Thursday, October 28, 2010

இந்திய இறையாண்மைபற்றி பேச இவர்களுக்கு தகுதி உள்ளதா?




ஆடு நனைகிறதே என்று ஓநாய் அழுத கதையாக...ஆளும் நயவஞ்சக காங்கிரஸ் அரசும்,
அக்கிரமத்தையும் அநியாயத்தையும்,வன்முறையையும் கொள்கையாக கொண்டுள்ள மதவெறி
பிடித்த பா ஜ க அரசும் இப்போது கையில் எடுத்து கூப்பாடுபோட்டு கொண்டு இந்திய இறையாண்மையை பற்றி பிரபல பத்திரிக்கை ஆசிரியரும், சமூக போராளியுமான சகோதரி அருந்ததி ராய் இழிவாக அவமானம் ஏற்படும் வகையில் பேசிவிட்டார்,என்ற பிரச்சனையை
கிளப்பிகொண்டிருக்கிறது,தங்கள் மட்டும்தான் இந்தியாவின் இறையாண்மையை மதிபவர்கள்
மற்றவர்கள் அதை மிதிப்பவர்கள் என்ற இவர்களின் கருத்து எந்த அளவிற்கு உண்மை?
இந்தியாவின் இறையாண்மையை சாகடித்தது யார்? அதற்க்கு முன் பிரபல பத்திரிக்கை ஆசிரியரும், சமூக போராளியுமான சகோதரி அருந்ததி ராய் அவர்களின் கஷ்மீர் மக்களின் நிலை பற்றிய உண்மை அறிக்கை பார்ப்போம்.

இந்த அறிக்கையை ஸ்ரீநகர், காஷ்மீரிலிருந்து வெளியிடுகிறேன். இன்றுகாலை செய்தித்தாள்கள் அனைத்திலும், பிரிவினைவாத குற்றச்சாட்டுக்களின் பேரில் நான் கைது செய்யப்படக் கூடும் என செய்தி வெளியிட்டுள்ளன. காஷ்மீர் குறித்து நான் சமீபத்தில் பேசிய பேச்சை விமர்சித்துள்ளன.

ஆனால் காஷ்மீர் மக்கள் தினசரி சொல்லி வருவதைத்தான் நான் அன்று பேசினேன். சுதந்திரம் வேண்டும் என்று கூறுகிறார்கள் காஷ்மீரிகள். அதைத்தான் நான் எனது பேச்சில் குறிப்பிட்டேன். கடந்த பல ஆண்டுகளாக பலரும் பேசியதை, எழுதியதைத்தான் நான் சொன்னேன்.

நீதி மறுக்கப்படுபவர்களுக்கு அதை வழங்குங்கள் என்றுதான் நான் எனது பேச்சுக்களில் எப்போதுமே வலியுறுத்தி வருகிறேன். உலகிலேயே மிகவும் மோசமான ராணுவ ஆக்கிரமிப்பை இந்திய அரசு மேற்கொண்டு வருகிறது என்றுதான் நான் சொன்னேன்.

எனது பேச்சுக்களை சரிவரப் புரிந்து கொண்டு படித்துப் பார்த்தால், அதில் நீதி வழங்குங்கள் என்ற கோரிக்கை புதைந்திருப்பதை உணர முடியும். காஷ்மீர் மக்களுக்கு நான் நீதிதான் கேட்கிறேன். உலகின் மிகவும் மோசமான ராணுவ ஆக்கிரமிப்பின் கீழ் வாழும் காஷ்மீர் மக்களுக்கு நீதி தேவை என்றுதான் நான் கேட்டேன்.

தங்களது சொந்த நிலத்தை விட்டு வெளியேற்றப்பட்ட, விரட்டப்பட்ட பண்டிட்டுகளுக்கு நியாயம் வழங்குங்கள் என்றுதான் கேட்கிறேன்.

காஷ்மீரில் தங்களது உயிரை நீத்து, கடலூரில் ஏதோ ஒரு மூலையில் குப்பைகளுக்கு மத்தியில் சமாதியாகக் கிடக்கும் தலித் வீரர்களுக்கு நியாயம் வழங்குங்கள் என்றுதான் கேட்கிறேன்.

காஷ்மீரில் நடந்து வரும் இந்த தேவையற்ற போருக்கான செலவுகளை அப்பாவி மக்களின் தலை மீது சுமத்துகிறீர்களே, அந்த அப்பாவி இந்தியர்களுக்கு நீதி வழங்குங்கள் என்றுதான் கேட்கிறேன்.

