Tuesday, November 9, 2010

பிரதமரை சந்திக்க சமூக விரோத கும்பலுடன் கை கோர்த்த பிஜெ!



ஒப்பற்ற ஓரிறையின் திருப்பெயரால்...

''திருவிடைச்சேரியில் துப்பாக்கியால் சுட்டு பள்ளிவாசல் தலைவரை படுகொலை செய்த ததஜ குண்டர்களுக்கும், அவர்களை ஏவியவர்களுக்கும் கடும் தண்டனை வழங்கு. உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கும், காயமடைந்தவர்களுக்கும் உடனே உரிய நிவாரணம் வழங்கு''

என்ற வாசகத்துடன் 19 முஸ்லிம் அமைப்புகள் சார்பாக சென்னையில் சமீபத்தில் போஸ்டர் ஒட்டப்பட்டதையும், அதையொட்டி உடனே பயாஸ்கோப்பில் தோன்றி இந்த அமைப்புகளை அண்ணன் சாடித் தீர்த்ததையும், அவரை பின்பற்றுபவர்கள் இந்த 19 அமைப்பினரை பொய்யன் ரசாத்கலீபாவுடன் ஒப்பிட்டு புளங்காகிதம் அடைந்ததையும் நாம் அறிந்திருப்போம்.

இப்போது மேற்கண்ட அமைப்புகள் சார்பாக குமரியில் இரு இடத்தில் போஸ்டர் ஓட்டப்பட்டதாம். அதுபற்றி உணர்வு அக்டோபர் 29 -நவம்பர் 4 தேதியிட்ட இதழில் பக்கம் 18 இல் வந்துள்ள செய்தி கீழே;

''திருவிடைச்சேரியில் நடந்த துப்பாக்கிச் சூட்டிற்கும் ததஜவிற்கும் இடையில் எவ்வித சம்மந்தமும் இல்லாதிருந்தும் 19 இஸ்லாமிய இயக்கங்கள் என்ற பெயரில் சில சமூக விரோத அமைப்புகள், டி.என்.டி.ஜே.யினரை குண்டர்கள் என சித்தரித்து குமரி மாவட்டத்தில் இரு இடத்தில் போஸ்டர் ஒட்டியிருந்தனர்''

இதுதான் அந்த செய்தி. இதில் 19 அமைப்பினரை சமூக விரோத அமைப்புகள் என்று முத்திரை குத்துகிறது பிஜெ ஜமாஅத். மேற்கண்ட இந்த அமைப்புகள் செய்த சமூக விரோத செயல்களை அண்ணன் ஜமாஅத் பட்டியலிட வேண்டும்.

மேலும் இந்த அமைப்பில் இடம்பெற்றுள்ள தேசிய லீக் தலைவர் பஷீர் அஹ்மது அவர்களின் கையை பிடித்துக்கொண்டு பிரதமரையும், காங்கிரஸ் தலைவி சோனியாவையும் சந்திக்கும்போது தேசிய லீக் சமூக விரோத அமைப்பாக பிஜெ ஜமாஅத்திற்கு தெரியவில்லையா? என்ன?

பல்டி மேல் பல்டி அடிக்கும் தனிநபர் ஜமாஅத்தார்களை மக்கள் புரிந்து கொண்டால் சரி.
-அப்துல் முஹைமீன்.
» அ

0 comments:

Post a Comment