Monday, November 8, 2010

''பஞ்ச் பட்டிக்காட்டான்''[8 ] just4jokes.



செய்தி; ஈராக்கில் அமெரிக்கா நடத்திய ராணுவ அத்துமீறல்கள குறித்த ரகசியங்களை வெளியிட்ட 'விக்கிலீக்ஸ்' இணையதளத்தின் அதிபர், உயிருக்குப் பயந்து தங்குமிடத்தை தொடர்ந்து மாற்றிவருகிறார்.

பட்டிக்காட்டான்; அடுத்த நாட்டுல ஜனநாயகத்தை நிலைநாட்டப்போறேன்னு போர் தொடுத்த அமெரிக்காவுல, உண்மையை வெளியிடக்கூட ஜனநாயகம் இல்லைங்கிறது இப்பத்தான் தெரியுது.

அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா அறிக்கை; சிறுபான்மையினருக்கான இட ஒதுக்கீட்டைப் பொறுத்தவரையில், இதற்காக ஒரு கமிசன் அமைக்கப்பட்டதே எனது ஆட்சிக்காலத்தில்தான் என்பதை நினைவுபடுத்த விரும்புகிறேன்.

பட்டிக்காட்டான்; எனக்கு ஒரு சந்தேகம் மேடம்! நீங்க புதுசா கமிசனை அமைச்சீங்களா? அல்லது ஏற்கனவே இருந்த கமிசனை புதுப்பிச்சீங்களா?

செய்தி; விடிந்தால் திருமணம்; நள்ளிரவில் மணமகன் ஓட்டம். மாப்பிள்ளையின் தம்பி மணமகளுக்கு தாலி கட்டினார்.

பட்டிக்காட்டான்; இதுமாதிரி செய்தி இப்ப அடிக்கடி வர ஆரம்பித்துவிட்டது. இனிமே மாப்பிள்ளை பாக்கும்போதே, மாப்பிள்ளைக்கு தம்பி இருக்காரான்னு பாக்கனும்போல தெரியுதே?

செய்தி; கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏவின் கார் டயர்கள் திருட்டு.

பட்டிக்காட்டான்; ஏனைய மாநிலங்களோடு ஒப்பிடுகையில் தமிழகத்தில்தான் குற்றங்கள் குறைவாக இருக்குன்னு ஒருபக்கம் முதல்வர் பட்டியல் போடுகிறார். மறுபக்கம் எம்.எல்.ஏ காருக்கே இந்த நிலைமையான்னு யாரும் நினைக்கக்கூடாது. காருக்கு வந்தது டயரோட போச்சேன்னு தோழர்கள் ஆறுதலடையட்டும்.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேச்சு; இந்த பூமியில் எங்கோ ஒரு மூளையில் பிரபாகரன் இருக்கிறார். நாம் வாழும் காலத்திலேயே தமிழ் ஈழத்தை அவர் படைப்பார்.

பட்டிக்காட்டான்; பிரபாகரன் உயிரோடு இருக்கிறார்; மாவீரர் தினத்தில் மக்கள் முன் காட்சியளிப்பார் என்று முன்பு ஒருமுறை சொன்னீர்கள். மாவீரர் தினம்தான் வந்தது பிரபாகரனை காணவில்லை. இப்ப என்னடான்னா பூமியிலே எங்கோ ஒரு மூளையில் இருக்கிறார்ன்னு சொல்றீங்க. ஒருகாலத்துல சிறந்த 'நாடாளுமன்றவாதி' யாக இருந்த நீங்க, இப்ப சிறந்த 'நகைச்சுவை' வாதியாக மாறுனத நெனச்சா வேதனையாத்தான் இருக்கு.

செய்தி; கடந்த வருடம் தீபாவளிக்கு 220 கோடி ரூபாய்க்கு சரக்குகள்[டாஸ்மாக்] விற்பனை நடந்தது. இந்த அண்டு தீபாவளிக்கு விற்பனை இலக்கான 300 கோடியை தான்டி விற்பனை நடந்திருக்கலாம் என தெரிகிறது.

பட்டிக்காட்டான்; உடன்பிறப்பே! கழக ஆட்சியின் சாதனை மைல் கற்களில் இதுவும் ஒன்று; இதுபோன்று அம்மையாரின் ஆட்சியில் நடந்ததுண்டா? டாஸ்மாக் ஊழியர்கள் வேலைநிறுத்தம் செய்த அன்று கூட, காவலர்கள் பாதுகாப்போது கடை திறந்து, குடிமக்களின் 'தாகசாந்தி' தனித்த இந்த அரசை வீட்டிற்கு அனுப்ப நினைக்கிறார்கள். 'குடிமக்களின்' ஆதரவு கழகஅரசுக்கு என்றும் உண்டு என்பதை இந்த தீபாவளி விற்பனை உனக்கு உணர்த்தவில்லையா? என்று முதல்வர் எழுதினாலும் ஆச்சர்யப்படுவதிற்கில்லை.

--

0 comments:

Post a Comment