நான் நேற்று ஆப்பிள் நகரான சோபியானுக்குச் சென்றிருந்தேன். ஆசியா, நிலோபர் என்ற இரு பெண்களின் கொடூரக் கற்பழிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த ஆண்டு 47 நாட்கள் அந்த நகரம் மூடிக் கிடந்தது. அந்த இரு பெண்களின் மரணத்திற்கும் இது வரை நீதி கிடைக்கவில்லை.

நிலோபரின் கணவரும், ஆசியாவின் சகோதரருமான ஷகீலை நான் சந்தித்தேன். கோபமும், விரக்தியும், வேதனையும் கொப்பளிக்கும் முகங்களுடன் குழுமியிருந்த மக்களுக்கு மத்தியில் நான் ஷகீலுடன் பேசினேன். அவர்களுக்கெல்லாம் இப்போது உள்ள ஒரே கோரிக்கை இந்திய அரசிடமிருந்து சுதந்திரம் வேண்டும் என்பது மட்டுமே. அப்போதுதான் தங்களுக்கு நீதி கிடைக்கும் என்று அங்குள்ள மக்கள் கருதுகிறார்கள்.

கல்வீசித் தாக்குதலில் ஈடுபட்ட இளைஞர்களை சந்தித்தேன். ஒரு இளைஞனுடன் நான் பயணித்தபோது, தாங்கள் எப்படியெல்லாம் பாதுகாப்புப் படையினரால் தண்டிக்கப்பட்டோம் என்பதை அந்த இளைஞன் விவரித்தான். தனது நண்பர்கள் 3 பேரையும் பிடித்த பாதுகாப்புப் படையினர் கை விரல்களில் இருந்த நகங்களை பிடுங்கி பாதுகாப்புப் படையினர் கொடூரமாக தண்டித்ததாக கூறினான்.

நான் திங்கள்கிழமை ஸ்ரீநகரில் பேசியதும், பின்னர் டெல்லியில் நான் பேசியதும், எனது கருத்து அல்ல, எனது குரல் அல்ல. மாறாக காஷ்மீரிகள் சொல்வதைத்தான் நான் சொன்னேன். அவர்கள் தினசரி அதைத்தான் கூறி வருகிறார்கள், கோரி வருகிறார்கள்.

கடந்த சில ஆண்டுகளாக நான் அவதூறாகவே பேசி வருவதாக பல ஊடகங்கள் செய்தி வெளியிடுகின்றன. இந்தியா உடைய வேண்டும் என நான் விரும்புவதாக கூறுகிறார்கள். ஆனால் நான் சொல்ல வருவது வேறு. மக்கள் கொல்லப்படக் கூடாது, கற்பழிக்கப்படக் கூடாது, கைது செய்யப்படக் கூடாது, விரல்களிலிருந்து நகங்களை பிடுங்கிப் போடும் வேலையில் பாதுகாப்புப் படையினர் ஈடுபடக் கூடாது என்பது மட்டுமே எனது ஒரே வலியுறுத்தல். அன்பும், அமைதியும் தழைத்தோங்க வேண்டும் என்பதே எனது ஒரே ஆசை. காரணம், இப்படி தண்டிக்கப்படும் இவர்கள் அனைவரும் நம்மைப் போல இந்தியர்கள்தான்.

இப்போது எனது குரலை ஒடுக்க அரசு முயலுகிறது. தங்களது மனதிலிருந்து வரும் கருத்துக்களை எழுத்தாளர்கள், கலைஞர்கள் வெளியிட்டால் அதை அடக்க முயல்வது கோழைத்தனம். நீதி கேட்டுகுரல் கொடுத்தால் சிறை என்பது மிகவும் அவமானகரமானது.

ஜாதியின் பெயரால், மதங்களின் பெயரால் அட்டூழியம் செய்பவர்கள், அரசியல் பெயரால் கொலை செய்து குவிப்பவர்கள், தொழில் நிறுவனங்களை நடத்திக் கொண்டு பெரும் ஊழல் செய்து அதில் திளைப்பவர்கள், கற்பழிப்பாளர்கள், ஏழை மக்களை சுரண்டிப் பிழைப்பவர்கள் எல்லாம் சுதந்திரத்தோடு நடமாடலாம். ஆனால் அப்பாவிகளுக்காக நீதி கேட்டு குரல் கொடுத்தால் சிறைவாசம், அடக்குமுறை என்று இருக்கும்இந்த நாட்டைப் பற்றி நினைக்கையில் வெட்கமாக இருக்கிறது என்று கூறியுள்ளார் அருந்ததி ராய்.

