Thursday, November 18, 2010

பொய்யில் தன்னை விஞ்ச உலகில் ஆள் இல்லை என்று நிரூபித்த பீஜே

பொய்யில் தன்னை விஞ்ச உலகில் ஆள் இல்லை என்று நிரூபித்த பீஜே
மவ்லவி. இப்ராஹீம் காசிமி அவர்கள் ததஜவில் இருந்து விலகிய செய்திக்கு கள்ள வெப்சைட்டில் பதிலளித்த பீஜே, இப்ராஹீம் காசிமி மாநில பேச்சாளர் அல்ல என்று கூறியிருந்தார். உடனே நாம் ததஜவின் அதிகாரப் பூர்வ இணையதளத்தில் இருந்து ஒரு செய்தியை ஆதாரமாக காட்டி, இப்ராஹீம் காசிமி மாநிலப் பேச்சாளர்தான் என்று நிரூபித்தோம்.

இதற்கு அதே வெப்சைட்டில் பதிலளித்த பீஜே, அந்த செய்தி இணையதள செய்திப் பிரிவின் பிழையால் ஏற்பட்டது என்று சப்பைக் கட்டுக்கட்டினார். அதோடு, மாநில நிர்வாகிகளால் நியமிக்கப்பட்டால்தான் தான் அவர் மாநிலப் பேச்சாளர் என்று கூறி, அதற்கு சான்றாக, மாநிலப் பேச்சாளர் என்று தன்னை சொல்லிக்கொண்ட அப்துர்ரஹ்மான் தாவத்தி கூட 07-11-2010 வரை மாநிலப் பேச்சாளராக அங்கீகாரம் பெறவில்லை என்று புதுக்கதை விட்டார்.

அதற்கு நாம், மாநில நிர்வாகிகளால் நியமிக்கப்பட்டால்தான் தான் அவர் மாநிலப் பேச்சாளர் என்று கூறும் பீஜே, திருத்தப்பட்ட பைலாவுக்கு பின்னால் தலைமையால் நியமிக்கப்பட்டு, முறையாக அதிகாரப்பூர்வ இணையதளத்திலும், உணர்விலும் வெளியிட்ட பட்டியலை காட்டவேண்டும். அதில் இப்ராஹீம் காசிமி பெயர் இல்லை என்றும் காட்டவேண்டும். (குறிப்பு; பட்டியல் இப்போது உருவாக்கப்பட்டதாக இருக்கக்கூடாது)என்று கேட்டோம். அந்த பட்டியலை வெளியிட்டு இப்ராஹீம் காசிமி மாநிலப்பேச்சாளர் இல்லை என்று பீஜெயால் நிரூபிக்க முடியவில்லை.



மேலும், இப்போது புதிதாக சகோதரர் அப்துர்ரஹ்மான் தாவத்தி யை மாநிலப் பேச்சாளர் இல்லை என்று பீஜே கூறுகிறார். அப்படியாயின் பல ஆண்டுகளாக அவருக்கு சம்பளம் வழங்குவது எதற்காக? ஒருவரை மாநில அளவில் பிரச்சாரத்திற்கு தலைமை பயன்படுத்தி, அதற்காக அவருக்கு தலைமை மூலம் மாத ஊதியம் வழங்கப்பட்டால் அவருக்கு பெயர் என்ன? என்று கேட்டோம்.

அதற்கும் பீஜெயால் பதில் சொல்ல முடியவில்லை.

அடுத்து, மேலும், 07-11-2010 வரை மாநிலப் பேச்சாளராக அங்கீகாரம் பெறவில்லை என்று குறிப்பிடப்படும் அப்துர் ரஹ்மான் தாவத்தி, மாநிலப்பேச்சாளர் என்று இன்று நேற்றல்ல. பல ஆண்டுகளாக செய்திகளில் குறிப்பிடப்பட்டுள்ள உணர்வின் பக்கங்களை எடுத்துக்காட்டினால் பீஜேயின் நிலை என்ன? [உணர்வில் வந்தது என் கவனத்திற்கு வரவில்லை என்று பீஜே சொல்லமுடியாது. ஏனெனில் அவரது இறுதிப் பார்வைக்கு பின்தான் உணர்வு அச்சுக்கு செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது]

என்று கேட்டோம்.

இதற்கு பீஜே செய்யவேண்டியது என்ன? அப்துர்ரஹ்மான் தாவத்தியை மாநிலப் பேச்சாளர் என்று அடையாளம் காட்டும் செய்தியை உணர்விலிருந்து எடுத்துக் காட்டவேண்டும் என்று சொல்லியிருக்கவேண்டும். ஆனால் நமது கேள்வியை விட்டுவிட்டு, அடைப்புக்குறிக்குள் போட்ட விஷயத்தை மட்டும் கவனத்தில் கொண்டு அதற்கு மட்டும் அதே வெப்சைட்டில் பதிலளித்துள்ளார். அது கீழே;

''பொய்யர் கூட்டம் பொய் சொல்வதில் ஒருவரை ஒருவர் மிஞ்சப்ப்பார்க்கின்றனர். உணர்வு இதழில் சில நேரங்களில் உணர்வு நிர்வாகம் தலையங்கம் எழுதிக் கேட்டால் எழுதித் தருவதைத் தவிர உணர்வில் பீஜேக்கு எந்தப் பணியும் கிடையாது. பீஜே தலைவராக இருந்த போது தான் அவர் உணர்வின் அனைத்து கட்டுரைகளையும் பார்த்து வந்தார், இப்போது உணர்வில் வரும் அனைத்தும் பீஜேயின் பார்வைக்கு வருவது கிடையாது. முக்கியமான சந்தேகம் வந்தால் மட்டும் இதை போடலாமா என்று நிர்வாகிகள் கேட்பார்கள் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
என்று கூறியுள்ளார்.

