அதிமுகவுக்கும் - ததஜவுக்கும் என்ன வித்தியாசம்?
அண்ணனுக்கு தமிழில் பிடிக்காத ஒரே வார்த்தை “ஒற்றுமை” தலைப்போடு செய்தியும் மிக அருமை.
ததஜ சொந்தங்களுக்கு உன்மைப் புரிந்தால் சந்தோஷம். நீங்கள் சுட்டிக்காட்டியது போல், புதுதில்லி முதல் சமீபத்தில் நடந்த சந்திப்பு வரையில் ததஜ மாநிலத் தலைவர் அல்தாஃபியைக் கானோமே அது ஏன்? எதுக்குமே வராமல் 'ரப்பர் ஸ்டாம்ப்' தலைவரா அவர் ஏன் தொடர வேண்டும்?
ததஜவுக்கு என்ன பிரச்சினை வந்தாலும் அதன் தற்போதைய தலைவரை விடுத்து பீஜே ஏன் மூக்கை நுழைக்கின்றார்? அப்படியானால், ததஜவுக்கும் அதிமுகவுக்கும் என்ன வித்தியாசம்?
அங்கே ஓ.பன்னீர்செல்வம் முதல்வராக இருந்த போது வெறும் இரப்பர் ஸ்டாம்பாக இருந்தது போல் இன்றைய ததஜ தலைவரும் தொடருவது தான் தன்மானமா? இதுதான் இஸ்லாம் காட்டித்தரும் வழியா? தயவு செய்து யாருக்காவது விளக்கம் தெரிந்தால் பதில் இடவும்.
அடுத்து டெல்லி - ஒற்றுமை என்று எழுதியதைப் பார்த்ததும் மற்றொரு சந்தேகமும் எனக்கு வந்தது. அதாவது தமிழ்நாடு தனியார் ஜமாஅத்தின் (ததஜ) பைலாப்படி யாரையும் எங்கள் மேடையில் ஏற்றமாற்றோம், நாங்கள் எங்கள் பேனரில் தான் நடத்துவோம் என்று வீராவேசம் பேசுவார்கள். இருக்கட்டும்.
ஆனால், டெல்லியில் பிரதமரை சந்திக்கச் சென்ற நிகழ்ச்சியில், ததஜவின் தற்போதைய ரப்பர் ஸ்டாம்ப் தலைவர் கூட கலந்துக்கொள்ளாத போது, தமிழ் நாட்டின் மிக மிகப்பெரிய கட்சிகளில் ஒன்றான தேசியலீக் தலைவர் கோனிகா பஷீரையும் கூட அழைத்துக்கொண்டு சென்றது ஏன்? அவர் தவ்ஹீத் ஜமாஅத்தா? அல்லது பீஜே சொல்லும் நவீன தவ்ஹீத் கொள்கையைப் பின்பற்றுபவரா? ஹாரூனை அழைத்துக்கொண்டு சென்றதற்காவது ஒரு காரணம் இருக்கின்றது. இந்த பஷீர் அந்த சந்திப்பில் கலந்துக்கொண்டது ஏன்? ததஜ (தமிழ் நாடு தனியார் ஜமாஅத்தினர்) விளக்குவார்களா?
-Abdullah
0 comments:
Post a Comment