அண்ணனுக்கு தமிழில் பிடிக்காத ஒரே வார்த்தை 'ஒற்றுமை'...
தமிழில் எனக்கு பிடிக்காத ஒரே வார்த்தை 'முடியாது' என்பதுதான் என்று சிலர் சொல்லி நாம் கேள்விப்பட்டிருப்போம். ஆனால், அண்ணனுக்கு தமிழில் பிடிக்காத ஒரே வார்த்தை 'ஒற்றுமை' என்பதுதான்.
நேரடியாக இவரை சந்திக்க செல்லும் ஜோடிகள், திரும்புகையில் பிரிந்துதான் வருவார்கள் என்ற கருத்து பிரபல அரசியல் தலைவர் பற்றி உண்டு. அதுபோல் அண்ணன் பிரித்தவைகள் ஏராளம்-தாராளம்.
குர்ஆன், ஹதீஸோடு, தனது சொந்த சரக்கை கலந்து சமுதாயத்தை பிளந்தார். பிறகு பிளந்த சமுதாயத்தை 'முன்னேற்றப்' போகிறேன் என்று இயக்கங்கள் பல கண்டு, அவ்வியக்கங்கள் தனது [மனோ]இச்சைக்கு இணங்காதபோது, அவைகளையும் பிளந்தார். இப்படி 'உடைப்போபியா' நோயால் அவதிப்படும் அண்ணனுக்கு, பொதுப் பிர்ரச்சினையில் முஸ்லிம் இயக்கங்கள் ஒன்றிணைந்தால் பொறுக்குமா..?
'சந்தர்ப்பவாத கூட்டணி', தறுதலைகள் கூட்டணி' என்றெல்லாம் சகட்டு மேனிக்கு சாடுவார். ஆனால் தனக்கு கூட்டம் சேர்க்க வேண்டுமெனில், வைசியன்- சத்ரியன்- சூத்திரன் என்றெல்லாம் இந்துக்களை கூறு போட்டுவிட்டு, தான் மட்டுமே உயர்பிறவி என கூறிவிட்டு, பின்பு தனக்கு தேவையெனில், 'இந்துக்களே ஒன்றுபடுவீர்' என அழைப்பு விடுக்கும் இந்துத்துவாக்கள் பாணியில், தன்னையும், தன்னை பின்பற்றுபவர்களையும் தவிர, ஏனைய முஸ்லிம்களை தடம் புரண்டவர்கள், கப்ரு வணங்கிகள், நரகத்திற்குரிய 72 கூட்டம் என்றெல்லாம் சாடியதை சாவகாசமாக மறந்துவிட்டு, தனது மாநாட்டில் கூட்டம் காட்ட 'முஸ்லிம்களே அணி திரள்வீர்' என அன்பொழுக அழைப்பு விடுப்பார். கேட்டால் உலக கணக்கில் இவர்கள் முஸ்லிம்கள் என உதார் விடுவார். பின்பு மாநாடு முடிந்த கையோடு, முஸ்லிம்களை மறுபடியும் வசைபாட தொடங்கிவிடுவார்.
இதற்கிடையில் 19 அமைப்புகள் பெயரில், “தமிழக அரசே திருவிடைச்சேரியில் துப்பாக்கியால் சுட்டு பள்ளிவாசல் தலைவரைப் படுகொலை செய்த டிஎன்டிஜே குண்டர்களுக்கும் அவர்களை ஏவியவர்களுக்கும் கடும் தண்டனை வழங்கு” என ஒரு போஸ்டர் ஒட்டப்படுகிறது.
பொறுக்குமா பீஜேவுக்கு..? என்னது 19 அமைப்புகள் ஒன்றிணைவதா..? விட்டேனா பார் என அண்ணனின் 'உடைப்போபியா' நோய் தூண்ட, பயாஸ்கோப் முன் தோன்றினார். அதுக்கு முன்னடி ஒரு விஷயமுங்க. பிரதமர் சந்திப்பு தொடங்கி, போஸ்டர் பிரச்சினை வரைக்கும் ஆ.ஊன்னா. அண்ணனே 'தரிசனம்' தருகிறாரே! அப்ப இந்த தலைவர்னு ஒருத்தர் இருந்தாரே! அவரு எங்கங்க..?
சரி! விஷயத்திற்கு வருவோம். போஸ்டர் குறித்து பொங்கி எழுந்து போஸ் கொடுத்த அண்ணன், ''திருவிடைச்செரி படுபாதக படுகொலைக்கும் தனது இயக்கத்திற்கும் தொடர்பில்லை' என்ற வழக்கமான வாய்பாட்டை ஒப்பித்தார். ஆனால் சம்மந்தமில்லாத[!] இந்த வழக்கில் தனது இயக்கத்தவர் கைது செய்யப்பட்டிருப்பதாக பரவலாக கூறப்படுவது பற்றி வாய் திறக்கவில்லை.
மேலும், திருவிடைச்செரி படுகொலைக்கு பீஜெதான் முக்கிய கரணம் என்ற ரீதியில் ஒரு வார இதழில் கூறியிருந்த பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் மற்றும் பாக்கர் மீதுவழக்கு என முன்பு மிரட்டியவர், அதே பிரச்சினையில் ததஜ மீது குற்றம் சட்டி போஸ்டர் ஒட்டிய அமைப்புகள் மீது வழக்கு என வாய் தவறிக் கூட இந்த 'வாய்ச்சொல் வீரர்' சொல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதிலிருந்து என்ன தெரிகிறது..? குற்றச்சாட்டு தன்னை நோக்கியோ, தனது உறவினர்களை நோக்கியோ இருந்தால், வழக்கு- முற்றுகை என முழக்கமிடுவார். ஆனால் குற்றச்சாட்டு இயக்கத்தை நோக்கி என்றால் வியாக்கியனத்தோடு நிறுத்திக் கொள்வார் இதுதான் பீஜே.
அடுத்து 19 அமைப்புகள் என்ன 19 ,000 அமைப்புகள் வந்தாலும் அசைக்கமுடியாது என்கிறார். இத்தகைய இறுமாப்புடன் இருந்த எத்துணையோ இரும்பு மனிதர்கள் இருந்த இடம் தெரியாமல் போய் விட்டார்கள். இந்த நிலை இந்த அறிஞருக்கு வரவேண்டாம் என விரும்புகிறோம். அதற்கு அவர் செய்ய வேண்டியது; தலைக்கனத்தை விட்டு விலகி, தக்வாவை இணைத்துக் கொள்வதுதான்.
-அப்துல் முஹைமீன்.
0 comments:
Post a Comment