தமிழக முதல்வர் கலைஞர் தான் சுயமரியாதைக்காரன் என்றும், பெரியாரின் சீடன் என்றும் அடிக் கடி கூறிக் கொள்வார். மாணவப் பருவத்திலேயே திராவிடர் கழக கொடியை ஏந்தியவன் என்று தன் னுடைய பொது வாழ்க்கையின் ஆரம்ப நாட்களைப் பற்றி குறிப்பிடு வார்.
சுயமரியாதை திருமணத்தை அங்கீகரித்து சட்டமியற்றியவுடன் பெரியாரின் தொண்டையில் சிக்கிய முள்ளாக இருந்த பிரச்சûயைத் தீர்த்தவர் கலைஞர் என்று பெரியாரிஸ்டுகள் சிலாகித்தனர்.
ஆனால் கலைஞர் மஞ்சள் துண்டு அணிந்த நாள் முதலாக அவர் மூடநம்பிக்கையை நம்ப ஆரம்பித்துவிட்டதாக பரவலாக குற் றச்சாட்டுகள் எழுப்பப்பட்டு வருகிறது.
சில ஆண்டுகளுக்கு முன் தன்னு டைய மனைவியாருடன் திருவேற் காடு கோயிலுக்கு கலைஞர் சென்ற தாகவும், தேர்தல் பிரச்சாரம் துவங் குவதற்கு முன் குடும்பத்தோடு சொந்த ஊருக்குச் சென்று குல தெய்வத்திற்கு பூசை நடத்துவ தாகவும் பல குற்றச்சாட்டுக் கள் கிளப்பப்படுகின்றன.
கலைஞரின் கோபாலபுரம் வீட் டிற்கு வருகை தந்த சாய் பாபாவின் கால்களில் விழுந்து கலைஞரின் குடும்பத்தினர் ஆசிர்வாதம் பெற் றுக் கொண்டதை கலைஞர் கண்டு கொள்ளாமல் இருந்தது பெரி யாரிஸ்டுகளால் பெரும் சர்ச்சை யாக்கப்பட்டது.
கடந்த சில நாட்களுக்கு முன் தஞ்சை பெரிய கோவில் ஆயிரமா வது ஆண்டு விழா பற்றி அரசின் அறிவிப்பு வெளிவந்தவுடன் கலைஞ ரின் மூடநம்பிக்கை எதிர்ப்பு அறி விப்பு என்று திமுகவினரால் பெரிதும் பிரபலப்படுத்தப்பட்டது.
தஞ்சை பெரிய கோவிலின் மெயின் கேட் வழியாக வரும் பெரும் பதவியில் இருப்பவர்கள் விரைவில் பதவி இழப்பார்கள் என் கிற மூடநம்பிக்கை தமிழக அரசியல் வாதிகள் மத்தியில் வலுவாக இருந்து வருகிறது. இதற்கு எந்த கட்சி பிரபலங்களும் விதிவிலக்கல்ல.
முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி, முன்னாள் ஜனாதிபதி எஸ்.டி. சர்மா ஆகியோர் இங்கு வந்து சென்ற சில மாதங்களில் பதவி இழந்ததினாலும், இங்கு வந்து சென்ற சில மாதங்களில் எம்.ஜி.ஆர். நோய்வாய்ப்பட்டு இறந்ததினாலும் அரசியல்வாதிகள் தஞ்சை பெரிய கோவில் மெயின் கேட் பக்கம் செல்வதேயில்லை.
தஞ்சையில் பொது நிகழ்ச்சிகளுக்கு வரும் பிரபலங்களும் மெயின் கேட் வழியாக உள்ள சாலையில் செல்லாமல், புது ஆற்றுப் பாலம் வழி யாக சுற்றிக் கொண்டு செல்லும் அளவிற்கு நிலைமை சென்றுவிட் டது.
மாநில சட்டசபைத் தேர்தல் தேதிக்கான அறி விப்புகள் வர சில மாதங் களே உள்ள நிலையில், கலைஞர் அரசின் தஞ்சை பெரிய கோவில் ஆயிரமாவது ஆண்டு விழா பற்றிய அறிவிப்பு பலரின் புருவங்களை உயர்த்தத்தான் செய்தது.
கோவில் கும்பாபிஷேகத்தின் போது ஏற்பட்ட தீ விபத்தினை பார்வையிட வந்த முதல்வர் கலைஞர் கோவிலின் மெயின் கேட் வழியாக உள்ளே வராமல், வேறு வழியாக உள்ளே வந்ததை சுட்டிக்காட்டி கலைஞருக்கு மூடநம்பிக்கை உண்டு - அதனால் தஞ்சை பெரிய கோவில் விழாவில் பங்கேற்க வரும் கலைஞர் மெயின் கேட் வழியாக வரமாட்டார் என்று ஒரு சாரார் வாதிட்டனர்.
கலைஞர் பெரியாரின் சீடர், பகுத்தறிவு பிரச்சாரத்தின் பீரங்கி, மூடநம்பிக்கை ஒழிப்புப் பிரச்சாரத்தின் முன்னணியில் உள்ளவர், அதனால் தைரியமாக மெயின் கேட் வழியாக சென்று விழாவில் பங்கேற்பார் என்று கலைஞரின் ஆதரவாளர்கள் வீரத்தோடு பேசினர்.
வாதப் பிரதிவாதங்கள் வலுப் பெற்றதால் தஞ்சை பெரிய கோவில் விழாவினை பலர் ஆர்வத்தோடு எதிர்பார்த்தனர். விழாவின் சிறப்பம்சங்களை விட கலைஞர் எந்த கேட் வழியாக வருவார் என்பதே மிகப் பெரிய பேச்சாக இருந்தது.
அனைவரும் ஆவலுடன் எதிர் பார்த்த தஞ்சை பெரிய கோவில் ஆயிரமாவது ஆண்டு விழா அண் மையில் நடைபெற்றது. சிறப் பான வரவேற்புகளுடன் வரவேற்கப்பட்ட கலைஞல் எந்த கேட் வழியாக நுழைகிறார் என்று உன்னிப்பாக பார்த்துக் கொண்டி ருந்த நிலையில், மெயின் கேட் வழியாக நுழையா மல் அருகில் உள்ள வேறு பாதை வழியாக கோயிலுக்குள் நுழைந்தார்.
பெரியாரின் தீவிர சீடர்களில் ஒருவர் என்றும், தீவிர நாத்திகர் என்றும் கூறப்படும் கலைஞர், மெயின் கேட் வழியாக நுழையா மல் வேறு கேட் வழியாக நுழைந்து மூடநம்பிக்கைக்கு மதிப்பளித்திருப் பது பெரியாரிஸ்டுகளை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
- அபு சுபஹான்
0 comments:
Post a Comment