இதில் அவர் என்ன சொல்லி இருக்கிறார் காஷ்மீர் மக்களின் விடுதலைக்கு சுதந்திரம்தான் தீர்வு
என்கிறார் அதுவும் அம்மக்களின் உணர்வுபூர்வமான பாதிப்பை அதற்கான தீர்வை தன்னுடைய வலுவான கருத்தாக சுதந்திரம் மட்டும் தான் தீர்வு என்றும்,காஷ்மீரில் இந்திய இராணுவம்
நடத்தும் அட்டுளிங்களுக்கும் அப்பாவி பெண்களின் கற்பை சூறையாடுவது அப்பாவி இளைனர்களை விசாரணை என்றபெயரில் அழித்து சென்று சித்தரவதை செய்து கொள்வதை இவர் கொஞ்சம் கூடுதலாக வெளிச்சம் போட்டு காட்டிவிட்டார், இந்திய ராணுவன் செய்யும் இந்த இழி செயலுக்கு இந்திய அரசின் முக்கள் வாசி பணம் இராணுவத்துக்கு கொடுத்து வீணடிப்பதை வெளிச்சம் போட்டு காட்டி உள்ளார், நாட்டின் சிறந்த குடிமகனாக கருதப்படும் இராணுவத்தினர் குடி மகன்களாக இந்தியாவின் இறையாண்மைக்கு கேடுதரும் வகையில் நடந்துகொள்வதை வெளிச்சம் போட்டு கட்டயுள்ளார்.

காஷ்மீர் பிரச்னையை தங்களுக்கு தேவைப்படும்போதேலாம் கையில் எடுத்து தங்களுக்கு சாதகமாக பயன் படுத்தும் நயவஞ்சக அரசியல் கட்சிகளின் இழி செயலை வெளிச்சம் போட்டு காட்டி உள்ளார்
இதில் என்ன தவறு இருக்கிறது தேச பிரிவினையை தூண்டுகிறார் என்ற நயவஞ்சக கருத்தை முன் நிறுத்திவிட்டால் போதும் மக்கள் மத்தியில் இடம் பிடித்துவிடலாம் என்ற குறுக்கு எண்ணம்
கொண்டவர்கள் தானே அரசியல் வா[ந்]திகள்.
ஒரு சமூக போராளி என்பவர் சமூதாயத்தில் நடக்கும் கொடுமைகளை எதிர்த்து குரல் கொடுக்க
நாட்டில் உரிமை இல்லையா?கருத்து சுதந்திரம் எங்கே போனது? அருந்ததி ராய் அவர்கள் சொன்னா அணைத்து உண்மைகளும் ஏற்கனவே பல ஊடகங்கள் பத்திரிக்கைகள் மக்கள் மத்தியில் வெளிச்சம் போட்டு காட்டிவிட்டன,அப்போதெல்லாம் வாய் திறக்காத இந்த அரசியல் சகுனிகள் இப்போதுமட்டும் ஏன் வாய் கூப்பாடுபோட்டுகொண்டு நரிகள் போல் ஊளை இடுகிறார்கள் என்பதுதான சமூக அக்கறை கொண்டவர்களின் ஆதங்கம்,

இந்தியாவின் இறையாண்மைக்கு கேடு வந்துவிட்டதாம் சொல்வது யார்?
இந்த பார்பன ப ஜ க மற்றும் நயவஞ்சக காங்கிரசும்! இந்திய சுதந்திரத்திற்காக போராடி உயிர்களையும் உடமைகளையும் தியாகம் செய்தது பெரும்பாலான முஸ்லிம்கள் ஆனால் இவர்கள் ஒன்றாக இருந்தால் இந்திய திராவிட நாடு இஸ்லாமிய திராவிட நாடாக மாறிவிடும் என்ற கேடுகெட்ட எண்ணத்தின் காரணமாக பசுமையான இந்திய தேசத்தை பாகிஸ்தான் இந்தியா என்று பிரித்து யார்?அந்த பார்பன rss இந்துத்துவா தீவிரவாதிகள்தான் இந்திய தேசத்தின் இறையாண்மையை எப்போதே பிரித்துவிட்டார்கள், அன்று காஷ்மீரில் இவர்கள் [rss ] தீப்பொறி திரிதான் இன்றுவரை காஷ்மீர் பள்ளத்தாக்கு பற்றி எரிகிறது..

