Monday, November 22, 2010

தமிழகம் முழுதும் த.த.ஜ.ஆதரவாளர்கள் ஆறாயிரத்து தொள்ளாயிரம் பேர் !


மிழகத்தில் லட்சகணக்கான மக்களை திரட்டக்கூடிய , பல்லாயிரக்கணக்கான தொண்டர்களை கொண்ட இயக்கம் என பி.ஜே. கொடுத்த பில்டப் எல்லாம் தவிடு பொடியாகி , கெட்டிக் காரனின் பொய்யும் புரட்டும் வெட்ட வெளிச்சமாகியது போல், மூடி வைத்த கையை விரித்துக்காட்டியது போல்
உளவு துறைக்கு உண்மையை போட்டு உடைத்திருக்கிறது பி.ஜே.வின் பெருநாள் முடிவு !

த,த.ஜ தொண்டர்கள், .அவர்களின் குடும்பத்தினர், ஆதரவாளர்கள் உள்பட தமிழகம் முழுதும் இவர்களின் பெருநாள் தொழுகையில் கலந்து கொண்டவர்கள் எண்ணிக்கை ஆறாயிரத்து தொள்ளாயிரம் என்ற செய்தி த.த.ஜவில், மட்டுமல்ல அரசுத்தரப்பிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது! மேலப்பாளையம் தவிர வேறெங்கும் சொல்லிக்கொள்ளும்படியாக இல்லை !

உணர்வில் ஒரு பக்கம் முழுதும் தொழுகை நடை பெறும் இடங்கள் எனக்குறிப்பிட்ட பல இடங்களில் நடை பெறவில்லை! பல்வேறு இடங்களில் தொழுகைக்கு மக்கள் வரமாட்டார்கள் என அறிந்து, ஒரு இடத்தில மக்களைக் கூட்ட முடிவெடுத்து , அதுவும் தோல்வி அடைந்தது! பல இடங்களில் எண்ணிக்கை இரண்டு இலக்கத்தை தாண்டவில்லை!

தலை நகர் சென்னையில் பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் அறிவித்ததை ரத்து செய்து , இரண்டு இடங்களில் மட்டும் வைத்தும் கூட, பி.ஜே. குத்பா நிகழ்த்தியும் கூட எண்ணிக்கை ஐநூறை தாண்டாததைக் கண்டு ,பெருநாளன்று கூட சந்தோசமின்றி த.த.ஜ, தொண்டர்கள் முகத்தில் களையிழந்து காணப்பட்டனர். முதல் நாள் தொழுத கொள்கை சகோதர்களை 'பரவாயில்லை! குத்பா கேட்க வாருங்கள்' என அழைத்தும் கூட மக்கள் வராததால் ரெம்பவும் நொந்து போய் உள்ளனர்.

மக்களின் எண்ணிக்கை மார்கத்திற்கு அளவுகோல் ஆகாது ! என சப்பைக்கட்டு கட்டுவதற்கும் இப்போது முடியாது! ஏன் எனில் 'எங்கள் ஜமாஅத் தான் பெரிய ஜமாஅத் , ஒரு எஸ்.எம்.எஸ்.சில் பத்தாயிரம் பேரை கூட்டுவோம் ! உங்களால் முடியுமா? மேலப்பாளையத்தில் பத்தாயிரம் பேர் பெருநாள் தொழுகைக்கு கூடும் ஜமாஅத் , மாநாட்டிற்கு லட்சக்கணக்கில் மக்களை கூட்டும் இயக்கம்' என சமிப காலமாக சத்தியத்திற்கு அளவுகோலாக தங்களின் நிகழ்சிகளுக்கு கூடும் கூட்டத்தையும் , அசத்தியத்திற்கு அளவு கோலாக மற்றவர்களின் நிகழ்சிகளில் கூடும கூட்டத்தையும் கூறியுள்ளார்! 'மொத்தமே பத்து பேர் கூட இல்லம்மா' நாடு பூரா சேர்த்தாலும் நானுறு பேர் தேற மாட்டாங்கம்மா! போராட்டத்திலே கலந்து கொண்டவங்க தலையை எண்ணி சொல்லிரலாம்மா ' என்றெல்லாம் ஆணவத்தில் பேசிய அண்ணனுக்கு அல்லாஹ் கொடுத்த அடி தான் பெருநாள் பின்னடைவு!

ஆனால் இதையும் தன்னை நபி [ஸல்] அவர்களைப்போல் எண்ணிக்கொண்டு மிஹ்ராஜோடும், கிப்லா மாற்றத்தோடும் ஒப்பிட்டு 'அல்லாஹ் நம்மள பில்டர் பண்ணுறான் ம்மா ' என கூறுவார்! உண்மைதான்! கரும்பு பிழியும் போது சாறேல்லாம் வெளியேறி சக்கை மட்டும் மிஞ்சுவதைப்போல் , தவ்ஹீத் வாதிகள் எல்லாம் வெளியேறி தன்னை தக்லீது செய்வரை மட்டும் அடையலாம் காண்பதற்கும், பின்னொரு காலத்தில் தான் எடுக்கும் 'முக்கிய முடிவுக்கு' தலையாட்டும் கூட்டத்தை உருவாக்குவதற்குமான பில்டர் முயற்சி தான் பி.ஜே.வின் இந்த பெருநாள் முயற்சி!

0 comments:

Post a Comment