த இருவரில் ஒருவர் தன் வாத திறமையால் அநியாயக்காரன் என்னிடம் தீர்ப்பை வாங்கி சென்று விட்டால் அவன் வாங்கி செல்வது தீர்ப்பை அல்ல நரக நெருப்பை. இப்படியாக வாத திறமையை கொண்டு எந்த தீர்ப்பையும் பெற்று செல்ல முடியும் என்பது ரசூல் (ஸல்) அவர்களின் கூற்று.

அன்பிற்கினிய சகோதரர்களே கேட்பதையெல்லாம் பரப்பார்தீர்கள் மனசாட்சியுடன் நியாய உணர்வோடு சிந்தித்து செயல்படுங்கள் அனைவரின் மானத்தையும் மதிக்க சொல்லும் மார்க்கம் தான் இஸ்லாம், வல்ல ரஹ்மான் நாம் அனைவரையும் நன்மக்கள் கூட்டத்தில் சேர்த்து அருள் பாலிப்பானாக.

வஸ்ஸலாம்

அ. ஜ. அப்துல் கரீம்


--

0 comments:

Post a Comment