Tuesday, October 19, 2010

முரண்பாடே பொய்யின் அடையாளம் என்ற அண்ணனின் முரண்பாடுகள்

..
ஒப்பற்ற ஓரிறையின் திருப்பெயரால்...
பி.ஜே....? எடுத்ததிற்கெல்லாம் வழக்கு தொடருவேன் என வாய்ச்சாடல் விடும் அவர்... திருவிடைச்சேரி சம்பவத்தில் ததஜவிற்கு தொடர்பு இருக்கிறது என எழுதியே கொடுத்த அந்த ஊர் ஜமாஅத் மீது வழக்கு தொடர வாய்ச்சாடல் மன்னனுக்கு திராணி உள்ளாதா? என்று சவால் விட்டது இந்திய தவ்ஹீத் ஜமாஅத்.

இதற்கு பதிலளிக்க புகுந்த அண்ணனின் ஆசி பெற்ற 'பொய்யன் டிஜே' என்ற வலைப்பூவில், சகோதரர் பி.ஜெ மட்டுமல்ல எந்த ஒரு உண்மையான தவ்ஹீத்வாதியும் அல்லாஹ்வைத் தவிர எந்த ஒருவனுக்கும் பயப்படமாட்டான்.

எந்தக் காலத்திலும் எந்த ஒரு அரசுக்கோ உளவுத் துறைக்கோ பயந்து பேசிய வரலாறு தவ்ஹீத் ஜமாத்திற்கு இல்லை.

அயோக்கியர்கள் தான் அரசாங்கத்திற்கும் உளவுத் துறைக்கும் பயப்படுவார்கள் தவ்ஹீத் ஜமாத் பயப்பட்டதும் இல்லை பயப்படப் போவதுமில்லை.

திருவிடைச் சேரி விஷயமாக தவ்ஹீத் ஜமாத்தோ பி.ஜெ யோ பயப்படுகிறார்கள் என்றால் திருவிடைச் சேரி ஜமாத்தார்களே தவ்ஹீத் ஜமாத்திற்கெதிராக வழக்குப் போடலாமே !
அதை முதலில் செய்யச் சொல். என்று அண்ணன் ஜமாத்தினர் பதிலளித்திருந்தனர்.

அதாவது, திருவிடைச்சேரி ஜமாஅத்தை வழக்கு போடச்சொல் என்று இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தை நோக்கி சவால் விட்டார்கள். ஆனால் ஐயோ பாவம். வழக்கு போடசொல் என்று வாய்ச்சவடால் பேசிய அவர்களே, திருவிடைச் சேரி ஜமாஅத், அண்ணன் ஜமாஅத்தினர் மீது வழக்கு போட்டுள்ளதை ஒப்புக்கொண்டு பல்லிளிப்பதை பாருங்கள்.

திருவிடைச்சேரி ஜமாஅத்தார் புகார் கொடுத்த்தும் பொய்யனும் பொய்யாசிரியரும் அவதூறு கூறியதும் ஒன்றா? மேலும் அந்த ஊர் ஜமாஅத்தார்கள் கொடுத்த புகாரில் பீஜேயின் பெயரைக் குறிப்பிடவில்லை. மேலும் உள்ளூர் வாசிகள் சிலர் மீது தான் புகார் கொடுத்துள்ளனர் ஒட்டு மொத்த இயக்கத்தின் மீது கொடுக்கவில்லை. FIR காப்பி நம்மிடம் உள்ளது என்று அதே அண்ணனின் ஆசி பெற்ற 'பொய்யன் டிஜே' யில் எழுதியுள்ளார்கள்.

அதாவது திருவிடைச்சேரி ஜமாஅத் தங்கள் மீதுவழக்கு போட சொல் என்றவர்களே தங்கள் மீது வழக்கு போட்டிருப்பதை ஒப்புக்கொண்டுள்ளனர். அதோடு இந்த முரண்பாட்டை யாரும் கண்டுபிடித்து விடக்கூடாது என்பதற்காக, அவர்கள் வழக்கு போட்டது உண்மைதான் ஆனால், புகாரில் பீஜேயின் பெயரைக் குறிப்பிடவில்லை. மேலும் உள்ளூர் வாசிகள் சிலர் மீது தான் புகார் கொடுத்துள்ளனர் ஒட்டு மொத்த இயக்கத்தின் மீது கொடுக்கவில்லை. என்று அசடு வழிந்துள்ளார்கள்.

ஒரு கிராமத்தில் நடந்த கொலைக்காக, ஒரு மாநில தலைமை மீதும், ஒட்டு மொத்த இயக்கத்தின் மீதும் யாரேனும் வழக்கு தொடுப்பார்களா? பிரச்சினையில் நேரடி தொடர்புடைய உள்ளூர்வாசிகள் மீதுதான் வழக்கு தொடுப்பார்கள். அந்த வழக்கில் மாநிலத் தலைமையின் தூண்டுதல் உள்ளதா என்பதை காவல்துறைதான் கண்டுபிடிக்கும் என்ற சாதாரண சிந்தனை கூட அண்ணனை பின்பற்றுபவர்களிடத்தில் இல்லையே என்பதுதான் வேதனைக்குரியது.

முரண்பாடு 1 ;ஏற்கனவே எங்களை கைது செய்யமுடியுமா என்று ஒருபுறம் உதார் விட்டுவிட்டு, மறுபுறம் அண்ணன் ஜமாத்தினர் கைது செய்யப்பட்டதை ஒப்புக்கொண்டார்கள்.

முரண்பாடு 2 ; எங்கள் மீது திருவிடைச்செரி ஜமாஅத்தை வழக்கு தொடுக்க சொல் பார்க்கலாம் என உதார் விட்டுவிட்டு, இப்போது அந்த ஜமாத்தால் வழக்கு தொடுக்கப் பட்டுள்ளதை ஒப்புக்கொண்டுள்ளார்கள்.

முரண்பாடு 3 ; திருவிடைச்செரி படுகொலையை கண்டிக்காதது ஏன் என கேட்டபோது, அதை நாம் நபிவழிப்படி கண்டிக்கமாட்டோம். ஏனெனில், கொன்றவரும், கொல்லப் பட்டவரும் குற்றத்தில் சமமானவர்கள் என்று பொருத்தமில்லா ஹதீஸை சொருகி வியாக்கியானம் தந்த அண்ணன் முன்னிலையில், செங்கல் பட்டு ஷஃபா மர்வா மஹாலில் நடைபெற்ற தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில செயற்குழவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில்,
திருவிடைச் சேரியில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வன்மையாகக் கண்டிக்கின்றது என்று தீர்மானம் நிறைவேற்றி, அண்ணன் முகத்தில் 'டன் கணக்கில்' கரி பூசியதோடு, மூன்றவதாக முரன்பட்டுள்ளது.

ஆக, முரண்பாடே ஒருவன் பொய்யன் என்பதற்கு அடையாளம் என்ற அண்ணனின் கூற்றை அண்ணனும் அண்ணன் ஜமாத்தும் அவ்வப்போது காட்டியும், அண்ணனை பின்பற்றுபவர்கள் சிந்திக்க மறுப்பது ஏன் என்பதுதான் புரியாத புதிர்.
-அப்துல் முஹைமீன்.

0 comments:

Post a Comment