தேச தந்தை என போற்றப்படும் மகாத்மா காந்தியை சுட்டு கொன்ற கோட்சே rss இந்துத்துவா தீவிரவாதிகள்தான் என்பது உலகறிந்த விஷயம் இவர்கள் இந்திய நாட்டின் தேசத்தந்தையை
இப்போது சுட்டுகொன்றார்களோ அப்போதே இந்தியநாட்டின் இறையாண்மை செத்துவிட்டது,

இந்தியாவின் பாரம்பரிய கிட்டத்தட்ட 700 ஆண்டுகள் பழமைவாய்ந்த சின்னமும்,இந்திய முஸ்லிம் களின் பழமைவாய்ந்த பள்ளியுமான பாபர் மஸ்ஜீத் அதே இந்துத்துவா பயங்கரவாதிகளாலும் ,,ஆளும் நயவஞ்சக காங்கிரசாலும் கூட்டு சேர்ந்து பள்ளியை உடைத்து அதே சமயம் சிறுபான்மை முஸ்லிகளின் உள்ளங்களும் சேர்த்து நொறுக்கி உடைக்கபட்டபோதே இந்தியாவின் இறையாண்மை
சாகடிக்கப்பட்டது,

ரத யாத்திரை என்ற பெயரில் இரத்த யாத்திரை நடத்தி மாற்று மத்த சகோதரர்கள் மத்தியில் இருந்த இந்தியாவின் மத நல்லிணக்கத்தையும் உடைத்து சகோதரத்துவத்தை பிரித்து வன்முறை நிகழ்த்தி பல்லாயிரகனகான மக்களின் ரத்தத்தின் மேல் யாத்திரை நடத்தி பரதேசி பார்பன ப ஜ க அத்வானியும்.அதை நாவுகளை தொங்கவிட்டு பார்த்துகொண்டிருந்த ஆளும் நயவஞ்சக காங்கிரசும் உள்ளுக்குள் பெருமூச்சும் வெளியில் வெறும் பேச்சும் காட்டிகொண்டிருந்தபோதே இந்தியாவின் இறையாண்மை செத்துவிட்டது.

கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தை தானே நிகழ்த்திவிட்டு அதை அப்படியே அப்பாவி சிறுபான்மை முஸ்லிம்கள் மீது பழிசுமத்தி அதையேகாரணம்காட்டி குஜராத்தில் பல்லாயிரக்கனக்கான முஸ்லிம்களை கொன்று குவித்து அவர்களின் பொருளாதரத்தை சூறையாடி பின்பு அப்பாவி தலித் கிருத்துவர்கள் மீது பாய்ந்து அவர்களையும் சூறையாடி அத்தனை பிணங்களின் மீதும் ஏறி அமர்ந்து பெருமூச்சுவிட்ட இந்துத்துவா தீவிரவாதிகளின் தலைவன் நரபலி மோ[கே]டி அவனுக்கு துணை கூட்டாளிகள் அத்வானி ப ஜ க rss போன்ற இந்துத்துவா தீவிரவாத அமைப்புகளும் பெருமைப்பட்டு கொண்டிருந்த போதும் வாஜ்பேய் அவன்கள் நான் எப்படி இனி மக்கள் முகத்தில் முழிப்பேன் என்ற வாய் ஜாலம் காட்டியபோதும்,இவை அனைத்தையும் வேடிக்கை என வாடிக்கை என்ற கோணத்தில் அரசியல் நடத்தும் ஆளும் நயவஞ்சக காங்கிரஸ் அரசும் கடும் கண்டனம் என்ற பெயரில் கயமைத்தனமாக கத்தியபோதே இந்தியாவின் இறையாண்மை செத்து விட்டது,

அதுமட்டுமா என்றைக்கு இந்திய அரசாங்கம் அணு ஒப்பந்தம் என்ற பெயரில் அமெரிக்காவிற்கு
அடிமைசாசனாம் எழுதி பல்வேறு இந்திய குடிமகன்களின் எதிர்ப்பையும் மீறி கையெழுத்து போட்டதோ [மன்னிக்கணும் அடிமைசாசனம் செய்ததோ] அப்போதே இந்தியாவின் இறையாண்மை செத்துபோய்விட்டது,

