Monday, October 11, 2010

அயோத்தி பிரச்னை-அண்ணனின் அந்தர் பல்டி!


த.த.ஜ.வை தனி நபர் தற்காப்பு ஜமாஅத்தாக மாற்றி விட்ட அண்ணன் சமுதாய பிரச்சனைகளுக்காக போராடுவதை விட்டு தன்னை பற்றிய விமர்சனங்களுக்காக போராடுவதற்கும் , மக்களை பற்றி சிந்திப்பதை விடுத்து ,தன் உயிரை பற்றி மட்டுமே கவலை கொண்டு போலீஸ் பாதுகாப்பு பெறுவதற்கு போராடுவதற்கும், ஜமாத்தை தனியார் நிறுவனம் போல் நடத்தி கொண்டு இருக்கிறார் என்பதற்கு அவரது சமிபத்திய செயல்களே உதாரணம்.

குரானை எரிப்பதாக ஒரு பாதிரியார் கூறிய போது போராடாத த.த.ஜ. தனிப்பட்ட பி.ஜே.வுக்காக நக்கீரனை எதிர்த்து போராடியதும் , தற்போது பாபர் மஸ்ஜித் தீர்ப்பு குறித்து போராடாமல் வீரியமிழந்து பொதுக்கூட்டம் போட்டு பேசினால் போதும் எனும் நிலைக்கு வந்துள்ளார்.அது மட்டுமன்றி 'கடைசியாக ஒரு வாய்ப்பு வழங்கி உச்ச நீதிமன்ற தீர்ப்பு வரும் வரை பொறுத்திருக்க போகிறாராம்! அது எப்போது வரும் ? இன்னும் அரை நூற்றாண்டு கழித்தா ? பாபர் மஸ்ஜித் குறித்த தீர்ப்பு வெளி வந்தவுடன்

'இனி மேல் முஸ்லிம்கள் இது போன்ற பிரச்சனைகளில் நீதி மன்றம் சென்று முறையிடலாம் என்ற எண்ணத்தை மாற்றிக்கொள்ள வேண்டும்" நீதி மன்றம் சென்று பல ஆண்டுகள் சட்ட போராட்டம் நடத்தி கடைசியில் நம் தலையில் மண்ணை அள்ளிப்போட வேண்டுமா? 'இத்தீர்ப்பு மூலம் முஸ்லிகளின் கடைசி நம்பிக்கையும் தகர்ந்து விட்டது' 'இது போல் காவி தீர்ப்பு தான் வரும் என நான் ஏற்கனவே உணர்வில் எழுதியது தான் நடந்துள்ளது'

என்றெல்லாம் எழுதியது அவரது இணையத்தளத்தில் இருக்கும் போதே இப்படி அந்தர் பல்டி அடித்து பேசுகிறாரே!வீரியமாக போராடுவதை விட்டு விட்டு 'மீண்டும் ஒரு வாய்ப்பளித்து' மக்கள் தலையில் 'மண்ணை அள்ளி' போடுவதேன்? கடந்த காலங்களில் ஒரு சில பிரச்னைகளில் த.மு.மு.க. போராடத் தயங்கிய போது , 'ஒரு வாரியத்தோடு வீரியம் இழந்து விட்டதாகவும், நாம் மட்டுமே களத்தில் இருக்கிறோம் ' என்று பேசிய அண்ணன். இன்று போராடாமல் பின்வாங்குவதேன்? பாவம் ! தன்னையும், இயக்கத்தையும் காப்பதற்கே
போராடும் நிலையில் உள்ள அவரால் சமுதாயத்திற்கு போராட நேரமிருக்காது! உலகாதய நோக்கங்கள் மிகைத்து விட்டால் போர்க்குணம் போய் விடும் என்பதும் , அல்லாஹ்வின் அச்சம் எடுபட்டால் அனைத்திற்கும் அஞ்ச வேண்டிய நிலை வரும் என்பதும் , நாம் கடந்த கால இஸ்லாமிய வரலாறுகளில் பெரும் படிப்பினையாகும்.

களமிறங்கி போராடினால் கட்டாய திருமண பதிவு சட்டத்தில் சட்ட மன்றமும் , ஷாபானு வழக்கில் பாராளுமன்றமும் முஸ்லிம்களிடம் பணிந்த வரலாறு நம் கண் முன்னே உள்ளது ஆகையால் தயக்கம் களைந்து போராட , ஒன்று படுவோம் ! வென்று காட்டுவோம்!

0 comments:

Post a Comment