இதிலிருந்து இதுவரை அவர் இப்ராஹீம் காசிமி மாநிலப் பேச்சாளர் இல்லை என்பதற்கு எந்த சான்றையும் வைக்கவில்லை. அப்துர்ரஹ்மான் தாவத்தி மாநிலப் பேச்சாளர் இல்லை என்பதற்கும் எந்த சான்றையும் வைக்கவில்லை என்பதை மக்கள் புரிந்துகொள்ளவேண்டும்.

சரி! இப்போது உணர்வு விஷயத்திற்கு வருவோம். தான் மாநிலத்தலைவராக இருந்த போது மட்டுமே உணர்வின் அனைத்துக் கட்டுரைகளையும் பார்த்துவந்தேன். அதற்கு பின் உணர்வில் வரும் அனைத்தும் என் பார்வைக்கு வருவதில்லை என்று கூறுகிறார்.
இதுபற்றி உணர்வின் முன்னாள் பொறுப்பாசிரியரும் ததஜவின் முன்னாள் மாநிலசெயலாலருமான சகோதரர் அபூபைசல் அவர்களிடம் கேட்டபோது,

'நான் மாநிலச்செயலாளராகவும், பீஜே நிறுவனத்தலைவராகவும்[ கவனிக்க; மாநிலத்தலைவர் அல்ல] இருந்த காலகட்டத்தில் நான் உணர்வின் பொறுப்பாசிரியராக இருந்தேன். அப்போது ஒவ்வொரு வாரமும் உணர்வின் செய்திகளை கம்போஸ் செய்து, அதை முழுமைப்படுத்தி உணர்வின் முழுச்செய்தி அடங்கிய ஒரு பிரதியை பிரின்ட் எடுத்து அதை பீஜேயின் பார்வைக்கு அனுப்புவோம்.

அவர் அதை பார்த்து திருந்தங்கள் இருந்தால் திருத்தங்கள் செய்வார். இல்லையேல் 'ரைட்' போட்டு எங்களிடம் திருப்பி அனுப்புவார். நாங்கள் அதற்கு பின்தான் அச்சுக்கு அனுப்புவோம். இந்த நிலைதான் நான் பொறுப்பாசிரியராக இருந்து வெளியான கடைசி பிரதிவரை இருந்தது.

இதற்கு சான்றாக ஒன்றை சொல்கிறேன். நான் கடைசியாக கம்போஸ் செய்த பிரதியை பீஜேயின் பார்வைக்கு அனுப்பி ஒப்புதல் பெற, அப்போது உணர்வில் பணியாற்றிய ஒரு பையன் மூலம் கொடுத்தனுப்பி பீஜேயை தேடும்போது பீஜே, கிடைக்காமல் பல இடங்களில் தேடி இறுதியாக தலைமைக்கு அருகில் இருக்கும் பெண்கள் தாஃவா சென்டரில் [பெண்கள் தாஃவா சென்டரில் ஏன் இருந்தார் என்பதை தேவைப்பட்டால் சொல்வோம் என்றார்] இருந்ததையறிந்து, அங்கு உணர்வில் இப்போதும் பணியாற்றும் மதன் மூலம் கொடுத்தனுப்பி ஒப்புதல் பெற்றுதான் அச்சுக்கு அனுப்பினோம்.

இதைஎதற்கு சொல்கிறேன் என்றால் உணர்வின் ஒவ்வொரு எழுத்தையும் பீஜே வரிக்கு வரி படித்து அதில் எழுத்துப் பிழைகளை கூட திருத்தம் செய்வார் என்பதற்காகவே என்று கூறினார் அபூபைசல்.

என்ன சகோதரர்களே! பொய் சொல்வதில் ஒருவரை ஒருவர் மிஞ்சப்பார்க்கின்றனர் என்று எங்கள் அமைப்பினரை நோக்கி குற்றம் சாட்டிய பீஜே, உணர்வு அவரின் கண்னசைவின்றி அச்சாகாது என்ற உண்மையை மறைத்ததன் மூலம் பொய்யில் தன்னை மிஞ்ச உலகில் ஆள் இல்லை என்று காட்டிவிட்டார். சகோதரர் அபூபைசலின் சாட்சியத்தை ஓணானின் சாட்சி என்று ஒதுக்கப்போகிறாரா? அல்லது ஒத்துக் கொள்ளப்போகிறாரா என்று பார்ப்போம்.

அடுத்து ஒரு பேச்சுக்கு உணர்வு அவரது பார்வைக்கு செல்வதில்லை என்றே வைத்துக் கொள்வோம். அதில் இடம் பெரும் ததஜ குறித்த செய்திகள் நம்பகமானவையா? இல்லையா? என்பதற்கும் பதிலளிக்கவேண்டும்.

தொடர்ந்தால் தொடர்வேன் இன்ஷா அல்லாஹ்.

0 comments:

Post a Comment