நாட்டில் பல்வேறு இடங்களில் நடக்கும் குண்டுவெடிப்புகள் rss என்ற இந்துத்துவா அமைப்பு தானே முன்னிருந்து நடத்திவிட்டு அதை அப்பாவி முஸ்லிம்கள் மீது திரித்து விட்டு சமூக மக்களிடையே இருக்கும் கொஞ்ச நஞ்ச சகோதரதுவதையும் எரித்து சாம்பலாக்க திரியும் ஏற்றிவிட்டுஅப்பாவி முஸ்லிம்களை சிறையில் தள்ளிவிட்டு கடைசியில் திருடனுக்கு தேள் கொட்டியதுபோல் மாறிக்கொண்டும்,அதை தட்டிகேட்க்க அதிகாரம் இருந்தும் தைரியமில்லாமல்
வக்கிலாத ஆளும் நயவஞ்சக காங்கிரஸ் அரசும் நீதி செலுத்த முடியாமல் முளித்து கொண்டிருகின்றபோதே இந்தியாவின் இறையாண்மை செத்துவிட்டது

ஒரு நாட்டின் முக்கிய பாதுகாப்பான ராணுவ ரகசியங்களையும் இராணுவ தடவாலங்களையும்
திருடி சமூக மக்களை அழிக்க காத்திருக்கும் rss போன்ற இந்துத்துவா தீவிரவாதிகளின்
செயல்பாட்டை முடக்காமல் நீதி செலுத்த துணிவில்லாமல் இதுவரை நாட்டல் நடக்கும் பல்வேறு இந்துதுவாவினரின் வெறி வன்முரையாட்டங்களையும் திருவிழாவில் வேடிக்கை பார்பதுபோல் பார்த்துக்கொண்டிருக்கிற இக்கணம் இந்தியாவின் இறையாணமி செத்துகொண்டுதான் இருக்கிறது,

இந்தியாவின் இறையாண்மை என்பது நாட்டில் மனிதன் சுதந்திரமாக வாழவும் அவன் உரிமைகள் பரிக்கபடாமலும் முடக்கபடாமலும் சரிவர பங்கிட்டு கொடுப்பதில் தான் இருக்கிறது,அத்தான் அருந்ததிராய் போன்ற சமூக போராளிகள் தங்களுடையா ஆழமான கருத்தாகவும் கோரிக்கையாகவும் சொல்கிறார்கள்,இந்த வழிமுறை இந்தியாவின் இறையாண்மைக்கு அவமானம் என்றால் மேலே சுட்டிக்காட்டிய இந்துத்துவா பயங்கரவாதிகளின் இழிசெயல் மட்டும் நாட்டின் வெகுமானமா?

காஷ்மீரில் அதிகம் வசிபவர்கள் முஸ்லிம்கள் எனவேதான் அவர்களுக்கு சுதந்திர உரிமையை கொடுக்ககூடாது அவர்கள் கொத்து கொத்தாக செத்துமடியவேண்டும் என்ற கொடூர நயவஞ்சக எண்ணத்தால் இந்த பார்பன ப ஜ க வும் நயவஞ்சக காங்கிராசும் முனைப்பாக செயல்படுகிறது
என்பது மறுக்க முடியாத நிஜம் .

இப்படி இந்தியாவின் இறையாண்மையை இவர்கள் போன்ற நாட்டை துண்டாக்கும் அரசியல் வாந்திகளும் மத வெறி பிடித்த அமைப்புகளும் எத்தனைமுறை இந்தியாவின் இறையாண்மையை சாகடித்துகொண்டிருக்கிரார்கள்?என்பது நடுநிலையான இந்திய தேசத்தின் உண்மை நலம் விரும்பிகள் அறிவார்கள்.இதையெல்லாம் மறந்து விட்டு இந்தியாவின் இறையாண்மைக்கு அவமானம் ஏற்பட்டுவிட்டது என்றால்.இறந்த பின்பு அவமானம் ஏற்பட்டால் என்ன ?வெகுமானம் கிடைத்தால் என்ன?

இதைதான் ஒரு கவிந்ஞன் பாடினான்,,,,,
உலகம் ஒரு நாடக மேடை -அதில் நாமெல்லாம் நடிகர்கள் என்று.சரிதான் இந்த உவமை சாத்ஸாத் அரசியல் வா[ந்]திகளுக்குதான் பொருந்தும் என்றால் அது மிகை ஆகாது!!

சமூக அக்கறையுடன்
சகோ;சதாம் குவைத்

0 comments:

Post a Comment